
எல்லாருக்குமே தன்கிட்ட இருக்கற அழகை இன்னும் அழகுபடுத்தி பார்க்கனுங்குற ஆசை எல்லாருக்குமே இருக்கும்,அதுவும் முகம்,கூந்தல் பராமரிப்புனா அப்பா கேக்கவா செய்யனும்,
நாளொண்ணுக்கு வித விதமா ஷாம்பூ,கன்டிஷனர், ஹேர் ஆயில், ஃபேஸ் க்ரீன் இப்படி புதுசு புதுசா வந்திட்டிருக்கு .. அதனால இதை பயன் படுத்தினா நம்ம முடி உதிரல்,பொடுகு தொல்லை,முடி உதிர்தல்,குறைஞ்சிடுமா, இல்ல நாம எப்படியாவது கலரா மாறிட மாட்டோமாங்குற ஏக்கம் எல்லா பெண்களோட மனசுலயும் இருக்கத்தான் செய்யுது,

அதுவும் இந்த கோடை காலத்துல கூந்தல்,முகம்,உடம்பை பாதுகாக்குறது இருக்கே .. அப்பா.. மூச்சே முட்டிப் போவோம் போங்க..அதுக்காகத்தான் தலை முடியை நம்ம வீட்டுல கிடைக்கிற பொருட்கள வெச்சு எப்படி எல்லாம் பாதுகாக்கலாம்னு பாக்கலாமா..

1.செம்பருத்திப்பூ,கருவேப்பிலை, மருதாணி இலை, குருமிளகு எல்லாத்தையும் தன்ணீருல நல்லா நனைய வெச்சு அரைச்சு சாறு எடுத்து, அதை காய வெச்ச தேங்காய் எண்ணெய்யில சேர்த்து வாரம் ரெண்டு தடவை தலைக்கு மசாஜ் செஞ்சிட்டு வந்தா பொடுகு ,முடி கொட்டுதல் எல்லாம் சரியாகிடும்.

2.அதை போலவே வெளியில போவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னாடியே தலையில எண்ணெய் லேசா தடவிக்கிட்டா தலை முடி காற்றுல பறக்காம இருக்கும்.

3.அப்ப்றம் ஒரு விஷயம் தலைக்கு ஷாம்பூ உபயோகிக்கறதுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி தலையில எண்ணெய் வெச்சு மசாஜ் செஞ்ச பிறகு முடியை அலசினால் முடி கொட்டுதல்,பொடுகு இதெல்லாம் காணாம போயிடும்.

தலை முடி பளபள பளப்பா இருக்க சில வழிகள்:

1.தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணேய் எல்லாத்தையும் ஒரு கிண்ணத்துல சம அளவு எடுத்து தண்ணீருல வெச்சு சூடு பண்ணி பிறகு மசாஜ் செய்யனும், பிறகு அரை மணி நேரம் கழிச்சு முட்டை வெள்ளைக் கருவை எடுத்து தலையில பேக் போட்டு ஒரு பதினைஞ்சு நிமிடம் ஊறின பிறகு தலையை அலசினா தலை முடி பளபளப்பா இருக்கும்.

2.டீ குடிக்குறது எல்லாருக்குமே பிடிக்கும் , ஆனா அதே டீ டிகாஷன்ல தலை முடியை அலசினாலும் முடி பளபளப்பா இருக்கும்.
தலை முடி பற்றி பார்த்தாச்சு ஆனா முகம் அழகாக என்ன செய்யலாம்னு பாப்போமா.

1.லேவன்டர் ஆயிலை முகத்துக்கு தொடர்ந்து பயன் படுத்தி வந்தா முகத்துல இருக்குற கருமையை மறைய வைக்கும்,
தலைமுடி ,முகத்தை பராமரிச்சாலும் உடல்நலம் ரொம்ப முக்கியம் இல்லையா,,

ஸ்லிம்மாவும்,சுறுசுருப்பா இருக்கனும்னு நீங்க நினைச்சீங்கன்னா, சாப்பிடறதுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னாடி நம்மால முடிஞ்ச அளவு வரைக்கும் தண்ணீர் குடிக்கனும், ஏனா அப்படி ஆகும்போது சாப்பாடு அளவு குறையும் இல்லையா ,, எப்படியோ நான் சொல்ற சில விஷயங்களையாவது பின்பற்றினா சந்தோசம் தான்,,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக