தேவையானவை:
அவரைக்காய், கத்தரிக்காய், சீனி அவரைக்காய், பூசணிக்காய், புடலங்காய், சேனைகிழங்கு, நாட்டு வாழைக்காய்,பச்சைப் பட்டாணி, உருளைக் கிழங்கு, பீன்ஸ், கேரட், கோஸ், முருங்கைக்காய்,….இப்படி எந்த காயை வேணும்னாலும் அவியலுக்கு பயன்படுத்தலாம்.
தேங்காய் - 1/2 மூடி
பச்சமிளகாய் – 10-12
சீரகம் -1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/2 ஸ்பூன்
உப்பு– தேவையான அளவு
தயிர் -1 கப்
தேங்காய் எண்ணை – 1/4 கப்
செய்முறை:
1. காய்களைக் கழுவி, பெரிய அளவுத் துண்டுகளாக வெட்டிக்கோங்க. 2.வெட்டின காய்கள்,பச்ச பட்டாணி எல்லாத்தையும் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நீர் சேர்க்காமல் குக்கரில் வேக வெச்சிக்கோங்க. 3.தேங்காயைத் துருவி, பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து மென்மையாக அரச்சிக்கனும். 4.வாணலியில் கொஞ்சம் எண்ணையைச் சூடாக்கி, கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிச்சி வேகவச்ச காய்கறிகள், அரைத்த விழுது சேர்த்து, பச்சை வாசனை போய், கலவை நன்றாக இறுகும்வரை கிளறணும். 5.புளிப்பில்லாத கெட்டித் தயிராக எடுத்து அதையும் அவியலோட சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அடுப்பை அணைத்துவிடனும்.மீதி தேங்கா எண்ணையைச் சேர்த்து, கொத்தமல்லி தூவிப் பரிமாறனும்,அவ்வளவு தான்.

மணம் ஊரையே தூக்கும்,வாசனைய மோப்பம் பிடிச்சு யாராவது வீட்டு கதவ தட்டிடுவாங்க,நல்லா சமச்சி சாப்பீட்டுட்டு எனக்கு சொல்லுங்க சரியா..