திங்கள், 15 மார்ச், 2010

வெள்ள‌ரிக்காய் வெஜிட‌பிள் சால‌ட்

சால‌ட் எப்ப‌வுமே உட‌ம்புல‌ கொழுப்பு சேராம‌ பார்த்துக்கும்,,இப்ப‌ வெயில் கால‌ம் ஆர‌ம்பிச்சாச்சுல‌.வெள்ள‌ரி சீச‌னும் ஆர‌ம்பிச்சாச்சு..உட‌லுக்கு குளிர்ச்சியான‌து ,,இதை குட்டி ப‌ச‌ங்க‌ள‌ள‌ இருந்து பெரிய‌வ‌ங்க‌ வ‌ரைக்கும் சாப்பிட‌லாம்..த‌யாரிக்க‌ ஆர‌ம்பிக்க‌லாமா.




தேவையான‌ பொருட்க‌ள்:

வெள்ள‌ரிக்காய் - 50 கிராம்
த‌க்காளி - 50 கிராம்
வெங்காய‌ம் - 50 கிராம் (பொடியா ந‌றுக்கின‌து)
மாங்காய் - 10 கிராம் (பொடியா ந‌றுக்கின‌து)
கேர‌ட் - 50 கிராம்
முள்ள‌ங்கி - 20 கிராம்
புதினா - 10 கிராம்
கொத்த‌ம‌ல்லித் த‌ழை - 10 கிராம்
மிள‌குத்தூள் - 1 ஸ்பூன்
க‌ருப்பு உப்பு - தேவையான‌ அள‌வு
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
ப‌ச்சை மிள‌காய் - 3


செய்முறை:

வெள்ள‌ரிக்காய்,கேர‌ட்,முள்ள‌ங்கி எல்லாத்தையும் ந‌ல்லா க‌ழுவி மேல் தோலை சீவி சின்ன‌ சின்ன‌ துண்டா ந‌றுக்கிக்க‌னும்.

புதினா,கொத்த‌ம‌ல்லி,ப‌ச்சை மிள‌காய் எல்ல‌த்தையும் எலுமிச்சைசாறுல‌ அரைச்சி ப‌சை மாதிரி ஆக்கிக்க‌னும்.

வெங்காய‌ம்,ப‌ச்ச‌ரிசி,மாங்காய் கூட‌ வெள்ள‌ரிக்காய்,கேர‌ட்,முள்ள‌ங்கியையும் சேர்த்து ந‌ல்லா குலுக்கிக்க‌னும்.அதுல‌ புதினா ,கொத்த‌ம‌ல்லி,ப‌ச்ச‌மிள‌காய் ப‌சையை சேர்த்து காய்க‌றிக‌ளை ந‌ல்லா குலுக்கிக்க‌னும்,இதை ஃப்ரிட்ஜுக்குள்ள‌ வெச்சுக்க‌லாம்.

ப‌ரிமார‌க்கூடிய‌ ச‌ம‌ய‌த்துல‌ தேவையான‌ க‌ருப்பு உப்பையும்,மிள‌குத்தூளையும் தூவி கொடுத்தா செமையா இருக்கும்,மாங்காய் இல்லாம‌லும் இந்த‌ சால‌ட்ட‌ செய்ய‌லாம்.ச‌ம‌ய‌த்துல‌ ச‌ப்பாத்திக்கு,சாத‌த்துக்குக்கூட‌ தொட்டுக்க‌ இந்த‌ வெள்ள‌ரிக்காய் வெஜிட‌பிள் சால‌ட் உத‌வும்,,வீட்டுல‌ எல்லாருக்கும் செஞ்சு கொடுங்க‌..ச‌ரியா..

4.நாவ‌ல் ப‌ழ‌ ஜூஸ்



சின்ன‌ வ‌ய‌சுல‌ நானெல்லாம் ப‌ள்ளிக்கூட‌த்துல‌ ப‌டிக்கும் போது நாவ‌ல்ப‌ழ‌ சீஸ‌ன்ல‌ அந்த‌ ம‌ர‌த்துக்கு கீழேயே ப‌ச‌ங்க‌ளோட‌ எப்ப‌டா ம‌ர‌த்துல‌ இருந்து ப‌ழ‌ம் விழும்னு காத்திட்டே இருப்போம்.காத்த‌டிச்சிடுச்சுனா அவ்வ‌ள‌வு தான் அடேய‌ப்பா..என்னா அடிபுடி ச‌ண்டை,,இப்ப‌ இந்த‌ நாவ‌ல்ப‌ழ‌த்துல‌ தான் இப்ப‌ நாம‌ ஜூச் செய்ய‌ப்போறோம்.

தேவையான‌ பொருட்க‌ள்:

கொட்டை நீக்கின‌ நாவல்ப‌ழ‌ம் 50 கிராம்
குளிர்ச்சியான‌ த‌ண்ணீர் 1 ட‌ம்ள‌ர்
உப்பு 1 சிட்டிகை
ச‌ர்க்க‌ரை 1 ஸ்பூன்

செய்முறை:

நாவ‌ல் ப‌ழ‌ம்,த‌ண்ணீர்,உப்பு,ச‌ர்க்க‌ரையை எல்லாத்தையும் மிக்சியில‌ போட்டு ந‌ல்லா அரைச்சி ப‌ழ‌ர‌ச‌மாக்கி குடிக்க‌ வேண்டிய‌து தான்..அட‌டா என்னா ஒரு சுவௌப்பா..ட்ரை ப‌ண்ணி பாருங்க‌ப்பூ..

3.கொய்யா ஜூஸ்

கொய்யாப்ப‌ழ‌ம் யாருக்குத்தான் பிடிக்காது.ந‌ல்ல‌ நார் ச‌த்து இருக்கு,,சின்ன‌ ப‌ச‌ங்க‌ளுக்கு ரொம்ப‌ ந‌ல்ல‌து.வெள்ளை,சிவ‌ப்பு கொய்யா எல்லாம் இருக்கு..க‌ம‌க‌ம‌னு வேற‌ ம‌ண‌க்கும்.




தேவையான‌ பொருட்க‌ள்:

கொய்யாப்ப‌ழ‌ம் - 100 கிராம் (செங்காயா இருக்க‌னும்)
த‌ண்ணீர் - 2 ட‌ம்ள‌ர்
ச‌ர்க்க‌ரை - 1 ஸ்பூன்

செய்முறை:

கொய்யாப்ப‌ழ‌த்தோட‌ மேல் ச‌தையை ம‌ட்டும் வெட்டி எடுத்துட்டு விதையை எடுத்துட‌னும்.அப்புற‌மா துண்டு துண்டா வெட்டி மிக்ஸியில‌ போட்டு த‌ண்ணீர் விட்டு அரைச்சி அதோட‌ ச‌ர்க்க‌ரையை சேர்த்தா கொய்யா ஜூஸ் ரெடி...ஐஸ் க்யூப் போட‌ ம‌ற‌ந்துடாதீங்க‌.

2.நெல்லிக்காய் ஜூஸ்

நெல்லிக்காயில‌ விட்ட‌மின் "சி" இருக்கு..அதோட‌ உட‌ம்புக்கும் குளிர்ச்சி வேற‌..




