வியாழன், 21 ஜனவரி, 2010

தேங்காய் பூர‌ண‌ ர‌வை உருண்டை


தேங்காய் இல்லாம‌ ந‌ம்மூருல‌ ச‌மைய‌லே இருக்காது,அதுவும்,க‌ன்னியாகும‌ரி மாவ‌ட்ட‌ம்,கேர‌ளா ப‌குதிக‌ள்ள‌ தேங்காய் இல்லாம‌ ச‌மைய‌ல‌ நின‌ச்சிக்கூட‌ பாக்க‌ முடியாது..இப்ப‌ நாம‌ ஒரு இனிப்பு ப‌ல‌காரம் எப்ப‌டி செய்ய‌லாமுனு பாப்போமா..
தேவையான‌து:
பொடிச்ச‌ ர‌வை 2 க‌ப்
துருவின‌ தேங்காய் 1 க‌ப்
சீனி 150 கிராம்
ஏல‌க்காய் பொடி 1/2 ஸ்பூன்
திராட்சை 10
பாதாம் 10
உப்பு 1 சிட்டிகை
ரீஃபைன்ட் ஆயில் பொரிக்க‌
செய்முறை:
தேங்காய் பூர‌ண‌ம்:
துறுவின‌ தேங்காய‌ வாணலியில‌ கொட்டி ஈர‌ப்ப‌சை சுண்டுற‌ வ‌ரைக்கும் ந‌ல்லா வ‌த‌க்க‌னும்,தேங்காய் சிவ‌க்க‌ ஆர‌ம்பிச்ச‌தும் அதுல‌ மிக்ஸியில‌ அர‌ச்ச‌ ஏல‌க்காய் சீனிக்க‌ல‌வைய‌ சேர்க்க‌னும்.சீனி தேங்காயோட‌ ந‌ல்ல‌ ஒட்டின‌தும் அதுல‌ பாதாம்,திராட்சைய‌ சேர்த்து ஆற‌ வெக்க‌னும்.
ர‌வா உருண்டை:
இப்ப‌ அடுப்புல‌ ஒரு அடி க‌ன‌மான‌ பாத்திர‌த்துல‌ 5 க‌ப் த‌ண்ணீர் ஊர்றி அதுல‌ ஒரு சிட்டிகை உப்பு,மீதி இருக்க‌ற‌ சீனியையும் சேர்த்து கொதிக்க‌ விட‌னும்.ந‌ல்லா கொதிச்ச‌தும் ர‌வைய‌ கொஞ்ச‌ம் கொஞ்ச‌மா சேர்க்க‌னும்,க‌ர‌ண்டியால‌ ந‌ல்லா கிள‌றி விட்டுக்கிட்டே இருக்க‌னும்,அடி பிடிச்சிட‌ கூடாது,கெட்டியாகாம‌ இருக்க‌ அடுப்ப‌ சிம் ல‌ வெச்சிக்க‌னும்,பிற‌கு அடுப்பை அண‌ச்சிட்டு ர‌வை க‌ல‌வைய‌ லேசான‌ சூட்டோட‌ உருண்டையா செஞ்சிக்க‌னும்,அந்த‌ ர‌வா உருண்டைல‌ லேசா குழி செஞ்சி அதுல‌ தேங்காய் பூர‌ண‌த்த‌ ந‌டுவில‌ வெச்சி ந‌ல்லா மூடி வெச்சி உருட்ட‌னும்,
இப்ப‌ வாண‌லியில‌ என்ணெய் ஊற்றி சூடான‌தும் த‌யாரிச்சி வெச்சிருக‌ற‌ ர‌வா உருண்டைக‌ள‌ எண்ணெயில‌ போட்டு பொன்னிற‌மா பொரிச்செடுக்க‌னும்,அவ்வ‌ள‌வு தான்.இந்த‌ தேங்காய் பூர‌ண‌ ர‌வை உருண்டை ரொம்ப‌ டேஸ்டா இருக்கும்,ட்ரை ப‌ண்ணி பாருங்க‌..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக