வெள்ளி, 23 ஏப்ரல், 2010

காலிஃப்ள‌வ‌ர் ப‌க்கோடா


காளிஃப்ள‌வ‌ர் பார்க்க‌ எவ்வ‌ள‌வு அழ‌கா இருக்கும் தெரியுமா..அதுவும் அதுலேயே ப‌க்கோடா எப்ப‌டி இருக்கும்,நினைச்சாலே நாக்கில‌ எச்சில் ஊறுதா..

காளிஃப்ள‌வ‌ரோட‌ வ‌ர‌லாறு என்ன‌ன்னு பாக்க‌லாமா:

முதல்ல‌ ஆசியாவில் பயிரிடப்பட்ட காலிஃபிளவர் பிற‌கு இத்தாலியில மட்டுமே
அதிகமாக பயிரிடப்பட்டது. 16-ம் நூற்றாண்டில பிரான்சில் அறிமுகமான‌து. அங்கிருந்து
ஐரோப்பாவுக்கும் வட அமெரிக்காவுக்கும் அறிமுக‌ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து. இது ஒரு குளிர்பிரதேச காய்கறி .வட இந்தியாவிலே குளிர்காலங்கள்ள‌ ஏராளமா கிடைக்கும். ஊட்டி,கொடைக்கான‌ல் ப‌குதியில‌ அதிக‌மா ப‌யிரிட‌ப்ப‌டுது. தென்னிந்தியாவில் அந்தக் காலத்தில் இது பற்றி எதுவுமே தெரியாததால காலிஃப்ள‌வ‌ருக்கு தமிழிலே பெயர் இல்லை.



காலிஃப்ள‌வ‌ர் காய்கறி வகைன்னாலும் சாப்பிடக்கூடிய பூ. மூலிகை இனத்தைச் சேர்ந்தது.
முட்டைக்கோஸும் காலிஃபிளவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவ‌ங்க‌.

எப்ப‌டி இருக்கும் தெரியுமா:

நடுத்தண்டைச் சுற்றி அடர்த்தியா அடுக்கடுக்கா வெள்ளை நிற குட்டி, குட்டி பூக்கள் இருக்க‌ற‌ ஒரு பெரிய பூ.மேலிருந்து பார்த்தா வெள்ளையா இருக்கும். இந்த வெள்ளைப்பகுதியை ஒட்டி
நெருக்கமா பச்சை இலைப்பகுதி படர்ந்து இருக்கும், இதனோட‌ முக்கிய வேலை,
வெள்ளைப்பூவை சூரியனிடமிருந்து காப்பாற்றுகிற‌து தான் .வெயில் பட்டு பூக்கள் குளோரோஃபிலை உற்பத்தி செய்யாமல் தடுக்குது . சிலசமயம் இந்த வெள்ளைப் பூக்கள் இலையை விட்டு வெளியே தலை நீட்ட ஆரம்பிச்சா, விவசாயிகள் இந்த இலையினால பூவோட‌ தலைக்கு மேல சேர்த்துக் கட்டிடுவாங்க‌ . அதிக வெயில் பட்டால் பூவோட‌ வெள்ளை நிறம் மாறி, ஒருவித கெட்ட வாசனையும் வரும்.

வகைகள்:




சாதாரணமா வெள்ளயாவோ, இளம் மஞ்சளாகவோ இருக்கும். ஆனால் வயலட்
கலர் காலிஃபிளவர் பார்த்திருக்கிறீங்களா? 1980கள்ள‌ யதேச்சையா காலிஃபிளவர் பயிர்களுக்கு
நடுவிலே, ஒரு வயலட் பூ முளைக்கவே பரிசோதனைக்கூடத்துக்கு கொண்டு போய் சீராக்கி
நாற்றுகளைத் தயாரிச்சு வெளியிட்டாங்க‌. இதே போல ஊதா கலர் காலிஃபிளவரும்
கண்டுபிடிச்சாங்க‌.

எப்ப‌டி ந‌ல்ல‌ காலிஃப்ள‌வ‌ர் பூவை தேர்ந்தெடுக்க‌ற‌துனு தெரியுமா:

நல்ல வெள்ளை நிறத்தில் அதை ஒட்டியுள்ள இலை பசுமையாக இருக்கனும்.
பூவின் அளவு பெரிதாகவோ சிறியதாகவோ இருக்கலாம் . சில ச‌ம‌ய‌ம் சின்ன‌ பூக்களுக்கு
இடையில இலைகள் வளரும் . இதனால எந்தக் கெடுதலும் இல்லை. இலையை நீக்கிவிட்டு
உபயோகிக்கலாம். தண்டு நடுவிலோ, பூக்களுக்கு இடையிலோ பெரிய பச்சைப் புழு இருக்கும்.
மொட்டிலேயே உள்ளே போய் சத்தை சாப்பிட்டு வளரும். பார்க்க சட்டுன்னு தெரியாது.
கூர்ந்து பார்த்தா புழு இருக்கும் இடத்தைச் சுற்றி கறுப்பு புள்ளிகள் இருக்கும். அப்படியே வாங்கி
வந்துட்ட‌லும் புழு இருக்கும் பகுதியை எடுத்துட்டு உபயோகிக்கலாம். சமைக்க‌ற‌துக்கு முன்னால‌ பூவை நறுக்கி கொதிக்க‌ற‌ த‌ண்ணீருல‌ போட்டு எடுக்கனும். புழுக்கள் இறந்து வெளியே வந்துவிடும். பூக்கள் மஞ்சளா இருந்தா பழசுனு அர்த்த‌ம்.



