புதன், 31 மார்ச், 2010

பிரியாணி டிப்ஸ்


1. பிரியாணிக்கான‌ சாத‌த்தை முத‌ல்ல‌ உதிரா வ‌டிச்ச‌ பிற‌கு ம‌சாலாவோட‌ க‌ல‌க்கும்போது,சாத‌ம் கொதிக்க‌ கொதிக்க‌ இருக்க‌னும்ங்குற‌து முக்கிய‌ம்,அத‌னால‌ பிரியாணிக்கு ம‌சாலா த‌யாரிக்குற‌ ச‌ம‌ய‌த்துல‌ இன்னொரு அடுப்பில‌ சாத‌த்தை வேக‌ விட்டு முக்கால் ப‌த‌மா வ‌டிக்க‌லாம்,பாசும‌தி அரிசி சீக்கிர‌மா வெந்துடும்.



2. பிரியாணிக்கு "த‌ம்" போடும்போது பிரிய‌ணி க‌ல‌வை லேசான‌ த‌ண்ணீரோட‌ இருக்க‌னும்.த‌ண்ணீர் முழுதும் வ‌ற்றின‌ பிற‌கு த‌ம் போட்டா பிரிய‌ணி விறைச்சு போயி டேஸ்ட் கெட்டுடும்.



3. வெங்காய‌த்தை ந‌ல்ல‌ பொன்னிற‌மா வ‌த‌க்க‌ வ‌த‌க்க‌ தான் பிரியாணி நிற‌ம் ந‌ல்லா இருக்கும்,ஆனா ஃப்ரைட் ரைச்,புலாவு செய்யும்போது வெங்காய‌த்தை லேசாத்தான் வ‌த‌க்க‌னும்,அப்ப‌ தான் வெள்ளையா இருக்கும்.

4.பிரியாணிக்கு காய்க‌றி,ம‌சால‌ சேர்ந்த‌ பிற‌கு ம‌சாலா சேர்ந்த‌ தொக்கோட‌ எப்ப‌வுமே கொதிக்குற‌ த‌ண்ணீர் ஊற்றினா தான் டேஸ்டா இருக்கும்,ப‌ச்சை த‌ண்ணீர் ஊத்தினா அது நீர் கோர்த்து டேஸ்ட் மாறிப்போகும்.

5. பிரியாணி "த‌ம்" போடுற‌ முறை:

பிரியாணிக்கான‌ ம‌சாலா தொக்கோடு வெந்நீர் சேர்த்து கொதிச்ச‌ பிற‌கு அரிசி சேர்க்க‌னும்,அரிசி மேல‌ த‌ண்ணீர் நிற்காம‌ பிர‌ட்டின‌ மாதிரி சேர்ந்து வ‌ரும்போது,பாத்திர‌த்தோட‌ விளிம்புல‌ இடைவெளி இல்லாம‌ல் மூடி போட‌னும்.அந்த‌ பாத்திர‌த்துக்கு மேல‌ கொதிக்குற‌ த‌ண்ணீர் இருக்குற‌ க‌ன‌மான‌ பாத்திர‌த்தை ஐந்து நிமிஷ‌த்துக்கு வைக்க‌னும்,அடுப்பும் சிம்'மில‌ இருக்க‌னும்,இது தான் த‌ம் போடுத‌ல்..எப்புடீடீடீய்...

சிக்க‌ன் 65

என்ன‌தான் சிக்க‌னை வெச்சு அது, இதுனு ச‌மைச்சாலும் சிக்க‌ன் 65-க்கு ஈடு இணையே கிடையாது.
அட‌டா க‌ல‌ர் என்ன‌ ,டேஸ்ட் என்ன‌...ஆளாளுக்கு சும்மா சாப்பிட்டு த‌ள்ளிடுவாங்க‌ போங்க‌..
ஐ! பேரை கேட்ட‌ உட‌னே நாக்குல‌ எச்சில் ஊறுதா...அப‌ ச‌மைச்சு சுட‌ சுட‌ ப‌ரிமாருனா எப்ப‌டி இருக்கும்..பிர‌மாத‌ம் இல்லையா..





