செவ்வாய், 16 மார்ச், 2010

இஞ்சி வ‌ட‌க‌ம்


நான் குட்டி பொண்ணா இருக்கும்போது எங்க‌ கிராம‌த்துல‌ ஓவ‌ரா சிலுப்பிக்கிட்டு திரிய‌ற‌வுக‌ள‌ பார்த்து ஒரு க‌த‌ சொல்லுவாக‌,அது என்ன‌ தெரியுமா..

ஒரு ஊருல‌ ஒருத்தி காதுல‌ புதுசா பாம்ப‌ட‌ம் போட்டிருந்தாளாம்,,உட‌னே அத‌ போட்டுக்கிட்டு திரியும்போது யாருமே என்னான்னே கேக்க‌ல‌யாம்,,உட‌னெ ஊரு ச‌ன‌மெல்லாம் கூடுற‌ அந்த‌ ஊரு க‌டைக்குப்போயி ஏ! க‌ட‌க்கார‌ரே உங்க‌ க‌டையில‌ சுக்கு இருக்கா,இல்லியானு சுக்குனு த‌லைய‌ ஆட்டி ஆட்டி கேட்டாளாம்..இத‌ பார்த்து அங்கே புதுசா வ‌ளைய‌ல் போட்டுருந்த‌வ‌ என்ன‌ ப‌ண்ணினா தெரியுமா,இந்தா க‌ட‌க்கார‌ரே க‌டையில‌ தேங்கா இருக்கானு ரெண்டு கையையும் உருட்டி உருட்டி கேட்டாளாம்..இதை எல்லாம் பார்த்துக்கிட்டு இருந்த‌ புதுசா த‌ங்க‌ ப‌ல் க‌ட்டின‌வ‌ அட‌டா நாம‌ எப்ப‌டி ஊரு ச‌ன‌த்துக்கு ந‌ம்ம‌ த‌ங்க‌ ப‌ல்ல‌ இந்த‌ ஊரு ச‌ன‌ங்க‌ளுக்கு எப்புடி காட்டிற‌துனு ஒரே யோச‌னையா இருந்தாளாம்..அப்ப‌ தான் ஒரு யோச‌ன‌ தோனிச்சாம்..க‌ட‌க்கார‌ர் கிட்ட‌ போய்,இந்தா இஞ்சி இருக்கா இஞ்சின்னு பல்ல "ஈ"னு காட்டினாளாம்..என்ன‌ நீங்க‌ளும் சொல்லி பாக்குறீக‌ளா...ம்ம்..அவ்வ‌ள‌வு சிற‌ப்பான‌ இஞ்சியில‌ தான் உங்க‌ எல்லாருக்கும் வ‌ட‌க‌ம் செஞ்சி த‌ர‌ப்போறேன்..ஆனா சின்ன‌ வ‌ய‌சுல‌ இஞ்சி சாறுனா ஒரே ஓட்ட‌ம் தான்,,அம்மா தேடும்போது ஒழிஞ்சிக்குவேன்..

தேவையான‌ பொருட்க‌ள்:

இஞ்சி – 1/4 கிலோ
சுக்கு – 25 கிராம்
மிளகு – 25 கிராம்
திப்பிலி – 25 கிராம்
உப்பு – தேவையான‌ அள‌வு
மல்லி – 25 கிராம்
ஓமம் ‍ 25 கிராம்
கடுக்காய் ‍ 25 கிராம்
லவங்கம் ‍ 25 கிராம்
த‌யிர் 100 மில்லி

செய்முறை:

நான் மேல‌ சொல்லிருக்க‌ற‌ தேவையான‌ எல்லா பொருட்க‌ளையும் கொஞ்ச‌ம் நெய்விட்டு பொன்னிற‌மா வ‌றுத்து அதெல்லாத்தையும் த‌யிர் சேர்த்து அரைச்சிக்க‌னும்.இப்ப‌ சின்ன‌ சின்ன‌ உருண்டைக‌ளாக்கி லேசான‌ வெயில்ல‌ காய‌ வெச்சி எடுத்துக்க‌லாம்..இதை வ‌யிரு ச‌ரி இல்லாம‌ இருக்குற‌ ச‌ம‌ய‌த்துல‌ கொஞ்ச‌ம் நீத்து த‌ண்ணி குடிச்சி சாப்பிட‌லாம்,,இல்லாட்டி எண்ணெயில‌ பொறிச்செடுத்து சாத‌த்துக்கு வெச்சி சாப்பிட‌லாம்..ந‌ல்லா இருக்கும்,,சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க‌..