
சில பேருக்கு நல்லா "சுள்ளு"னு ரசம் சாப்பிட பிடிக்கும்,,நானும் அப்படித்தான்..ஏன்னா ரசம் சாப்பிட்டா நல்லா ஜீரணமாகும்னு எங்க ஆச்சி சொல்லுவாங்க..இப்ப நாம மிளகு ரசம் செய்யப்போறோம்..
அரைக்க
வத்தல் 3
மல்லி 1 ஸ்பூன்
சீரகம் சிறிது
மிளகு 10
பூண்டு சிறியது 1
காயப்பொடி 1 சிட்டிகை
புளி எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் 1 சிட்டிகை
தாளிக்க
எண்ணெய் 2 ஸ்பூன்
கடுகு 1 சிட்டிகை
வத்தல் 2
மல்லித்தழை ஒரு கைப்பிடி
செய்முறை
வத்தல்,சீரகம்,வத்தல்,பூண்டு,மிளகு,காயப்பொடி,எல்லாம் சேர்த்து அரச்சிக்கனும்,புளியை ஊற வெச்சிக்கனும்,இப்ப அடுப்பில் வாணலிய வெச்சு சமையல் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதுல கடுகு,வத்தல் சேர்த்து தாளிச்சதும் அதுல அரைத்த மசாலா சேர்த்து நல்லா வதக்கனும்,இப்ப ரெண்டா நறுக்கின தக்காளி சேர்த்து லேசா வதக்கனும்,இப்ப மஞ்சள் தூள் சேர்த்ததும் பச்ச வாசனை போனதும் புளித்தண்ணீர்,உப்பு சேர்த்து கொதிக்க ஆரம்பிச்சதும் நறுக்கின மல்லித்தழை சேர்த்து இறக்கினா அடடா என்ன மணம் ..