தேவையான‌ பொருட்க‌ள்:

விதை நீக்கின‌ நெல்லிக்காய் - 3
த‌ண்ணீர் - 2 ட‌ம்ள‌ர்
உப்பு - 1 சிட்டிகை
வெல்ல‌ம் அல்ல‌து ச‌ர்க்க‌ரை - 1 ஸ்பூன்

செய்முறை:

நெல்லிக்காயை மிக்சியில‌ 2 ட‌ம்ள‌ர் த‌ண்ணீர் சேர்த்து அரைச்சி ந‌ல்லா வ‌டிக‌ட்டி ஒரு கிளாஸ்ல‌ ஊற்றி அதோட‌ தேவையான‌ அள‌வு உப்பு,வெல்ல‌ம் எல்லாம் ந‌ல்லா க‌ல‌ந்து ஐஸ் க்யூப் சேர்த்தா நெல்லிக்காய் ஜூஸ் ரெடி.

ப‌ப்பாளி ஜூஸ்

வ‌யிறு முட்ட‌ சாப்பிட‌ற‌த‌ விட்டுட்டு ஜூஸ் குடிக்கிற‌து உட‌ம்புக்கு ரொம்ப‌ ந‌ல்ல‌து...



தேவையான‌ பொருட்க‌ள்:

ப‌ப்பாளி ப‌ழ‌த்துண்டுக‌ள் - 100 கிராம்
எலுமிச்சை ப‌ழ‌ச்சாறு - 2 ஸ்பூன்
வெல்ல‌ம் - 1 ஸ்பூன்
உப்பு -கொஞ்ச‌ம்

செய்முறை:

தோல் சீவி விதை நீக்கின‌ ப‌ப்பாளித்துண்டை மிக்ஸியில‌ போட்டு ந‌ல்லா கூழாக்கி அதுல‌ ஒரு க‌ப் கூல் வாட்ட‌ர்,வெல்ல‌ம்,உப்பு,எலுமிச்சை சாறு க‌ல‌ந்து ந‌ல்லா ஒரு ஸ்பூனால‌ அடிச்சி ப‌ழ‌ச்சாறாக்க‌னும்.இந்த‌ ப‌ழ‌ச்சாறு ந‌ல்லா டேஸ்டா இருக்கும்.வேக‌ வெச்ச‌ காய்க‌றிக‌ளை சாப்பிட்ட‌வுட‌னே குடிக்க‌ ந‌ல்ல‌ பான‌ம் இந்த‌ ப‌ப்பாளி ப‌ழ‌ச்சாறு.

ஓட்ஸ் கிச்ச‌டி

இப்ப‌ நாம‌ ஓட்ஸ் கிச்ச‌டி ப‌ற்றி பார்க்க‌லாம்..ஏன்னா ஓட்ஸ் அதிக‌ ப‌சிக்காது ,,ஊளைச்ச‌தையை குறைக்கும்.



தேவையான‌ பொருட்க‌ள்:


ஓட்ஸ் ‍ 1 க‌ப்
வெங்காய‌ம் - 30 கிராம் (பொடியா ந‌றுக்கின‌து)
காரட் - 50 கிராம் (ரொம்ப‌ பொடியா ந‌றுக்கின‌து)
ப‌ச்சை ப‌ட்டாணி -20 கிராம்
த‌க்காளி - 30 கிராம் (பொடியா ந‌றுக்கின‌து)
ந‌ல்லெண்னெய் - 1 ஸ்பூன்
ப‌ச்சை மிள‌காய் ‍ 2 (ந‌றுக்கின‌து)
சீர‌க‌ம் - 2 கிராம்
முட்டைகோஸ் 20 கிராம் (பொடியா ந‌றுக்கின‌து)
குடைமிள‌காய் 20 கிராம் (பொடியா ந‌றுக்கின‌து)
உப்பு - தேவைக்கு
கொத்த‌ம‌ல்லி த‌ழை - கொஞ்ச‌ம்

செய்முறை:

வாண‌லியில் எண்ணெயை காய‌ வெச்சு சீர‌க‌த்தை போட்டு தாளிச்ச‌துக்க‌ப்புற‌மா ந‌றுக்கின‌ மிள‌காய்,கேர‌ட்,ப‌ட்டாணி,வெங்காய‌த்தை போட்டு லேசா வ‌த‌ங்க‌ வைத்து 2 க‌ப் த‌ண்ணீர் ஊத்தி அதுல‌ 2 க‌ப் த‌ண்ண்ணீர் விட்டு கொதிக்க‌ வைக்க‌னும்.கொதி வ‌ந்த‌ உட‌னே உப்பு சேர்த்து ந‌றுக்கின‌ குடை மிள‌காய்,முட்டைகோஸ் போட்டு ஓட்ஸையும் போட்டு ந‌ல்லா கிள‌ர‌னும்.

ந‌ல்லா குழைஞ்சி வர்ர‌ ப‌த‌த்துல‌ த‌க்காளிய‌ போட்டு அது கூட‌வே கொத்தம‌ல்லி த‌ழைய‌ போட்டு பிர‌ட்டி இற‌க்கி ப‌ரிமாற‌னும்..

1.ர‌வா உப்புமா

நிறைய‌ பேருடைய‌ க‌வ‌லை என்ன‌ன்னா உட‌ல் எடை தான்..அது ஆணா இருந்தாலும் ச‌ரி தான் அது பெண்ணா இருந்தாலும் ச‌ரி தான்..இதுக்கெல்லாம் ஒரே தீர்வு என்னான்னா ஒண்ணு த‌வ‌றாம‌ 45 நிமிட‌ வேக‌ ந‌டை ப‌யிற்சி, இன்னொன்னு ச‌ரியான‌ உண‌வை தேர்ந்தெடுக்க‌ற‌து. இப்ப‌ நாம‌ உட‌ல் எடைய‌ குறைக்க‌ உத‌வ‌ற‌ சாப்பாடு த‌யாரிப்புக‌ள‌ பார்க்க‌லாமா.






தேவையான‌ பொருட்க‌ள்:


ர‌வை - 1 க‌ப்
பொடியா ந‌றுக்கின‌ வெங்காய‌ம் - 30 கிராம்
ரொம்ப‌ பொடியா ந‌றுக்கின‌ கார‌ட - 50 கிராம்
ப‌ச்சை ப‌லட்டாணி -20 கிராம்
பொடியா ந‌றுக்கின‌ த‌க்காளி - 30 கிராம்
ந‌ல்லெண்னெய் - 1 ஸ்பூன்
ப‌ச்சை மிள‌காய் - 2
சீர‌க‌ம் - 2 கிராம்
உப்பு - தேவைக்கு
கொத்த‌ம‌ல்லி த‌ழை - கொஞ்ச‌ம்

செய்முறை:

வாண‌லியில் எண்ணெயை காய‌ வெச்சு சீர‌க‌த்தை போட்டு தாளிச்ச‌துக்க‌ப்புற‌மா ந‌றுக்கின‌ மிள‌காய்,வெங்காய‌த்தை போட்டு வ‌த‌ங்க‌ வைத்து 2 க‌ப் த‌ண்ணீர் ஊத்தி அதுல‌ கேர‌ட்,ப‌ட்டாணி போட்டு கொதிக்க‌ வைக்க‌னும்.

இப்ப‌ த‌னியா ச‌லிச்சு லேசா வ‌றுத்த ர‌வைய‌ கொதிச்சிட்டிருக்க‌ற‌ த‌ன்ணீருரோட‌ க‌ல‌ந்து உப்பை போட்டு கிள‌ரி விட‌னும். கிச்ச‌டி ந‌ல்லா குழைஞ்சி வர்ர‌ ப‌த‌த்துல‌ த‌க்காளிய‌ போட்டு அது கூட‌வே கொத்த ம‌ல்லி த‌ழைய‌ போட்டு பிர‌ட்டி இற‌க்கி ப‌ரிமாற‌னும்..இதுக்கு தொட்டுக்க‌ த‌னியா எதுவும் சேக்காம‌ இருக்க‌ர‌து ரொம்ப‌ ந‌ல்ல‌து...