
நிறைய பேருக்கு கருப்பாக இருக்கிறோம்ங்குற ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிக் கொள்கிறாங்க. ஏதோ வெள்ளையாக இருக்கறவங்க மட்டும்தான் அழகாக இருக்கிறாங்கன்னும் , கருப்புன்னா வெறுப்பதற்கான நிறம் அப்படினும் நினைக்கிறாங்க.
இது ரொம்ப தப்பு. இதை நான் சொல்லல மற்றவர்களை அழகாக்குற அழகுக் கலை நிபுணர்கள் சொல்றாங்காதனால நாம கருப்பாக இருக்கிறோம்னு கவலைப்படுறவங்க இதை கண்டிப்பா படிச்சே ஆகனும்

பொதுவாக கருப்பாக இருக்குறவங்க கருப்பாக இருக்கறதை நினைச்சு கவலைப்படுவாங்க. ஆனால் கருப்பான தோலைக் கொண்டவங்க உண்மையில் சந்தோஷப்படத்தான் செய்யனும் ஏன்னா, நல்ல ஆரோக்கியமான தோல் கருப்புத் தோல்தான்.
கருப்பா இருந்தாலும் கலையாக இருக்கறவங்க பலர் உண்டு. வெறும் வெள்ளை தோல் மட்டும் இருந்துட்டா அழகாக இருக்க மாட்டாங்க. அதோட அலங்காரங்கள் செய்றதுலயும், நகைகளுக்கும் கருப்பானவர்களுக்குத் தான் அதிகமாக பொருந்தும்.
கருப்பாக இருக்குற தோலுக்கு நல்ல தன்மை இருக்குதாம். பொதுவா கருப்பு நிறம் கொண்டவங்களுக்கு அதிகமாக முகப்பருவும் வர்ரதில்ல. கருப்பாக இருக்குறவங்களோட முகம் முழுக்க முகப்பருவாக இருக்கறதை பொதுவாக பாத்திருக்கவே முடியாது. வெள்ளையா இருக்கற பலரும், முகம் முழுதும் முகப்பரு வந்து அவதிப்படுறதப் பார்த்திருப்போம்.
கருப்பா இருக்கறவங்க, அவங்களோட நிறத்துக்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய, உடல் வாகுக்கு பொருந்துற ஆடைகளையும், அலங்காரத்தையும் செஞ்சுகிட்டா அவங்கள விட அழகானவங்க வேறு யாரும் இருக்க முடியாது.
வெளிர் நிறத்திலான ஆடைகள், லேசான அலங்காரம் இதெல்லாம் கருப்பானவங்கள அழகாகாக் காட்டும். அதோட, பொன் சிரிப்பும், பொன் நகையும் கூட அவங்களுக்குத்தான் இன்னும் அழகாக இருக்கும். வெள்ளைக் கல் பதிச்ச நகைகள், தங்க நகைகள் இதெல்லாம் வெள்ளையானவங்கள விட, கருப்பானவங்களுக்குத்தான் எடுப்பா இருக்கும். இது எல்லா சனங்களும் அறிஞ்சது தான்.

அதேப்போல, வெள்ளையானவங்களோட முகத்துல சிறு மறுவோ, கட்டி இப்டி எது வந்தாலும் அப்பட்டமாக வெளியேத் தெரியும். ஆனா கருப்பானவங்களுக்கு அந்த பிரச்சினை இருக்குறதில்ல. அவங்கள எப்பவும் அழகாக வைக்க இது ஒண்ணே போதுமானது.
சில பெண்கள், அடுத்த மாசம் எனக்குத் கல்யாணாம், நான் கருப்பா இருக்கறேன், ஏதாவது செஞ்சு என்னை வெள்ளையாக்குங்கனு அழகு நிலையம் போய் நிப்பாங்க. இது மாதிரியானவங்க ஒண்ண புரிஞ்சுக்கனும். பிறக்கும் போதே கருப்பானவங்க, ஒரு சில முறைகளால லேசாக வெள்ளை ஆகலாம். ஆனால் அதுவும் அதிகம் எதிர்பார்க்க முடியாது. முகத்தை அழகாக வெச்சுக்க பல சிகிச்சைகள் இருக்கு. திடீர்னு வெள்ளையாக்க எந்த முறையும் இல்லை. அதனால உடனடியா வெள்ளையாக்கனும்னு எந்த அழகுக் கலை நிபுணரையும் நிர்பந்திக்க கூடாது. அதனால ஏதாவது பக்க விளைவுகள் உண்டாக வாய்ப்பு இருக்கு,தெரியாம செஞ்சா அது பிரச்சினையாக மாறிடும்.
அதனால நமக்கிருக்கும் அழக இன்னும் அழகாக்குற வேலைய மட்டும் அழகுக் கலை நிபுணர்கிட்ட சொல்றது நல்லது நல்லது.

சில எளிமையான முறைகளால நம்மோட தோலை பாதுகாக்கலாம். நம்ம சருமத்துக்கும் உணவு தேவைப்படுது. அது ஆரோக்கியமான உணவா இருக்கனும். அதாவது, வாரத்தில ஒரு நாளாவது சருமத்துக்கு முல்தானி மெட்டி, சந்தனம், தயிர், மஞ்சள், அரிசி மாவு, தக்காளிச் சாறு, எலுமிச்சை சாறு இதுல எதையாவது ஒண்ண தடவி ஊற விட்டு கழுவி வந்தால் இயற்கையான முறையில அதே சமயம் எளிய முறையில உங்க அழக பாதுகாக்கலாம்.
கருப்பான சருமம்னு கவலப்படாம, ஆரோக்கியமான சருமம்னு சந்தோஷப்படுங்க. அதுதான் உண்மை.