காலிஃப்ள‌வ‌ர்ல‌ ஒரு வித தாவர அமிலம் இருக்கு. வேகும்போது கந்தகக் கலவையாக மாறிவாசனை வரும். ரொம்ப‌ நேரம் வேக வெச்சா வாசனை அதிகமாகிடும். சத்தும் வீணாகும்.அலுமினியம், இரும்பு பாத்திரத்தில் வேக வைக்கக்கூடாது. இதிலுள்ள கந்தகக் கலவை அலுமினியத்துடன் சேர்ந்தால் பூ மஞ்சளாகிடும். இரும்பு இதை பிரவுன் கலராக்கிடும். தரைக்கு ரொம்ப‌ ப‌க்க‌த்துல‌ விளைய‌ர‌தால‌ பூச்சிகள், கிருமிகள் இருக்கும். நல்லா கழுவி உபயோகிக்கனும்.சமைக்குற‌துக்கு முன்னாடி நல்லாக் கழுவி மேலே இருக்க‌ற‌ இலைகளை நீக்கி, அடித்தண்டை வெட்டி எடுக்கனும். பூ இருக்கும் தண்டை தூக்கி எறியாம‌ அதையும் சேர்த்து சமைக்கலாம். பூக்கள் சேருற‌ நடுத்தண்டை தூக்கி போட்டுடலாம். பூ வேகும்போது வற்ர‌ கந்தக வாசனை சிலருக்குபிடிக்காது.



ஹோட்டல்ல‌ வாசனை தெரியாமல் இருக்க காலிஃப்ள‌வ‌ரை பாலில் வேக வைப்பாங்க‌. வடஇந்தியாவில் காலிஃபிளவர், உருளைக் கிழங்கு, வெங்காயம் சேர்த்து செய்யப்படுற‌ ஆலு கோபி மிகப்பிரபலமான டிஷ். காலிஃபிளவரின் மிக முக்கிய சத்தான ஃபோலாசின் சமைக்கும்போதுவெளியேறிவிடும். அதனால் வேகவைத்த நீரை கீழே கொட்டாமல் சூப், ரசம், குழம்பு எதிலாவது சேர்த்தா சத்து வீணாகாது. மேலை நாடுகளில் காலிஃபிளவரில் சீஸ் அல்லது வெண்ணெய் தடவி சாப்பிடுவாங்க‌.



காலிஃப்ளாவ‌ருல‌ விட்டமின் மிக அதிகம். ஒரு நாளைக்கு தேவைப்படுற‌ அளவைவிட 20%
அதிகமாக இருக்கு. ஒரு கப் நறுக்கிய பூவில் கலோரி 24, புரதம் 2 கிராம், மாவுச்சத்து 5 கிராம்,கொலஸ்டிரால் , விட்டமின் சி 72 மில்லி கிராம் , ஃபோலாசின் 66 மைக்ரோ கிராம்,
பொட்டாசியம் 355 மில்லி கிராம்.

காலிஃப்ள‌வ‌ருக்கு புற்று நோயை தடுக்குற‌ சக்தி இருக்கு . பூ வேகும்போது Isothiocyan ங்குற‌ ரசாயனம் வெளிவரும். இது உட‌லுக்குள்ள‌ போய் உடல் தானாக உற்பத்தி
செய்யும் phas ங்குற‌ புற்றுநோய் தடுக்கும் பொருளை அதிகமாக சுரக்கச் செய்யுது.

காலிஃப்ள‌வ‌ர் ப‌க்கோடா:



தேவையான‌ பொருட்க‌ள்:

காலிஃப்ளவர் - ஒன்று
கடலைமாவு - ஒரு கப்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
இஞ்சி,பூண்டு த‌லா 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை ஸ்பூன்
ம‌ஞ்ச‌ள் தூள் 1 சிட்டிகை
உப்பு - ஒன்றரை டீஸ்பூன்
கேச‌ரிப்பவுட‌ர் 1 ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க


செய்முறை:

காலிஃப்ள‌வ‌ரை பொடியா ந‌றுக்கி அதோட‌ ம‌ஞ்ச‌ள் தூள்,உப்பு சேர்த்து அவிச்சுக்க‌னும்.பிற‌கு க‌ட‌லை மாவு,இங்சி,பூண்டு பேஸ்ட்,க‌றிவேப்பிலை கொஞ்ச‌ம் மிள‌காய் தூள் சேர்த்து லேசா ம‌சிக்க‌னும்,அதோட‌ க‌ல‌ருக்காக‌ கேச‌ரிப்ப‌வுட‌ர் சேர்த்தா பார்க்க‌ ந‌ல்லா இருக்கும்.இப்ப‌ வாணாலியை சூடாக்கி அடுப்பை சிம்மில‌ வெச்சுகாலிஃப்ள‌வ‌ர் க‌ல‌வையை கொஞ்ச‌ம் கொஞ்ச‌மா பொரிச்செடுத்தா காளிஃப்ள‌வ‌ர் ப‌க்கோடா ரெடி..