
2000 வருசங்களுக்கும் குறைவில்லாம தமிழ் மாதங்கள் வழக்கத்தில இருந்துட்டு தான் இருக்கு.
சித்திரையின் சிறப்பு:
சித்திரையில தான் மல்லிகைப்பூவும், முல்லைப்பூவும் மலருது. மாம்பழமும், பலாவும் இந்த மாதத்துல தான் அதிகமா கிடைக்கும்.
இந்த மாசத்துல தான் வேப்ப மரம் பூக்கும். சங்க காலத்தில் வேப்பம்பூ பூக்குற காலத்தை முகூர்த்த நாளுக்கு சரியான காலமாக கொண்டாடிருக்காங்க,
சித்திரை வழிபாடு:

தமிழரா பிறந்த ஒவ்வொருத்தரும் சித்திரைத் திருநாள கொண்டாடியே ஆகனும்.சித்திரை வருஷப் பிறப்பு அன்னிக்கு அதிகாலையில கண் முழிச்சு வீட்டுல இருக்கற சாமி படங்களுக்கு பூ மாலை சாத்தனும்,அப்புறமா சாமிப்படத்துக்கு முன்னால மனைப் பலகை அல்லது வாழை இலை போட்டு புதுப் பஞ்சாங்கத்தை வைக்கனும். பஞ்சாங்கத்திற்குப் பதிலா விக்ருதி வருஷ காலண்டரை கூட வெக்கலாம்.
மனைப் பலகைக்கு முன்னால இன்னொரு வாழை இலையில சித்திரை மாத அவல் , சர்க்கரைப் பொங்கல், பாயசம், வெண்பொங்கல், வடை அப்புறம் மனசுக்குப் பிடிச்ச இனிப்பு பலகாரங்கள படைக்கனும். விளக்கு ஏற்றி அலங்காரம் செஞ்சு தீப,தூபம் காட்டி தேங்காய் உடைச்சி சாப்பாட்டு வகைகளை நிவேதனம் செஞ்சி சாமி கும்பிடனும்.சாமி கும்பிடும்போது சுலோகம் , தேவாரம் , திவ்ய பிரபந்தம் , விநாயகர் அகவல் இப்படி பட்ட தோத்திரங்கள் சொல்லி வழிபடலாம். அப்புறம் முதல்ல கணபதியை வணங்கி ' சுப ஸ்ரீ விக்ருதி வருஷம்'னு சொல்லி மாசப்பிறப்பை "சித்திரை'னு சொல்லனும்.

பஞ்சாங்கம்னா திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் இப்படி ஐந்தும் சேர்ந்தது தான்.
1.திதி – சந்திரனோட கலைகள்.
2.வாரம் – வார கிழமைகள்.
3.நட்சத்திரம் – காலையில சூரிய உதயம் எந்த நட்சத்திரத்தில வந்தது.
4.கரணம், யோகம் – இது இரண்டும் குறிப்பிட்ட கால அளவுகளோட பேர்கள் தான்.சாஸ்திரம் நல்லா அறிஞ்சவங்க இதை சரியாகணக்கிட முடியும்.
5."வாரத்தைச் சொல்றதால ஆயுள் வளரும்; திதியைச் சொல்றதால ஐஸ்வர்யம் கிடைக்கும்; நட்சத்திரத்தை உச்சரிக்கறதால பாவங்கள் நீங்கும்;
6.யோகத்தைக் சொல்றதால நோய் குணமாகும்; கரணத்தைச் சொல்றதால நினச்ச காரியம் நடக்கும்"னு சாஸ்திரம் சொல்லுது.
பிறகு எல்லா தெய்வங்களையும் வேண்டி " இந்த விக்ருதி வருசம் எல்லா உயிர்களுக்கும் நன்மையைத் தர அருள் செய்"னு சாமிக்கிட்ட நல்லா பிரார்த்தனை பண்ணிட்டு விபூதி அல்லது குங்குமத்தை பக்தியோட நெற்றியில பூசிட்டு கற்பூர ஆரத்தி காட்டி வழிபாட்ட முடிச்சுனும்.
வீட்டுல சாமி கும்பிட்ட பிறகு கோயிலுக்குப்போய் சாமி கும்பிடலாம்.
சித்திரை திருநாளுக்கு அவல் , வேப்பம் பூ பச்சடி மாதிரியான உணவு வகைகளைச் செய்து சாமிக்கு படைச்சு நாமளும் சாப்பிட்டு சந்தோசமா இருக்கனும்..

சித்திரை அவல்:
சித்திரத் திருநாள் அன்னிக்கு அவல், வெல்லம், நெய் கலந்த இனிப்பு செய்வாங்க. வருசம் முழுசும் சந்தோஷம் மட்டுமே வரனும் என்பதற்காக இந்த சித்திரை அவலை கடவுளுக்கு படைக்கிறோம்.
வேப்பம்பூ பச்சடி:

சித்திரைத்திருநாள் அன்னிக்கு படைக்கப்படற விசேஷ சமையல்னா அது வேப்பம்பூ பச்சடி தான்ம். ஏன்னா காரணம் இருக்கு,இன்பமும் துன்பமும் சேர்ந்த மேடு பள்ளம் நிறைந்தது தான் நம்மோட வாழ்க்கை . இந்த நிலையில்லாத வாழ்க்கையில இன்பத்தை மட்டுமே நினைச்சு மற்றவங்களுக்கு துன்பம் செய்யகூடாது அப்படிங்குறதையும்,இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும் சங்கடப்படாம எல்லாத்தையும் சமமா எடுத்து வாழ பழகிக்கனும்ங்குறதுக்காகத் தான் இந்த வேப்பம் பூ பச்சடி.
தேவையான பொருட்கள்:
மாங்காய் -2
வெல்லம் -கோலி குண்டு அளவு
தேங்காய் – கால் மூடி
புளி – எலுமிச்சை அளவு
உப்பு -தேவையான அளவு
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன் (ஊற வெச்சது)
ஏலப்பொடி – 1 சிட்டிகை
பச்சைமிளகாய்- 2
மிளகாய் பொடி – 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய்- 2 ஸ்பூன்
கடுகு -1 சிட்டிகை,
செய்முறை:
மாங்காயை தோல் சீவிட்டு ஊறுகாய்க்கு துருவுறது மாதிரியோ,அல்லது மிக்ஸியில தூளாக்கி வெச்சுக்கனும்.வெல்லத்தை பொடியாக்கி ஏலம் சேர்த்து, கொஞ்சமா தண்ணீர் சேர்த்து கரைச்சு அடி கனமான வாணலியில் லேசான பாகா காய்ச்சிக்கனும். பாகை ஸ்பூனால் ஊற்றினால் ஊற்ற வரனும்.அதை அப்படியே இறக்கி ஆற வைக்கனும், இன்னொரு பக்கம் கொஞ்சமா தண்ணீர் விட்டு கடலப்பருப்பை வேக வைக்கனும்,முக்கால் அளவு வேக ஆரம்பிச்சதும் அரைச்ச அல்லது துருவின மாங்காய்,அதோட நறுக்கி வெச்சிருக்கற தேங்காயையும் சேர்த்து தண்ணீர் வத்துற வரைக்கும் கருகாம வதக்கனும்,
இன்னொரு வாணலியில ரெண்டு ஸ்பூன் நல்லெண்ணெயில கடுகு தாளிச்சு, வேப்பம் பூவை கசப்பு வாசனை வருகிற வரைக்கும் நல்லா வறுத்துக்கனும்.. வேப்பம் பூ நல்லா வறுபடும் போது தனியா எடுத்து அப்படியே வெல்லப்பாகுல மாங்காய், தேங்காய், வேப்பம்பூ கலவையை சேர்த்ததும், இரண்டு நிமிசம் கொதிக்க விட்டு அடுப்பை அணைத்துச்சுடனும் . அதோட வெல்லப்பாகை சேர்க்கனும்.ரொம்ப நேரம் வெல்லத்தை கிளறிட்டிருக்காம, தண்ணீர் சுண்டுனதும் அடுப்பை சிம்'ல் வெச்சுட்டு உப்பு, மிளகாய்ப் பொடி , வேப்பம் பூ எல்லாத்தையும் போட்டு ஒரு தரம் திருப்பி விட்டு வாணலியை இறக்கிடனும்.
குறிப்பு: வெல்லப் பாகு லேசா கொஞ்சம் ஆறினதும் ஒரு ஸ்பூன் நெய் விட்டு திருப்பினால், நெய்யிலேயே செய்தா மாதிரி இருக்கும்.
மலபார் பழ பால் பாயசம்:

தேவையான பொருட்கள்:
பால் - 1லிட்டர்
வாழைப்பழம் -4
சாதம் -அரை கப்
முந்திரி பருப்பு- 10
ஏலக்காய் -1 சிட்டிகை
நெய் -50 கிராம்
சர்க்கரை -1 டம்ளர்
செய்முறை:
பாலை அடுப்பில வெச்சு பொங்கி வருகிற வரைக்கும் சூடு பண்ணி இறக்கி வெச்சுக்கனும் . அப்புறமா சாதத்தை கொதிக்கிற பால் பாத்திரத்துல போட்டு சூடு பண்ணனும். கொஞ்சம் கொதிக்க ஆரம்பிச்ச உடனே அதுல சர்க்கரையை சேர்த்து நல்லா கிண்டி விடனும்,அடுப்பு சிம்'ல தான் இருக்கனும்.
நெய்யில முந்திரிப் பருப்பை போட்டு வறுத்து வெச்சு எடுத்து வெச்சுக்கனும், ஏலக்காயை பொடி செஞ்சுக்கனும்.பாலும் சாதமும் நல்லா கலக்குற வரைக்கு கொதிக்க விடனும்.அதுக்கப்புறமா பால் சாதக் கலவையை இறக்கி வெச்சு முந்திரிப் பருப்பையும் ஏலக்காயையும் போட்டு கலக்கனும்.
வாழைப்பழத்தை ரொம்ப சின்ன சின்னதா வெட்டி பால்,சாதம் கலவையோட சேக்கனும் இப்ப மலபார் பழ பால் பாயசம் ரெடி.
குறிப்பு: உங்கள் விருப்பம் போல எந்த பழத்தையும் சேர்த்து பாயாசம் செய்யலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக