திங்கள், 29 மார்ச், 2010

மீன் க‌ட்லெட்




முத‌ல்ல‌ மீன் பொடிமாஸ் இப்ப‌ மீன் க‌ட்லெட்டா.. என்ன‌ கொடும‌ ச‌ர‌வ‌னா'ன் நீங்க‌ த‌லையில‌ அடிச்சுக்க‌ரீங்க‌ளா..டோன்ட் ஃபீல் யா...கூல் பேபி..க‌ட்லெட் ப‌ண்ண‌ ஆர‌ம்பிக்க‌லாமா..


தேவையான‌ பொருட்க‌ள்:


நெய் மீன் -1/4 கிலோ
உருளைக்கிழ‌ங்கு -4
முட்டை -1
ப்ரெட் -4 துண்டு
க‌ர‌ம் ம‌சாலா -1 ஸ்பூன்
மிள‌காய் தூள் -2 ஸ்பூன்
இஞ்சித்துருவ‌ல் -1 ஸ்பூன்
எலுமிச்சை -1 ஸ்பூன்
உப்பு -தேவையான‌ அள‌வு
நெய் -2 ஸ்பூன்
ம‌ல்லித்த‌ழை (ந‌ருக்கிய‌து)- ஒரு கைப்பிடி


செய்முறை:


நெய்மீனை வேக‌ வெச்சு முள் எடுத்துக்க‌னும், உருளைக்கிழ‌ங்கை தோல் உரிச்சி ந‌ல்லா ம‌சிச்சுக்க‌னும், ப்ரெட் துண்டுக‌ளா மிக்சியில‌ பொடிச்சு,மீன்+உருளைக்கிழ‌ங்கு க‌ல‌வையோட‌ சேர்த்து பிசைஞ்சிக்க‌னும்,இப்ப‌ இந்த‌ க‌ல‌வையோட‌ க‌ர‌ம் ம‌சாலா,மிள‌காய் தூள்,,இஞ்சித் துருவ‌ல்,உப்பு முட்டை,எலுமிச்சைச்சாறு,ம‌ல்லித்த‌ழை சேர்த்து பிசைஞ்சு முத‌ல் நாளே ஃப்ரிட்ஜில‌ வெச்சு,ம‌று நாள் வ‌டை மாதிரி த‌ட்டி தோசைக்க‌ல்லுல‌ நெய் விட்டு பொரிச்செடுத்தா..சூப்ப‌ருப்பூ..

ஃபிஷ் பொடிமாஸ்

இத்த‌ன‌ நாள் சைவ‌மா ச‌மைச்ச‌ பொண்ணு அசைவ‌த்துக்கு வ‌ந்துட்டாளே'னு‍ பாக்குறேளா.. என்ன‌ங்க‌ ப‌ண்ணுற‌து..ந‌ண்ப‌ர்க‌ள் சொன்னாங்க‌ அதை முடியாது'னு ம‌றுக்க‌ முடியுமா..ச‌ரி விஷ‌ய‌த்துக்கு வ‌ருவோமா..மீனை எப்ப‌டி ச‌மைச்சாலும் ந‌ல்லாத்தான் இருக்கும்.. உருளைக்கிழ‌ங்கு பொடிமாஸ் ப‌ண்ணிருப்பீங்க‌..ஆனா மீனுல‌ பொடிமாஸ் ப‌ண்ணிட‌லாமா..




தேவையான‌ பொருட்க‌ள்:


மீன் -1/2 கிலோ
மிள‌காய் தூள் -2 ஸ்பூன்
இஞ்சி+பூண்டு விழுது -1ஸ்பூன்
சின்ன‌ வெங்காய‌ம் -1/4 கிலோ
த‌க்காளி -2
எலுமிச்சை -1/2 மூடி
தேங்காய் -3 ஸ்பூன்
ம‌ஞ்ச‌ள் தூள் -2 டீஸ்பூன்
உப்பு -தேவையான‌ அளாவு
எண்ணெய் 3 டீஸ்பூன்
க‌ர‌ம் ம‌சாலா 1 ஸ்பூன்

செய்முறை:


மீனை ந‌ல்லா க‌ழுவி,ம‌ஞ்ச‌ள்,உப்பு சேர்த்து வேக‌ வெச்சு முள்ளெடுத்து உதிர்க்க‌னும். சின்ன‌ வெங்காய‌த்த‌ பொடியா ந‌றுக்கிக்க‌னும்.

வாணலியை அடுப்பில் வெச்சு எண்ணெய் சூடான‌தும் சின்ன‌ வெங்காய‌த்தை போட்டு வ‌த‌க்க‌னும்,வ‌த‌ங்க‌ ஆர‌ம்பிச்ச‌தும்,த‌க்காளி போட்டு கிள‌றி விட‌ ஆர‌ம்பிச்ச‌தும் க‌ர‌ம் ம‌சாலா,மிள‌காய் தூள் சேர்த்து ந‌ல்லா கிள‌றி விட‌னும்,இப்ப‌ இஞ்சி பூண்டு விழுது,உப்பு சேர்த்து ப‌ச்சை வாச‌னை போகுற‌ வ‌ரை வ‌த‌க்க‌னும்,அடுப்பை லேசான‌ தீயில‌ வெச்சுக்க‌னும்.

