தேவையானவை:
ஆட்டுக்கால்- 2
கேரட் -1
பீன்ஸ் -4
கோஸ் இலை- 1கைப்பிடி
தக்காளி- 2
இஞ்சி+பூண்டு விழுது- 1 ஸ்பூன்
பல்லாரி -1
கருவேப்பிலை- கொஞ்சம்
மிளகுத்தூள் -11/2 ஸ்பூன்
சீரகத்தூள் -1 ஸ்பூன்
மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன்
பட்டை -2
கிராம்பு -2
ஏலக்காய்- 2
முந்திரி,பாதாம்- 10
தேங்காய் துறுவல்- 1/2 கப்
செய்முறை :
கேரட்,பீன்ஸ்,கோஸ் இலையை நறுக்கிக்கனும்.ஆட்டுக்காலை நால்ல சுத்தம் செஞ்சி வெட்டி எடுத்து குக்கர்ல 3 விசில் வெச்சு வேக வைக்கனும்.அப்புறமா நறுக்கின காய்களோட, பல்லாரி,தக்காளி கொஞ்சம் உப்பு சேர்த்து 1 விசில் வெச்சு நல்லா வேக வைக்கனும்.. பாதாம் ,முந்திரி ,மிளகுத்தூள் ,மஞ்சள் தூள் ,சீரகத்தூள் ,உப்பு ,தேங்காய் சேர்த்து நல்லா அரைச்சு வெச்சுக்கனும்.
இப்ப லேசான தீயில குக்கர வெச்சு அதுல எண்ணெய் விட்டு காய்ஞ்சதும் கருவேப்பிலை இஞ்சி+பூண்டு விழுது சேர்த்து நல்லா வதக்கனும்,இப்ப அத்தோட பட்டை,கிராம்பு,ஏலக்காய் சேர்த்து நல்லா கிளரனும்.பச்சை வாசம் போனதும் அரைச்சு வெச்சிருக்கர கலவைய(பாதாம்,முந்திரி,மிளகுத்தூள்,மஞ்சள் தூள்,சீரகத்தூள்,உப்பு,தேங்காய்)எல்லாம் சேர்த்து நல்லா கிளரனும்,இப்ப வேக வெச்சு எடுத்த ஆட்டுக்கால்,காய் கலவைய சேர்த்துக்கனும்,வேணும்னா கொஞ்சம் தன்ணி கலந்துக்கலாம்,தள தளன்னு கொதிச்சி வர்ர நேரத்துல இறக்கி வெச்சுக்கனும்,இது தான் ஆட்டுக்கால் பாயா.கடைசியா நறுக்கின மல்லித்தழை சேர்த்து இறக்கி சுட சுட இடியாப்பத்துல ஊத்தி மூக்கு முட்ட சாப்பிடலாம்..