
கோழிக்குழம்பு அப்படி சொன்னதும் நாக்குல நிறைய பேருக்கு எச்சில் ஊறும் இல்லையா..ஏன்னா அம்புட்டு ருசி இல்லையா..கோழிக்குழம்பு சாப்பிட்டு சலிச்சு போனவங்களுக்காக ஒரு புது வகையான சிக்கன் குருமா..சமையலுக்கு போகலாமா..
தேவையான பொருட்கள்:
கோழிக்கறி -1 கிலோ
வெங்காயம் -4
தக்காளி -4
தேங்காய் துருவல் -11/2 கப்
முந்திரிப்பருப்பு -50 கிராம்
எலுமிச்சம்பழம் -1
இஞ்சி+பூன்டு விழுது -1ஸ்பூன்
மல்லித்தூள் -2 ஸ்பூன்
வத்தல் தூள் -2 ஸ்பூன்
மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்
பச்ச மிளகாய் -4
பட்டை -1
லவங்கம்- 2
ஏலக்காய் -3
சோம்பு -1 தேக்கரண்டி
கருவேப்பிலை- கொஞ்சம்
மல்லித்தழை -1 கைப்பிடி
உப்பு -தேவையான அளவு
செய்முறை:
கோழிக்கறியை துண்டு துண்டா நருக்கி சுத்தப்படுத்தி வெச்சுக்கனும், தேங்காய் துருவல், மிளகாய்,சோம்பு எல்லாத்தையும் நலா அரைச்சுக்கனும்.
வாணாலியில எண்ணெய் விட்டு காய்ஞ்சதும் பட்டை,லவங்கம்,ஏலக்காயை போட்டு பொரிஞ்சதும் நருக்குன வெங்காயத்தை போட்டு நல்லா பொன்னிறமா வதக்கனும்.இப்ப நறுக்குன பச்ச மிளகாய்,தக்காளி,இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து பச்ச வாசனை போகுற வரைக்கும் நல்லா வதக்கனும்,வதங்கினதுக்கப்புறமா வத்தல் தூள்,மல்லித்தூள், மஞ்சள் பொடியையும் சேர்த்து கிளறி சுத்தம் பண்ணி வெச்சிருக்கற கோழிக்கறியை போட்டு லேசான தீயில கிளறிக்கிட்டே இருக்கனும்,
கறி நல்லா வெந்ததும் அரைச்ச தேங்காய் கலவை,முந்திரி விழுது கருவேப்பிலை சேர்த்து இன்னும் கொஞ்ச நேரம் வதக்கனும்,அப்புறமா கொஞ்சம் தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு மூடி கொதிக்க வைக்கனும்.
குழம்பை இறக்குற நேரத்துல எலுமிச்சம் பழத்தை பிழிஞ்சு விட்டு மல்லித்தழையை நறுக்கித் தூவனும்.இப்ப முந்திரி சிக்கன் குருமா ரெடி,,தண்ணீர் அதிகமா சேர்க்கக் கூடாது,அசைவப் பிரியர்களுக்கு செமையான சமையல்...