
நிஜம்மாகவே ரொம்ப ருசியா இருக்கும்,,கார சாரமான சாப்பாடுனா உருளைக்கிழங்கு தொக்கு தான் பெஸ்ட்.அதுவும் சாம்பாரோட சேர்த்து சாப்பிட்டா சூப்பரா இருக்கும்,அதுவும் நல்லா பசியோட இருக்கும்போது அடடா தேவாமிர்தமா இருக்கும் போங்க,சமைக்க ஆரம்பிக்கலாமா.
தேவையானவை:
உருளைக்கிழங்கு 1/4 கிலோ
கடுகு 1/2 ஸ்பூன் கருவேப்பிலை கொஞ்சம்
வத்தல் பொடி 25 கிராம்
மல்லிப்பொடி 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன்
பல்லாரி 1
தக்காளி 1
உப்பு தேவையான அளவு
இஞ்சி+பூண்டு விழுது 1 ஸ்பூன்
மல்லித்தழை சிறிது
ரீஃபைன்ட் ஆயில் 3 ஸ்பூன்
செய்முறை:
உருளைக்கிழங்க நல்லா அவிச்சி தோல் உறிச்சி குட்டி குட்டியா நறுக்கி வெச்சுக்கனும்,வாணலியில எண்ணெய் விட்டு நல்லா காய்ஞ்சதும் கடுகு+உளுத்தம்பருப்பு+கருவேப்பிலை எல்லாம் போட்டு தாளிச்சதும் பொடிசா நறுக்கின பல்லாரி போட்டு நல்லா வதக்கனும்,அப்புறமா வெட்டி வெச்சிருக்கற தக்காளி போட்டு வதங்கினதும் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து நல்லா வதக்கனும்,இப்ப வத்தல் பொடி,மஞ்சள் பொடி,மல்லிப்பொடி உப்பு சேர்த்து கிளறனும்,இப்ப கொஞ்சமா தன்ணி சேர்த்து,அதோட கொஞ்சமா கரம் மசாலா சேர்த்து நல்லா வாசம் வந்ததும் நறுக்கின உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கனும்,பச்சை வாசனை போனதும் கொஞ்சமா நறுக்கின மல்லித்தழைய தூவி இறக்கனும்,நல்ல மணம்,,நல்ல இருக்குல்ல..சரி,சரி சமைச்சி சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக