வெள்ளி, 26 மார்ச், 2010

குழ‌ந்தை வ‌ர‌ம் த‌ரும் சூப்புக‌ள்

குழ‌ந்தைப் பேறுங்குற‌து ம‌ழை பெய்ய‌ற‌ மாதிரி,வெயில் அடிக்கிற‌ மாதிரியான‌ இய‌ற்கை நிக‌ழ்வு,,அதை ம‌ன‌சுல‌ கொண்டு தான் இய‌ற்கை ஆணையும்,பெண்ணையும் அதுக்கேத்த‌ மாதிரி டிசைன் ப‌ண்ணியிருக்கு,

ஆணுக்கும் ச‌ரி,பெண்ணுக்கும் ச‌ரி ம‌க‌ப்பேறு உருவாகாத‌ நிலைக்கு அடிப்ப‌டை கார‌ண‌ம் கிருமிக‌ள் தான்,இந்த‌ உட‌ல் சூட்டையும்,கிருமிக‌ளையும் ச‌ரி செய்ய‌ இதோ ஸ்பெஷ‌ல் சூப்புக‌ள்..



1.ப‌ச‌லை சூப்

ப‌ச‌லை கீரையை ஒரு கைப்பிடி எடுத்து ந‌ல்லா அல‌சி ந‌றுக்கிக்க‌னும்,அதுல‌ ஒரு சிட்டிகை பெருஞ்சீர‌க‌த்தை வ‌றுத்துப் போட்டு அதை ரெண்டு ட‌ம்ள‌ர் த‌ண்ணீருல‌ கொதிக்க‌ வெச்சு வ‌டி க‌ட்டி எடுத்தா ப‌ச‌லை சூப் ரெடி..

2.வேப்பிலை சூப்:



வேப்பிலை கொழுந்தை ஒரு கைப்பிடி அள‌வு எடுத்து அல‌சி கொதிக்க‌ வெச்சு ஒரு ட‌ம்ள‌ர்ல‌ எடுத்தா வேப்பிலை சூப் ரெடி,இதை குடிக்கிற‌தால‌ உட‌ல் சூடு குறைய‌ற‌தோட‌ கிருமியும் சாகும்.

3.செம்பருத்தி சூப்:



சிவ‌ப்பு நிற‌மா இருக்க‌ற‌ ஒத்தை இலை செம்ப‌ருத்திப்பூ ஐந்து எடுத்து ந‌ல்லா சுத்த‌ம் செஞ்சு ஒரு ட‌ம்ள‌ர் த‌ண்ணீர் ஊற்றி அவித்து,ஒரு க‌ர‌ண்டியால‌ அதை ஒரு க‌ச‌க்கு க‌ச‌க்கிய‌ பிற‌கு அந்த‌ த‌ண்ணீர‌ வ‌டிக‌ட்டி ஆற‌ வெச்சு கொஞ்ச‌ம் பால் சேர்த்தா செம்ப‌ருத்தி சூப் ரெடி,இந்த‌ சூப் உட‌லுக்கு ந‌ல்ல‌ குளிர்ச்சி த‌ரும்.

4.முருங்கை சூப்:



முருங்கை இலைஒரு கைப்பிடி எடுத்து அல‌சி அதை ஒரு ட‌ம்ள‌ர் த‌ண்ணீர் ஊற்றி கொதிக்க‌ வெச்சி வ‌டி க‌ட்டினா முருங்கை சூப் ரெடி,இது உட‌ம்போட‌ வாய்வையும் குறைக்கு,.நெஞ்சு வ‌லி வ‌ர‌வே வ‌ராது.

5.க‌ல்யாண‌ முருங்கை சூப்:



க‌ல்யாண‌ முருங்கை இலையை ஒரு கைப்பிடிஎடுத்து அதோட‌ கொஞ்ச‌ம் பெருஞ்சீர‌க‌ம் போட்டு ஒரு ட‌ம்ள‌ர் த‌ண்ணீர் ஊற்றி கொதிக்க‌ வெச்சு வ‌டி க‌ட்டி எடுத்தா க‌ல்யாண‌ முருங்கை சூப் ரெடி,இத‌னால‌ ம‌ல‌ட்டுத்த‌ன்மை வ‌ராது.


5.கொத்தும‌ல்லி சூப்:



கொத்தும‌ல்லி த‌ழைக‌ளை ஒரு கைப்பிடி ஆய்ந்து ந‌ல்லா அல‌சி ஒரு ட‌ம்ள‌ர் த‌ண்ணீர் விட்டு கொதிக்க‌ வெச்சு ஆற‌வெக்க‌னும்,அப்புற‌மா அரை ட‌ம்ப‌ர் பால் சேர்த்தா கொத்த‌ம‌ல்லி சூப் ரெடி .இது ப்ரெஷ்ஷ‌ரை குறைக்கும்,ச‌ட்டு,ச‌ட்டுனு வ‌ருகிற‌ ந‌ப‌ர்க‌ள் இதை தின‌மும் குடிக்க‌னும்,அப்புற‌ம் பாருங்க‌ மாற்ற‌த்தை..

6.க‌ருவேப்பிலை சூப்:



க‌ருவேப்பிலையை ஒரு கைப்பிடி எடுத்து அல‌சி கொதிக்க‌வெச்சு ஆற‌ வெச்சு வ‌டி க‌ட்டி அரை ட‌ம்ள‌ர் பால் சேர்த்து எடுத்தா க‌ருவேப்பிலை சூப் ரெடி,பால் சேர்க்காம‌லும் குடிக்க‌லாம்,இந்த‌ சூப் பித்த‌த்தை குறைக்கும்,வ‌யிற்றுப் புண்ணை ஆற்றும்,மூளைக் கோளாறு உள்ள‌வ‌ங்க‌ சாப்பிட்டா சீக்கிர‌மா ச‌ரியாகும்‌ .


7.வாழைப்ப‌ழ‌ சூப்:



மொந்த‌ன் வாழைப்ப‌ழ‌த்தை தோலோடு துண்டு துண்டா ந‌ருக்கி,பிச‌ஞ்சிட்டு 2 ட‌ம்ள‌ர் த‌ண்ணீர் விட்டு கொதிக்க‌ வைக்க‌னும்,அதை அப்ப‌டியே வ‌டி க‌ட்டி குடிக்க‌லாம்,இதுல‌ விட்ட‌மின் எ,பி,சி,டி இருக்கு,ஆண்க‌ள் குறிப்பா ஹார்ட் அட்டாக் பிர‌ச்சினை உள்ள‌வ‌ங்க‌ளுக்கு ந‌ல்ல‌து,ஆனா டிபி,ஆஸ்துமா உள்ள‌வ‌ங்க‌ இதை குடிக்க‌க்கூடாது.

8.பொன்னாங்க‌ன்னி சூப்:




ச‌ர்க்க‌ரை நோய் உள்ள‌வ‌ங்க‌ வாழைப்ப‌ழ‌ சூப் சாப்பிட‌ முடியாதுங்குற‌துனால‌ பொன்னாங்க‌ன்னி,தொட்டாச்சினுங்கி ரெண்டையும் ச‌ம‌ ப‌ங்கு எடுத்து ஒரு ட‌ம்ள‌ர் த‌ண்ணீர் விட்டு கொதிக்க‌ விட்டு அதுல‌ ஒரு துளி வ‌றுத்த‌ வெந்த‌ய‌ப்பொடி,துளி பாக்குப்பொடி,ஒரு துளி ம‌ஞ்ச‌ள் தூள் சேர்த்து வ‌டி க‌ட்டி குடிச்சா இப்ப‌ பொன்ன‌ங்க‌ன்னி சூப் ரெடி.க‌ளி பாக்கு கிருமியை நீக்கிடும்.

ப்ரிஞ்ஜால் ம‌சாலா ஃப்ரை


க‌த்திரிக்காய் வெச்சு ஸ்பெஷ‌லா என்ன‌ ப‌ண்ண‌லாம்னு யோசிக்கும்போது கிடைச்ச‌து தான் இந்த‌ க‌த்த‌ரிக்காய் ம‌சாலா ஃப்ரை.




தேவையான‌ பொருட்க‌ள்:

வெங்காய‌ம் 1 (பொடியாக‌ ந‌றுக்கிய‌து)
த‌க்காளி 1 (பொடியாக‌ ந‌றுக்கிய‌து)
இஞ்சி விழுது 1/2 டீஸ்பூன்
பூண்டு விழுது 1/2 டீஸ்பூன்
ப‌ச்ச‌ மிள‌காய் 2
க‌ர‌ம் ம‌சாலா 1/2 டீஸ்பூன்
மிள‌காய் தூள் 1/2 டீஸ்பூன்
ம‌ஞ்ச‌ள் தூள் 1/4 டீஸ்பூன்
பெருங்காய‌ப்பொடி சிறித‌ள‌வு
வெந்த‌ய‌ம்,பெருஞ்சீர‌க‌ம் 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
ரீஃபைன்ட் ஆயில் 1ஸ்பூன்
உப்பு தேவையான‌ அள‌வு

செய்முறை:

க‌த்திரிக்காயை முழுசா காம்பு ந‌றுக்காம‌ ரெண்டா வெட்டி,தீயில‌ சுட்டு தோல் உரிச்சி ஆற‌ வெக்க‌னும்,லேசான‌ தீயில‌ வாண‌லியை வெச்சு எண்ணெயில‌ பெருஞ்சீர‌க‌ம் + வெந்த‌ய‌ம் தாளிச்சி அதோட‌ பெருங்காய‌ம்,இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து ப‌ச்சை வாச‌னை போக‌ வ‌த‌க்க‌னும்,இப்ப‌ ந‌றுக்கின‌ வெங்காய‌ம்,த‌க்காளியை ஒண்ணு பின்னால‌ ஒண்ணா போட்டு வ‌த‌க்கி அதோட‌ 1 ஸ்பூன் க‌ர‌ம் ம‌சாலா,தேவையான‌ அள‌வு உப்பு,ரெண்டா வெட்டின‌ ப‌ச்ச‌ மிள‌காயும் சேர்த்து வ‌த‌க்க‌னும்,இப்ப‌ தீயில‌ சுட்டு உரிச்சி வெச்சிருக்க‌ற‌ க‌த்திரிகாயையும்,1ஸ்பூன் லெமொன் சேர்த்து ந‌ல்லா பிர‌ட்டி கொஞ்ச‌மா த‌ண்ணீர் சேர்த்து கொதிக்க‌ விட‌னும்,ந‌ல்லா த‌ள‌,,த‌ள‌னு கொதிச்சு வ‌ரும்போது ந‌றுக்கி வெச்சிருக்க‌ற‌ கொத்த‌ம‌ல்லித் த‌ழையை தூவி இற‌க்கினா ப்ரிஞ்ஜால் ம‌சாலா ஃப்ரை ரெடி,,அப்பா செம‌ ம‌ண‌ம் போங்க‌..இது ஃப்ரைட் ரைஸ்,ப்ரோட்டா,ரைஸ் ரொட்டிக்கு ந‌ல்ல‌ காம்பினேஷ‌ன்..

ஆப்பிள் அல்வா

தின‌மும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டா டாக்ட‌ர் கிட்ட‌ போக‌ வேண்டிய‌ தேவையே வ‌ராது'னு சொல்லுவாங்க‌..அப்ப‌டிப்ப‌ட்ட‌ ஆப்பிள் வெச்சுத்தான் அல்வா செய்ய‌ப் போகிறேன்.



தேவையான‌ பொருட்க‌ள்:

ஆப்பிள் 1/2 கிலோ
கோதுமை மாவு 1/2 கிலோ
ச‌ர்க்க‌ரை 1 கிலோ
பால் 1/2 கிலோ
நெய் 1/4 லிட்ட‌ர்
ஏல‌க்காய் தூள் 1 ஸ்பூன்
முந்திரிப்ப‌ருப்பு 15
கேச‌ரிப்ப‌வுட‌ர் 2 ஸ்பூன்

செய்முறை:


ஆப்பிளை சின்ன‌ சின்ன‌ துண்டா ந‌றுக்கி லேசா சூடான‌ பால் விட்டு வேக‌ வைக்க‌னும்,ஆப்பிள் வெந்த‌தும் அடுப்பை லேசா "சிம்"மில் வெச்சிட்டு ந‌ல்லா ம‌சிக்க‌னும்.ம‌சிச்ச‌தும் ச‌லித்த‌ கோதுமை மாவு,சேர்த்து கிள‌ரி விட‌னும்,இப்ப‌ ச‌ர்க்க‌ரை,கேச‌ரிப்ப‌வுட‌ர் சேர்த்து ந‌ல்லா க‌ல‌வையை கிண்டி விட‌னும்,,இப்ப‌ நெய்யை கொஞ்ச‌ம் கொஞ்ச‌மா ஊற்றி ஊற்றி அல்வாவை கிள‌ரி விட்டுக்கிட்டே இருக்க‌னும்,அல்வா ப‌த‌ம் வ‌ந்த‌தும் முந்திரிப்ப‌ருப்பு,ஏல‌க்காய் தூளும் சேர்த்து அடுப்பிலிருந்து இற‌க்கி எடுத்தா ஆப்பிள் அல்வா ரெடி..

பாதாம் அல்வா

திருநெல்வேலி"னு சொன்ன‌வுட‌னே எல்லாஅருடைய‌ ம‌ன‌சுக்குள்ள‌யும் எட்டி பாக்குற‌து,நாக்குல‌ த‌ண்ணீர் வ‌ர‌ வைக்கிற‌ அல்வா தான்..ஆஹா..எப்ப‌டி இருக்கும் தெரியுமா..அட‌டா..டேஸ்டோ,டேஸ்ட் போங்க‌..நெல்லை ட‌வுண் இருட்டுக்க‌டை அல்வாவுக்கு இணை எதுவுமே இல்ல‌..அப்ப‌டியே இலையில‌ சுட‌ சுட‌ வாங்கி நாக்குல‌ ப‌ட்டும் ப‌டாம‌லும் "ம்லுக்"னு வ‌யித்ட்துக்குள்ள‌ போகும் பாருங்க‌..அட‌டா..
இப்டி இருந்தாலும் வித்யாச‌மான‌ அல்வா செய்ய‌லாம்னு தோணிடுச்சி,,செஞ்சும் பார்த்துட்டேன்..அது என்ன‌ன்னா ந‌ம்ம‌ "பாதாம் அல்வா"தான்..பாதாம் விக்குற‌ விலையில‌ இது தேவையானு நீங்க‌ கேக்குற‌து என‌க்கு கேக்குது..இருந்தும் செஞ்சு குடுத்தா வேணாம்னா சொல்லுவோம்..




தேவையான‌ பொருட்க‌ள்:

பாதாம் ப‌ருப்பு 1 க‌ப்
இனிப்பில்லாத‌ கோவா 1 க‌ப்
பொடித்த்ட‌ ச‌ர்க்க‌ரை (சுக‌ர்) 1 1/2 க‌ப்
நெய் 1/4 க‌ப்
குங்கும‌ப்பூ 1/4 ஸ்பூன்
பால் 1/2 க‌ப்
ஏல‌க்காய் தூள் 1/4 ஸ்பூன்

செய்முறை:

முத‌ல்ல‌ பாதாம் ப‌ருப்புக‌ளை 15 நிமிஷ‌ம் சூடானா வெந்நீருல‌ போட்டு ஊற‌ வெச்சு தோல் உறிச்சு எடுத்து அதோட‌ பால் சேர்த்து அரைச்சு கோவா கூட‌ சேர்த்து க‌ல‌ந்துக்க‌னும்,இப்ப‌ அடுப்ப‌ ப‌த்த வெச்சு பாதாம்+கோவா க‌ல‌வையை சேர்த்து ந‌ல்லா கிள‌ர‌ ஆர‌ம்பிக்க‌னும். அதோட‌ மீத‌மிருக்க‌ற‌ பால் சேர்த்து கிள‌ரி விட‌னும்.பால் சுண்ட‌ ஆர‌ம்பிச்ச‌தும் 1 1/2 க‌ப் பொடித்த‌ சீனி சேர்க்க‌னும்,அது நல்லா கரைந்தவுடனே கேச‌ரி பவுடர் சேர்த்து, 1/4 டம்ளர் நெய்யை ஊற்ற‌னும். இப்ப‌ பாலுல‌ க‌ரைச்ச‌ குங்கும‌ப்பூ,ஏல‌க்காய் ப‌வுட‌ர் க‌ல‌ந்த‌தும் நல்லா கெட்டியாகி அல்வாப் பதத்தில வரும்போது, இறக்கி வெச்சு மீதி நெய்யை கொஞ்ச‌ம் கொஞ்ச‌மா விட்டு நல்லா கிளறி ஆறவிடனும்.இப்ப‌ பாதாம் அல்வா ரெடி..