அவல் எல்லாருக்குமே பிடிச்ச ஒண்ணு.சித்திரை முதல் நாளுல அவலோட வெல்லம் வாழைப்பழம் எல்லாம் சேர்த்து சாமிக்கு வெச்சி கும்பிடுவோம்.இந்த அவல்ல உப்புமா,பாயாசம் எல்லாம் பன்ணலாம்,இப்ப அவல் பாயாசம் எப்படி பன்ணலாம்னு பாக்கலாமா.
தேவை :
அவல்- 1 கப்
ஏலக்காய்- 2
பால் -1 1/2 கப்
பச்ச கற்பூரம்- சிறிது
வெல்லம் அல்லது சீனி- 1கப்
முந்திரி,திராட்சை -10
நெய் -2 ஸ்பூன்
அவலை வறுத்து ஒண்ணு ரெண்டா பொடிச்சுக்கனும்.லேசான தீயில அடுப்பில் ஒரு பாத்திரம் வெச்சு பால காய்ச்சனும்,பால் நல்ல கொதிச்சதும் அஹ்ட்தோட அவலை கொட்டி வேக வைக்கனும்,அத்தோட ஏலக்காய் பொடி,பச்ச கற்பூரத்த கரைச்சி ஊத்தனும்.1/4 கப் தண்ணீருல சீனி அல்லது வெல்லத்தை கரைச்சி பாகாக்கி அவல்ல சேர்த்துக்கனும்.நல்லா கிண்டி விடனும்,அடி பிடிச்சிட கூடாது.இப்ப வறுத்த முந்திரி,திராட்சையை அவல் கலவைல சேர்க்கனும்.நல்லா கொதிச்சி வந்ததும் நெய்யை சேர்த்து இறக்கனும்.இப்ப அவல் பாயாசம் ரெடிங்கோ.