
எத்தனை வகையான சாப்பாட சாப்பிட்டாலும் தயிர் சாதத்துக்கு ஈடு இணை கிடையவே கிடையாது,,
அதுவும் கிராமத்துல எங வீட்டு பசுவோட பாலுல இருந்து எடுத்த கெட்டியான தயிரை கொண்டு அம்மா தயிர் சாதம் செய்வாங்களே பாருங்க..அடடா..அமிர்தம் .ம்..அதெல்லாம் ஒரு காலம் போங்க.
சரி இப்ப தயிர் சாதம் வீட்டுல சும்மா ஜில்லு'னு தயிர் சாதம் பண்ணலாம்னு பாக்கலாமா..

தேவையான பொருட்கள்:
அரிசி -1கப்
பால்- 1 கப்
தயிர் -1/2 கப்
கேரட்,ஆப்பிள்,மாங்காய்,வெள்ளரிக்காய்,திராட்சை,மாதுளை கலவை -1/2 கப்
உப்பு -தேவையான அளாவு
தாளிக்க:
எண்ணெய் 2 ஸ்பூன்
கடுகு,உளுத்தம் பருப்பு- 1/4 கப்
கடலை பருப்பு -1 ஸ்பூன்
இஞ்சித்துறுவல் -1 ஸ்பூன்
பச்ச மிளகாய்- 2
செய்முறை:
அரிசியை முதல்ல கழைஞ்சு 1 கப் பால்,ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து குழைய வேக வெச்சு அதை இறக்கி சாதத்தை மசிச்சுக்கனும்,நல்ல சாதம் ஆறினதுக்கப்புறமா உப்பும்,தயிரும் சேர்த்து கலந்துக்கனும்.
வாணலியை காய வெச்சு எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கருவேப்பிலை சேர்த்து தாளிச்சதும் இஞ்சித்துருவல்,நருக்கினபச்ச மிளகாய் சேர்த்து லேசா வதக்கி அதை சாதத்துல கலந்துக்கனும், இப்ப கேரட்,ஆப்பிள், மாங்காய், வெள்ளரிக்காய்,திராட்சை ,மாதுளை கலவையை கலந்தா அழகான டேஸ்டான தயிர் சாதம் ரெடி.மேலோட்டமா மல்லித்தழையை தூவினா இன்னும் அழகு தான்,

சிலர் குழந்தைகளுக்கு சளி பிடிக்குங்குறதுனால தயிர் சாதம் கொடுக்க மாட்டாங்க.
ஆனா இப்ப கோடை காலம் என்பதால குழந்தைகளுக்கு தயிர் சாதம் ஊட்டலாம்.அதுக்கு என்ன செய்யனும்னா,தயிரை வாணலியில் ஊற்றி அடுப்பில் வெச்சு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து லேசாக கொதிச்சதும் அதை சாதத்துல பிசைஞ்சு ஊட்டலாம் . சில சமயங்கள்ள
வீட்டிலேயே தயாரிச்ச தயிரில் கொஞ்சமா சர்க்கரைப் போட்டு ஒரு கிண்ணத்திலே ஊற்றி கொடுத்தா கொஞ்சம் கொஞ்சமாக குட்டி பிள்ளைங்க சாப்பிடுவாங்க.