வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

அயிரை மீன் குழ‌ம்பு


அயிரை மீன்... அட‌ இதை கேட்டாலே நிஜ‌மா நாக்குல‌ எச்சில் ஊறுது...ஏன்னா அம்புட்டு ருசி,,ஈச‌ல் அள‌வுள‌ இருக்க‌ற‌ அயிரையை ம‌ற்ற‌ மீன்க‌ளை போல‌ த‌ண்ணீருல‌ போட்டு அல‌ச‌ முடியாது.பொடி மீனுங்குற‌துனால‌ ப‌சும்பாலில‌ போட்டு கொஞ்ச‌ நேர‌ம் பால் ஊற்றி நீந்த‌ விட‌னும்.பாலை குடித்த‌ அயிரை உள்ளே இருக்கும் அசுத்த‌த்தை க‌க்கிட்டு உயிரை விட்டுடும்,,இப்ப‌ மீன் சுத்த‌மாகிடும்,,இதுக்குத்தான் பால்.ஹோட்ட‌ல்ல‌ எப்ப‌டி அயிரை மீன் குழ‌ம்பு வெக்கிறாங்க‌னு பார்க்க‌லாம்.

தேவையான‌வை

அயிரை மீன் 1 கிலோ
வ‌த்த‌ல் 15,கார‌மா வேணும்னா இன்னும் கொஞ்ச‌ம் வ‌த்த‌ல் சேர்த்துக்க‌லாம்,
ம‌ல்லி 25கிராம்
சீர‌க‌ம் 1/2 ஸ்பூன்
தேங்காய் 2
புளி 200
ந‌ல்ல‌ எண்ணெய் 200
ம‌ஞ்ச‌ள் தூள் 1 சிட்டிகை


செய்முறை:

முத‌ல்ல‌ ம‌ல்லி,வ‌த்த‌ல்,சீர‌க‌ம் மூன்றையும் என்ணெயில‌ வ‌றுத்து அரைச்சிக்க‌னும்,ஒரு கிலோ மீனுக்கு 2 தேங்காங்குற‌ க‌ண‌க்குல‌ அரைச்சு பால் எடுத்துக்க‌னும்.பிற‌கு 200 ,கிராம் புளியை த‌ண்ணீருல‌ க‌ரைத்த்டு அதுல‌ அரைத்த‌ ம‌சாலாவை சேர்க்க‌னும்..இதெல்லாத்தையும் ஒரு வாணலியில‌ போட்டு மித‌மான‌ தீயில‌ கொஞ்ச‌ம் உப்பு சேர்த்த்டு ந‌ல்லா கொதிக்க‌ வைக்க‌னும் ,ந‌ல்லா கொதிச்ச‌தும் ந‌ல்லெண்ணெயை அது மேல‌ ஊற்ற‌னும்,அதுவும் கொதிக்க‌ ஆர‌ம்பிச்ச‌தும் பால் விட்டு க‌ழுவின‌ மீனை குழ‌ம்பில‌ போட‌னும்..மீன் ந‌ல்லா த‌ள‌ த‌ளனு கொதிச்சு வெந்து க‌ம‌ க‌ம‌ ம‌ண‌ம் வ‌ந்த‌தும் லேசா ம‌ஞ்ச‌ள் தூளை தூவி ஒரு கொதி கொதிக்க‌ விட்டு க‌டைசியில‌ ஒரு கைப்பிடி ம‌ல்லித்த‌ழை தூவி எடுத்தால் அயிரை மீன் குழ‌ம்பு ரெடி..

2 கருத்துகள்:

Shan Nalliah / GANDHIYIST சொன்னது…

GREAT! WELL DONE! PLEASE CONTINUE!GREETINGS FROM NORWAY! OH I LIKE TO VISIT THIRUNELVELY AND EAT THIS CURRY!

kitchen queen சொன்னது…

ரொம்ம்ம்ம்ம்ம்ப‌ ந‌ன்றி..திரு.ஷ‌ன் ந‌ல்லையா அவ‌ர்க‌ளே..நீங்க‌ தான் என‌க்கு முத‌ல் முத‌லா க‌ருத்துரை இட்டிருக்கீங்க‌..

கருத்துரையிடுக