உருளைக்கிழங்குன்னு சொன்னாலே சில பேர் எங்கே எங்கேனு கேப்பாங்க.அந்த அளவுக்கு உருளை மேல பல பேருக்கு பிரியம்..எனக்கு கூட உருளைக்கிழங்கு வருவல்,உருளைக்கிழங்கு தொக்கு,உருளை பிரட்டல் இதெல்லாம் ரொம்ப பிடிக்கும்,,அப்புறம் கிராமத்துல எங்கம்மா நாட்டுக்கோழி குழம்போட இந்த உருளைக்கிழங்க கொஞ்சம் பெரிய துண்டா வெட்டி போட்டு மணக்க மணக்க குழம்பு வெப்பாக..அடேங்கப்பா என்ன மணாம்,என்ன ருசி..அப்பா...நினச்சாலே நாக்குல எச்சில் ஊறுதுப்பா,,அதோட நான் வெக்குற இந்த உருளைக்கிழங்கு பிரட்டலும்,கூடவே வெக்கிற சாம்பாரும் என் தம்பிக்கு ரொம்ப பிடிக்கும்,,அதனால தான் இந்த உருளைக்கிழங்கு,பிரட்டலும்,வறுவலும் எப்படி பண்ணனும்னு சொல்லப்போறேன்,என் அலுவலகத்துல இதுக்கு ஒரு கும்பலே இருக்கு தெரியுமா..சரி,விசயத்துக்கு வருவோமா..
தேவையானவை:
உருளைக்கிழங்கு 1/4 கிலோ
வத்தல் பொடி 25 கிராம்
மல்லிப்பொடி 1 ஸ்பூன் (தேவையானா பயன்படுத்திக்கலாம்)
உப்பு தேவைக்கு
ரீஃபைன்ட் ஆயில் 100 மில்லி
எலுமிச்சை 1/2 மூடி
தயிர் 1 ஸ்பூன்
கரம் மசாலா அல்லது சிக்கன் மசாலா வாசனைக்கு
செய்முறை:
முதல்ல உருளைக்கிழங்கை நல்லா கழுவி தோல லேசா சீவி குட்டி குட்டியா நறுக்கி சூடான தண்ணீருல போட்டு வடி கட்டி எடுத்து வெச்சுக்கனும்.இப்ப உருளக்கிழங்கோட வத்தல் பொடி,மல்லிப்பொடி,உப்பு,தயிர்,எலுமிச்ச சாறு கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து நல்லா பிசஞ்சி கொஞ்ச நேரம் ஊற வெக்கனும்,,குறைஞ்சது ஒரு 15 நிமிசம் எடுத்துக்க்லாம்,,ஏன்னா ஊறுனா தான் உருளைக்கிழங்கு பொறிக்கும் போது மசாலா உதிர்ந்து போகாம இருக்கும்,
அடுப்பை சிம் ல வெச்சிட்டு வாணாலியில எண்ணைய காய வெக்கனும்,நல்லா காய்ஞ்சதும் உருளைக்கிழங்க போட்டு ஒரு வாணலிய மூடி வெச்சிடனும்,ஏன்னா அப்ப தான் சீக்கிரமா வேகும்,கொஞ்ச நேரத்துல பிரட்டி விட்டிட்டு கொஞ்ச நேரத்துல எடுத்து பரிமாரலாம்.அதுவும் தயிர் சாதத்தோட வெச்சி சாப்பிட்டா ஆகா..செம,செம ராசா.செஞ்சி பாருங்கப்பு..