தேவையான‌ பொருட்க‌ள்:


சிக்க‌ன் (எலும்பு இல்லாதது) -1/2 கிலோ
இஞ்சி+பூண்டு விழுது -1 டீஸ்பூன்
மிள‌காய் தூள் -11/2 டீஸ்பூன் (கார‌ம் வேணும்னு நினைக்கிற‌வ‌ங்க‌ கூட‌ கொஞ்ச‌ம் சேர்த்துக்க‌லாம்)
கார்ன்ஃப்ளார் மாவு -1 டீஸ்பூன்
அரிசி மாவு -1 டீஸ்பூன்
முட்டை -1
க‌ரி ம‌சாலா அல்ல‌து சிக்க‌ன் 65 ம‌சாலா -1/4 டீஸ்பூன்
த‌யிர் -3 டீஸ்பூன்
உப்பு -தேவையான‌ அள‌வு
எண்ணெய் -தேவையான‌ அள‌வு

செய்முறை:

சிக்க‌னை ந‌ல்லா க‌ழுவி லேசா ம‌ஞ்ச‌ள் பொடி சேர்த்து ஊற‌ வெச்சு 10 நிமிஷ‌ம் க‌ழிச்சு ந‌ல்லா க‌ழுவி எடுத்துக்க‌னும். அதுக்க‌ப்புற‌மா த‌யிர், வ‌த்த‌ல் தூள், கார்ன்ஃப்ள‌ர் மாவு, அரிசி மாவு, முட்டை,க‌ர‌ம் ம‌சாலா,த‌யிர்,உப்பு சேர்த்து ந‌ல்லா பிர‌ட்டி ஒரு அரை அல்ல‌து ஒரு ம‌ணி நேர‌ம் ஊற‌ வெச்சு சூடான‌ எண்னெயில‌ பொரிச்செடுக்க‌னும், அல‌ங்க‌ரிக்க‌ வெங்காய‌த்தை வ‌ட்ட‌ வ‌ட்ட‌மா த‌ட்டுல‌ சுற்றி வைக்க‌லாம், லேசா கொத்த‌ ம‌ல்லித்தழை தூவ‌லாம். சாப்பிடும்போது எலுமிச்சையை பிழிஞ்சி விட்டுக்க‌லாம். இதை அப்ப‌டியே சாப்பிட‌லாம்.. ஆஹா!! என்ன‌ ம‌ண‌ம்.

உளுந்த‌ங்க‌ளி

ரொம்ப‌ கால‌த்துக்கு முன்னாடி வ‌ரைக்கும் இருந்த‌ ப‌ழ‌மையான‌ உணாவு இது.கிராம‌த்துல‌ பொன்னுங்க‌ வ‌ய‌சுக்கு வ‌ந்த‌ உட‌னே உளுந்த‌ங்க‌ளியை தான் கிண்டி சலிக்க‌ ச‌லிக்க‌ சாப்பிட‌ சொல்லுவாங்க‌. சாப்பிட்டு முடியாது.. ஆனா செம‌ டேஸ்ட் .
ஏன்னா இது இடுப்பு எலும்புக‌ளுக்கு ப‌ல‌ம் கொடுக்கும்,




தேவையான‌ பொருட்க‌ள்:


க‌ளி மாவு -2 க‌ப்
(அதாவ‌து
ஒரு க‌ப் முழு உளுந்து கூட‌ ஒரு க‌ப் ப‌ச்ச‌ரிசி‍'ங்குற‌ விகித‌த்துல‌ சேர்த்து மாவு திரிக்க‌னும்)
க‌ருப்ப‌ட்டி -2 க‌ப்

ந‌ல்லெண்ணெய்- தேவையான‌ அள‌வு

செய்முறை:


க‌ருப்ப‌ட்டித் தூளை ஐந்து ட‌ம்ள‌ர் த‌ண்ணீருல‌ க‌ரைச்சு வ‌டிக‌ட்டிக்க‌னும்.

வ‌டிகட்டின‌ க‌ருப்ப‌ட்டி த‌ண்ணீரோட‌ கொஞ்ச‌ கொஞ்ச‌மா தூவி க‌ட்டி இல்லாம‌ க‌ரைச்சு ஒரு பாத்திர‌த்துல‌ ஊத்த‌னும்.


அந்த‌ பாத்திர‌த்தை அடுப்பிலே வெச்சு கொஞ்ச‌ம்,கொஞ்ச‌மா ந‌ல்லெண்ணெய் ஊற்றி கிள‌ர‌ ஆர‌ம்பிக்க‌னும்,லேசான‌ தீயை ம‌ட்டுமே ப‌ய‌ன்ப‌டுத்த‌னும்.

மாவு உருண்டு ச‌ட்டியில‌ ஒட்டாத‌ ப‌தத்தில் வ‌ரும்போது இற‌க்கி , ஆறின‌ பிற‌கு கையில் ந‌ல்லெண்ணெய் தொட்டு உருட்ட‌னும், இப்ப‌ உளுந்த‌ங்க‌ளி ரெடி.. ந‌ல்லா சாப்பிடுங்க‌..ந‌ம்மூரு ருசி..

ம‌க்ரூன்

திருநெல்வேலினா அல்வா,கோவில்பட்டி'னா க‌ட‌ல‌ மிட்டாய்,தூத்துக்குடினா ஆஹா ஞாப‌க‌ம் வ‌ந்துடுச்சா ஆமாமா "ம‌க்ரூன்" தான்.அதை அதை ப‌ற்றி தான் ச‌மைக்க‌ போறோம். வாங்கோ..



தேவையான் பொருட்க‌ள்:

முந்திரிப்ப‌ருப்பு -100 கிராம்
சீனி(சுக‌ர்) -100 கிராம்
முட்டை -3

செய்முறை:


முந்திரியையும்,சீனியையும் த‌னித்த‌த‌னியா மிக்சியில‌ போட்டு நைசா பொடிச்சுக்க‌னும்.

முட்டையை உடைச்சு வெள்ளைக்கருவை ம‌ட்டும் ஒரு கிண்ண‌த்துல‌ எடுத்து ந‌ல்லா நுரைக்க‌ அடிச்சுக்க‌னும்.

முந்திரிப்பொடி,சீனிப்பொடியையும் முட்டை வெள்ளைக்க‌ருவோட‌ சேர்த்து ந‌ல்லா க‌ல‌ந்து அடிச்சுக்க‌னும். அது கெட்டி க‌ல‌வையாகுற‌ வ‌ரைக்கும் அடிக்க‌னும். பாத்திர‌த்தை கீழே சாய்ச்சாலும் கூட‌ விழ‌க்கூடாது, அம்புட்டு கெட்டியாக‌னும்.

ந‌ல்லா கெட்டியாகி இறுக‌ ஆர‌ம்பிச்ச‌தும் சின்ன‌ சின்ன‌ கோன்,இல்லாட்டி கிண்ண‌த்துல‌ க‌ல‌வையை நிர‌ப்பி கேக் அவ‌ன்'ல‌ ப‌த்து நிமிஷ‌த்துக்கு பேக் ப‌ண்ண‌னும்.

கேக் அவ‌ன் இல்லாத‌வ‌ங்க‌ இட்லி பாத்திர‌த்துல‌ ம‌ண‌ல் நிர‌ப்பி ம‌ண‌ல் சூடு வ‌ந்ததும் ம‌க்ரூன் க‌ல‌வையை ஒரு ஸ்பூனால‌ ஒரு த‌ட்டுல‌ வ‌ட்ட‌ வ‌ட்ட‌மா விட்டு ம‌ண‌ல் மேல‌ வெச்சு மூடி வேக‌ வைக்க‌னும்.இப்ப‌ ம‌க்ரூன் ரெடி..

பாக‌ற்காய் சிப்ஸ்



பாக‌ற்காய் இந்த‌ வார்த்தையை கேட்டாலே நிறைய‌ பேர் ஓடோடிப் போயிடுவாங்க‌,, ஏன்னா க‌ச‌ப்பு இல்லையா..ஆனாலும் பாக‌ற்காய் உட‌ம்புக்கு ரொம்ப‌ ந‌ல்ல‌து..என்ன‌ தான் ச‌மைச்சாலும் ச‌ம‌ய‌த்துல‌ பாக‌ற்காய் க‌ச‌ந்துடும்,அத‌னால‌ க‌ச‌ப்பில்லாத‌ பாக‌ற்காய் சிப்ஸ் எப்டி செய்ய‌ற‌து'ன் பாக்க‌லாம்.




தேவையான‌ பொருட்க‌ள்:

பாக‌ற்காய் -100
ம‌ஞ்ச‌ள் தூள் - 1 சிட்டிகை
வ‌த்த‌ல் தூள் - 1ஸ்பூன்
த‌னியாத்தூள் - 1/2 ஸ்பூன்
இஞ்சி+பூண்டு விழுது - 1 ஸ்பூன்
அரிசிமாவு - 1கைப்பிடி
எண்ணெய் - தேவையான‌ அளவு
புளித்த‌ண்ணீர்- 1/2 க‌ப்
உப்பு - தேவையான‌ அளவு

செய்முறை:

பாக‌ற்காய வட்ட‌ வ‌ட்ட‌மா மெல்லிசா ந‌றுக்கிட்டு புளித்த‌ண்ணில‌ அல‌சி த‌ண்ணிய‌ வ‌டிச்சிட‌னும், இந்த‌ பாக‌ற்கையோட‌ ம‌ஞ்ச‌ள் தூள்,வ‌த்த‌ல் தூள்,தேவையான‌ அளாவு உப்பு,இஞ்சி பூண்டு விழுது, ஒரு கை அரிசி மாவு எல்லாம் சேர்த்து லேசா த‌ண்ணி தெளிச்சு பிச‌றி, ப‌த்து நிமிஷ‌ம் ஊற‌ வெச்சு எண்ணெயில‌ போட்டு பொரிச்செடுத்தா ந‌ல்லா க்ரிஸ்பியான‌ பாக‌ற்காய் சிப்ஸ் ரெடி..