
அட இதென்ன துளசி பக்கோடா புதுசா இருக்கேன்னு பாக்கறீங்களா..சின்ன வயசுல எங்கம்மா எங்களுக்கெல்லாம் சளி பிடிச்சிடக்கூடாதுனு தூதுவளை இலையில ரசம் பண்ணி கொடுப்பாக..ஆனா நாங்க அத சாப்பிட்டா தானே..ம்ஹூம்..அதுக்கு என்ன பண்ணுவாங்கன்னா தூதுவளை இலைவெச்சு பஜ்ஜி செஞ்சி கொடுப்பாங்கா..ம்ம்ம்..நல்லா இருக்கும்,அப்படித்தான் இந்த துளசி பக்கோடாவும்..இந்த பனிக்காலத்துக்கு ஏற்றது,
தேவையானவை
கடலை மாவு 1 கப்
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
வத்தல் தூள் 1 ஸ்பூன்
மிளகாய் 2
கொத்தமல்லி தழை,கருவேப்பிலை 1 கைப்பிடி
பொடியா நறுக்கின வெங்காயம் 1/4 கப்
துளசி 1/4 கப்
சமையல் சோடா 1/2 ஸ்பூன்
உப்பு,சமையல் என்ணெய் தேவையான அளவு
செய்முறை
கடலை மாவோட இஞ்சி பூண்டு விழுது,வத்தல் தூள்,உப்பு,சமையல் சோடா எல்லாம்சேர்த்து நல்லா கலந்துக்கனும்,அதுல நறுக்கின மிளகாய்,வெங்காயம்,மல்லித்தழை,கருவேப்பிலை துளசி சேர்த்து தேவையான் தண்ணீர் சேர்த்து கெட்டியா பிசஞ்சிக்கனும்,கடாயில என்ணெய் காய வெச்சு பிசரி வெச்சிருக்கற மாவை உதிர்த்த மாதிரி போட்டு வெந்ததும் எடுத்து வெச்சா அடடா...

1 கருத்து:
வணக்கம்,,நிஜமாகவே சூப்பரா..கருத்து சொன்னதுக்கு நன்றி...
கருத்துரையிடுக