திங்கள், 11 ஜனவரி, 2010

ப‌ய‌த்த‌ம் ப‌ருப்பு பீன்ஸ் பொரிய‌ல்:



பீன்ஸ் ச‌த்திய‌மா ந‌ம்மூரு காய் கிடையாது.ஆனாலும் ந‌ம்ம‌ வீட்டு ச‌ம‌ய‌ல்ல‌ பீன்ஸ்,கார‌ட் இல்லாம‌ இருக்காது..அம்புட்டு ச‌த்துனு சொல்வாங்க‌,இம்புட்டு அழ‌கான‌ ச‌த்தான‌ ப‌ச்ச‌ பீன்ஸோட‌ ந‌ம்மூரு ப‌ய‌த்த‌ ப‌ருப்பையும் செர்த்து ச‌மைச்சா எப்ப‌டி இருக்கும்,,ம்ம்,,செம‌யாதான் இருக்கும்..
தேவையான‌வை:
பீன்ஸ் 100 கிராம்
ப‌ய‌த்த‌ம் ப‌ருப்பு 50 கிராம்
அரைக்க‌:
தேங்காய் துருவ‌ல் ஒரு கைப்பிடி
ப‌ச்ச‌மிள‌காய் 5 கார‌ம் வேணும்னா கூட‌ 2 சேர்த்துக்க‌லாம்.
சீர‌க‌ம் 1 ஸ்பூன்
தாளிக்க‌:
ரீபைன்ட் ஆயில் -2 ஸ்பூன்
க‌‌டுகு -1 சிட்டிகை
சின்ன‌ வெங்காய‌ம் -2
செய்முறை :
ப‌ய‌த்த‌ம் ப‌ருப்பை க‌ளைந்து வாணலியில் அள‌வான‌ த‌ண்ணீரில் வேக‌விட‌வும்,அரைவேக்காட்டில் அரிந்து வைத்துள்ள‌ பீன்ஸை சேர்த்து அத்துட‌ன் சிறித‌ள‌வு உப்பு சேர்த்து கிள‌றி வேக‌விட‌வும்.த‌ண்ணீர் வ‌ற்றிய‌தும் அத்துட‌ன் அரைத்து வைத்துள்ள‌ ம‌சாலாவை சேர்த்து கிள‌றி மூடி வைக்க‌வும்.அடுப்பை சிம்மில் வைக்க‌வும்.ப‌ருப்பு அதிக‌மாக‌ வேக‌ விட‌வேண்டாம்,ஏனெனில் ந‌ன்றாக‌ அவிந்தால் ப‌ருப்பும்,பீன்ஸும் ஒன்றோடு ஒன்று சேர்ந்து விடும்,,அதாவ‌து பொய் அவிய‌லா அவிக்க‌னும்,,க‌ல‌வையை இற‌க்கி வைக்க‌வும்,வாண‌லியில் ரீபைன்ட் ஆயில் விட்டு அத்துட‌ன் க‌டுகு,க‌ருவேப்பிலை சேர்த்து வ‌த‌க்கி அத்த்டுட‌ன் சின்ன‌ வெங்காய‌ம் சேர்க்க‌வும்,பின் பீன்ஸ்+ப‌ருப்பு க‌ல‌வையை சேர்த்து லேசாக‌ கிள‌றி இற‌க்கி ப‌ரிமாற‌வும்..மிக‌ வித்தியாச‌மான‌ டிஷ்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக