செவ்வாய், 27 ஏப்ரல், 2010

தேங்காய் அப்ப‌ம்




நிறைய‌ கார‌சார‌மான‌ ச‌மைய‌ல் ப‌ண்ணியாச்சு.. நிறைய‌ டிப்ஸ் கொடுத்தாச்சு.. ச‌ரி ஒரு இனிப்பு ப‌ல‌கார‌ம் செஞ்சு கொடுக்க‌லாமுங்குற‌ ஒரு முடிவுக்கு வ‌ந்திருக்கேன்..ச‌ந்தோச‌ம் தானே..தேங்காய் கூட‌ அரிசி,ப‌ருப்பெல்லாம் சேர்த்து ஒரு வித்யாச‌மான‌ இனிப்பு தான்.ச‌ரி இந்த‌ தேங்காய் ப‌ற்றி தெரிஞ்சுக்க‌லாமா..

தேங்காய் :


தென்னைமரத்தோட‌ பழம் . இதை தெங்கம் பழம் இப்ப‌டியும் சொல்லுவாங்க‌. இது கெட்டியா இருப்பதால, பழமாக இருந்தாலும் கூட‌, வழக்கத்தில் காய் என்றே அழைக்கப்படுது. தென்னை மரம் தெற்கில் இருந்து வருவதால், அதன் பழம் ("காய்"), தெங்கம்+ "காய்" = தேங்காய்னு அழைக்கப்படுது. தேங்காயின் புறத்தே பச்சையாக இருந்தாலும், பழுப்பு நிறத்தில் அடர்த்தியாக நார்கள் உள்ளே இருக்கும்



இந்த நார்களை உரிச்சா உள்ளே மண்பழுப்பு நிறத்தில் மிகக்கெட்டியான ஓட்டோட‌, ஒரு பெரிய கொட்டை போல் இருக்க‌ற‌து தான் தேங்காய். அந்த தேங்காய்க்குள் தேங்காய்நீர் இருப்பதை ஆட்டிப் பார்த்தால் உணரலாம். அளவாக முற்றிய தேங்காயை நெற்றுனு சொல்லுவாங்க‌. அந்த கெட்டியான ஓட்டை உடைத்தால் உள்ளே வெள்ளைநிறத்தில் ஏறத்தாழ 1 செ.மீ பருமனுக்கு பருப்பு காணப்படும். இந்தப் பருப்புதான் சமையலுக்குப் பெரிதும் பயன்படுகிறது.



தேங்காய் மிக இளசா இருந்தால் அதனுள் நிறைய தேங்காய்நீர் இருக்கும். இதனை இளநீர்னு சொல்லுவாங்க‌. இது கோடை காலங்களில் வெய்யிலின் வெக்கையைத் தணிக்க குடிப்பாங்க‌.

கொப்பரைத் தேங்காய்:



கொப்பரையாவதற்காக வெயிலில் உலர்த்தப்படும் தேங்காய்அளவுக்கு மீறி முற்றி இருந்தா உள்ளிருக்கும் தேங்காய் நீர் முற்றிலுமாய் வற்றிடும், அப்படி ரொம்ப‌ முற்றிய தேங்காயை கொப்பரைத் தேங்காய் இப்ப‌டி சொல்லுவாங்க‌. கொப்பரை தேங்காய் எண்ணெய் எடுப்பதற்கு பயன்படுது. நீர் முற்றாக வற்றாத தேங்காய்களை வெயிலில் நல்லா உலர்த்தி அதை கொப்பரை ஆக்குவாங்க‌. கொப்பரையிலிருந்து எண்ணெய் எடுத்த பிறகு உள்ள தேங்காய் கழிவு புண்ணாக்கு ஆகும். புண்ணாக்கு கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுகிறது.


தேவையான‌ பொருட்க‌ள்

ப‌ச்ச‌ரிசி -1/2 கிலோ
புழுங்க‌ல‌ரிசி -1/2 கிலோ
க‌ட‌லைப்ப‌ருப்பு -200 கிராம்
துவ‌ர‌ம் ப‌ருப்பு -200 கிராம்
பாசிப்ப‌ருப்பு -200 கிராம்
மைதா மாவு -200 கிராம்
தேங்காய் -2
வெல்ல‌ம் -1 கிலோ
ஏல‌ம்மாய் தூள் -1 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான‌ அளாவு

செய்முறை:

அரிசி,ப‌ருப்பு வ‌கைக‌ள் எல்லாத்தையும் ந‌ல்லா ஊற‌வெச்சு ஒண்ணா ந‌ல்லா ஊற‌ வெச்சு அரைச்சு வெச்சுக்க‌னும்.அரைச்ச‌ மாவோட‌ வெல்ல‌ம்,ஏல‌க்க‌ய்த்தூள்,தேங்காய் துருவ‌ல் சேர்த்து அதிக‌ த‌ண்ணீர் விடாம‌ இட்லி ப‌த‌த்துக்கு அரைச்சு எடுத்து பாத்துக்க‌னும்.

இப்ப‌ ச‌லிச்ச‌ மைதா மாவை ரெண்டு ட‌ம்ள‌ர் த‌ண்ணீருல‌ ந‌ல்லா க‌ரைச்சு அரைச்சு வெச்ச‌ மாவோட‌ சேர்த்து க‌ல‌ந்துக்க‌னும்.

வாணலியில‌ எண்ணெய் விட்டு ந‌ல்லா சூடான‌தும்,அடுப்பை லேச‌ எரிய‌ விட்டு வ‌ணாலியில‌ மாவை கொஞ்ச‌ம் கொஞ்ச‌மா க‌ர‌ண்டியால‌ எடுத்து ஊற்ற‌னும்,வெந்த‌தும் லேச‌ திருப்பிப் போட்டு சிவ‌ந்த‌தும் எடுத்தா சூடான‌ தேங்காய் அப்ப‌ம் ரெடி..செஞ்சு பார்த்துட்டு சொல்றீங்க‌ளா....