க‌டைசியா உதிர்த்து வெச்சிருக்குற‌ மீன‌ உதிரி,உதிரியா போட்டு கிள‌றி விட‌னும்,,என்ன‌ க‌ம‌ க‌ம‌ ம‌ண‌ம் வ‌ருதா,,ஆனா ஒண்ணு ப‌ரிமாரும்போது ம‌ற‌க்காம‌ எலுமிச்சை 2 சொட்டு விட்டு,தேங்காய் துருவ‌லை தூவி விட்டு சாப்பிட‌னும்,,வேணும்னா ந‌றுக்கின‌ ம‌ல்லித்த‌ழையை தூவினா க‌ல‌ர்ஃபுல்லா இருக்கும்.

குறிப்பு:
கார‌மா வேணும்னா மிள‌குத்தூள் சேர்த்துக்க‌லாம்.

மோர் குழ‌ம்பு

வெயில் ஆர‌ம்பிச்சிடுச்சி,, ம‌னுஷ‌ன் வெளியே த‌லைய‌ காட்ட‌ முடிய‌ல‌ போங்க‌.மோர்,த‌யிர்,த‌ர்பூச‌ணி,வெள்ள‌ரிக்காய் வியாபார‌ம் சூடு பிடிக்க‌ ஆர‌ம்பிச்சிடுச்சி. அத‌னால‌ ரொம்ப‌ சிம்பிளான‌,ஆனா ப‌ய‌ங்க‌ர‌ ப‌ய‌னுள்ள‌ மோர்குழ‌ம்பு தான் செய்ய‌ப்போறேன்.. ச‌ரி வாங்க‌ கிச்ச‌னுக்குள்ள‌ போக‌லாமா..பேர் தான் மோர் குழ‌ம்பே த‌விர‌ த‌யிர் ப‌ய‌ன் ப‌டுத்தினா தான் சூப்ப‌ரா இருக்கும்.



தேவையான‌ பொருட்க‌ள்:


த‌யிர் -1 க‌ப்
தேங்காய் துருவ‌ல் -1/2 க‌ப்
சீர‌க‌ம் -2 டேஸ்பூன்
ப‌ச்ச‌ மிள‌காய் -3
உப்பு -தேவையான‌ அள‌வு

கொத்த‌ம‌ல்லித்த‌ழை (ந‌றுக்கின‌து)-கொஞ்ச‌ம்

தாளிக்க‌:

எண்ணெய்- 2 ஸ்பூன்
க‌டுகு -1/2 டீஸ்பூன்
க‌ருவேப்பிலை -கொஞ்ச‌மா


செய்முறை :

தயிரை மிக்ஸியில் போட்டு ந‌ல்லா அடிச்சுக்க‌னும்.இப்ப‌ தேங்காய்,ப‌ச்ச‌ மிள‌காய், சீர‌க‌ம்,ம‌ஞ்ச‌ள் பொடி எல்லாம் சேர்த்து கொஞ்ச‌ம் ந‌ல்லாவே அரைச்சிக்க‌னும்.

வாண‌லியில‌ எண்ணெயை சூடாக்கி க‌டுகு,சீர‌க‌ம்,க‌ருவேப்பிலை சேர்த்து தாளிச்சிக்க‌னும்.
அதோட‌ அரைச்ச‌ விழுதை சேர்த்து ந‌ல்லா ப‌ச்சை வாச‌னை போகுற‌ வ‌ரை ந‌ல்லா கிள‌ர‌னும்,ஒரு க‌ப் த‌ண்ணீர் சேர்த்துக்க‌லாம்,இப்ப‌ அரைச்ச‌ விழுதும்,த‌ண்ணீரும் சேர்ந்து கொதிச்சி வ‌ரும்போது த‌யிரை சேர்க்க‌னும்,தேவையான‌ அள‌வு உப்பு சேர்த்து க‌ல‌ந்துக்க‌னும்.இப்ப‌ த‌யிர் சேர்க்குற‌ நேர‌த்துல‌ அடுப்பை சிம்'மில‌ வெச்சுக்க‌னும், க‌டைசியா ந‌றுக்கின‌ ம‌ல்லித்த‌ழையை சேர்த்தா மோர்க்குழ‌ம்பு ரெடி.

மோர் குழ‌ம்போட‌ அவிச்சு வெச்ச‌ த‌டிய‌ங்காய்,வ‌த‌க்கின‌ வெண்டைக்காய் இப்ப‌டி எந்த‌ காயை வேணும்னாலும் சேர்த்துக்க‌லாம்.