ஊருக்கு கிளம்பினா நம்மூருல எல்லாம் எலுமிச்சை சாதம்,புளி சாதம் கட்டி தான் கொண்டு போவாங்க..இப்ப காலமே மாறிப்போச்சு,அப்பப்ப வாங்கி சாப்பிடறாங்க.ஆனாலும் அவசரத்துக்கு எப்பவும் உதவுறது இந்த தயிர் சாதம்,எலுமிச்சை சாதம் தான்..சரி இப்ப எலுமிசை சாதம் எப்படி செய்யலாம்னு பாக்கலாமா..
தேவை:
அரிசி - 1 கப்
உளுத்தம்பருப்பு -1 ஸ்பூன்
கடலைப்பருப்பு -1 பெரிய ஸ்பூன் அளவு
வத்தல் -2
பச்சை மிளகாய்- 2 (கீறுனது)
எலுமிச்சை சாறு- 1 பெரிய ஸ்பூன் அளவு
கடுகு,காயப்பொடி -1 சிட்டிகை
சாம்பார் மசாலா (விருப்பம் இருந்தால்)-1 ஸ்பூன்
வேர் கடலை -10
ரீஃபைன்ட் ஆயில்- 2 ஸ்பூன்
கருவேப்பிலை -சிறிது
உப்பு- தேவைக்கு
செய்முறை:
அரிசிய கழுவி 1/2 மணி நேரம் ஊற வெச்சி சாதமா பண்ணி வெச்சிக்கனும்.இப்ப நல்லா ஆறவெக்கனும்,வாணலியில எண்ணெய் சூடாக்கி அதுல காயப்பொடி,கடுகு தாளிச்சி அதுல கடலப்பருப்பு,உளுத்தம்பருப்பு, வேர்கடலை சேர்த்து பொன்னிறமா மாறியதும்,கருவேப்பிலை,வத்தல்,பச்ச மிளகாய்,உப்பு,மஞ்சள் பொடி சேர்த்து கிளறனும்,பிறகு அதுல ஆற வெச்ச சாதத்த கொட்டி லேசா கிளறனும்.விரும்பினா சாம்பார் பொடி சேர்த்துக்கலாம்.ஏன்னா இதனால தனி டேஸ்ட் கிடைக்கும்.இப்ப எலுமிசை சாற சேர்க்கனும்.இதைக்கூட குறச்சலாவோ,கூடுதலாவோ சேர்த்துக்கலாம்.இப்ப சாதத்தை கிளறினா எலுமிச்சை சாதம் ரெடி.ஆற வெச்சி டப்பாவுல எடுத்துட்டு போகலாம்,இது 20 - 22 மணி நேரம் வர கெட்டுப்போகாம இருக்கும்..டீக்கே..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக