
நம்ம திருநெல்வேலி டவுண் சரவண பவா ரவா தோசை சான்ஸே இல்ல போங்க..அடடா மணக்க மணக்க நல்ல சூடா மேலோட்டமா சீரகமும்,மிளகும் நல்ல நெய்யில பொறிஞ்சு அதோட வாசனை..ம்ஹூம்,,,சொத்தையே எழுதி வைக்கலாம் போங்க..
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு -1/4 கப்
ரவை -1/4 கப்
மைதா -ஒரு கைப்பிடி
மோர் -1/2 கப்
பெருங்காயப்பொடி -1/4 டீஸ்பூன்
இஞ்சி -சின்ன துண்டு
கருவேப்பிலை -15
பச்ச மிளகாய்- 4
தேங்காய் துருவியது -1/4 கப்
முந்திரி -12
மிளகு -2 ஸ்பூன்
சீரகம் -1 ஸ்பூன்
நெய் -2 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவைக்கு
செய்முறை:
ரவையோட,அரிசி மாவு,மோர்,உப்பு,பெருங்காயம் சேர்த்து ஆறு மணி நேரம் ஊற வைக்கனும், இஞ்சி,பச்ச மிளகாய்,கருவேப்பிலை,முந்திரி எல்லாத்தையும் நறுக்கிக்கனும்,
மிளகு,சீரக்ம் ரெண்டையும் ஒண்ணு,ரெண்டா உடைச்சிக்கனும்,
இப்ப வாணாலியில நெய்ய் ஊற்றி சூடானதும் மிளகு,சீரகத்தை நல்லா வறுத்து மாவோட சேர்க்கனும்,அதோட துருவின தேங்காய்,நறுக்கின பச்ச மிளகாய்,கருவேப்பிலை,முந்திரியை மாவோட சேர்த்து நல்லா தோசை பதத்துக்கு கலந்துக்கனும்,
இப்ப தோசைக்கல்லை சூடாக்கி லேசா ஏண்ணெய் விட்டு அதுல நல்லா வட்டமா,பெருசா தோசை வார்க்கனும்,அதோட தோசையை சுற்றி நெய்யோ,அல்லது எண்ணெய் விடனும்.இப்ப தோசையை புரட்டி போட்டு பொன்னிறமா மாறினதும் எடுத்து சூடா தட்டுல எடுத்து வெச்சு அதோட தக்காளிச்சட்னி,தேங்காய் சட்னி வெச்சுசாப்பிட்டா அடடா என்ன ருசி ரவா தோசா..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக