
ஏழைகளின் பழம் என்ற உடனே ஞாபகம் வர்றது நம்ம வாழைப்பழம் தான்..அட என்ன கலர்,எத்தனை ரகங்கள்..எவ்வளவு சத்துக்கள் இருக்குதுனு தெரியுமா..வாழைப்பழம் ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததா இருந்தாலும், அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்குது. இதில் குளூக்கோஸ், ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் அடங்கி இருக்குறதால அற்புதமான உணவு.
வரலாறு:
வாழைப்பழம் முதலில் தோன்றியது ஆசியாவில். மத்திய அமெரிக்காவில் 350 வருடங்களாகத்தான் பிரபலம். அங்கிருந்து வட அமெரிக்காவிற்கு போனது . கொஞ்சம் கொஞ்சமாக வாழைப்பழத்தோட பயன்கள் , மருத்துவக் குணங்கள் எல்லாம் தெரிய ஆரம்பிக்க , இப்போ காலை உணவுல முக்கிய அம்சமாகிடுச்சி.
கி.மு 327 ல் அலெக்ஸாண்டர் இந்தியாவிற்கு படையெடுத்து வந்த போது வாழைப்பழத்தை விரும்பிச் சாப்பிட்டிருக்கிறார். திரும்பிப் போகும் போது கிரேக்க நாட்டிலும் மேலை நாடுகளிலும் அறிமுகப்படுத்தியதாகச் சொல்கிறாங்க. அரேபியர்கள் இதை அடிமை வியாபாரத்துடன் சேர்த்து விற்பனை செஞ்சாங்களாம். அடிமை வியாபாரிகள் தந்த பெயர் பனானா. அப்போ வாழைப்பழம் இப்போது போலப் பெரிதாக இருந்ததில்லை. விரல் நீளம்தான் இருக்கும். அரேபிய மொழியில் பனானா என்றால் விரல் என்று அர்த்தம். எல்லாப் பழங்களும் பழுக்கும் போது எத்திலீன் வாயுவை வெளிப்படுத்தும். வாழையில் அதிகமாக இருக்கும்.
வகைகள்:
1. இனிப்பான பழவகை 2. சமையல் செய்ய காய்வகை.
மஞ்சள், பச்சை, சிவப்பு, கறுப்பு கூட உண்டு. வாழைப்பழ வகையில் தென்னிந்தியாவை மிஞ்ச முடியாது. மலைப்பழம், ரஸ்தாளி, சிறுமலைப்பழம், பூவன், சர்க்கரை கதளி, செவ்வாழை, பச்சைப்பழம், பேயன் இப்படி நிறைய..வரலாறு தெரிஞ்சாச்சு,இப்ப போண்டா செய்ய ஆரம்பிக்கலாமா.

தேவையான பொருட்கள்:
மைதா மாவு -200 கிராம்
வாழைப்பழம் -2
சீனி -150 கிராம்
அரிசிமாவு -50 கிராம்
சோடா உப்பு- ஒரு சிட்டிகை
உப்பு -1/4 டீஸ்பூன்
ஓமம் -1/2 டீஸ்பூன்
எண்ணெய் -தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்துல மைதாவை கொட்டி அதோட உரித்து நசுக்கின வாழைப்பழம், சீனி,அரிசி மாவு,கொஞ்சம் உப்பு,ஓமம்,அரிசி மாவு எல்லாம் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொஞ்சம் கெட்டியா பிசைஞ்சுக்கனும்,
இப்ப வாணலியில எண்ணெய காயவிட்டதும் அதுல கொஞ்சம் கெட்டியா பிசைஞ்சு வெச்சிருக்கற மைதா கலவையில கொஞ்சமா எடுத்து உருட்டி எண்ணெயில போட்டு பொரிச்சி எடுத்தா அடடா என்ன வாசம் தெரியுமா..ரொம்ப சாஃப்டா இருக்கும்,பசங்க நலா சாப்பிடுவாங்க,,சாயங்காலம் பசங்க பள்ளிக்கூடம் விட்டி வந்ததும் வாழைப்பழ போண்டா கொடுத்தா நல்லா சாப்பிடுவாங்க...