
தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
பொடியா நறுக்கின வெங்காயம் - 30 கிராம்
ரொம்ப பொடியா நறுக்கின காரட - 50 கிராம்
பச்சை பலட்டாணி -20 கிராம்
பொடியா நறுக்கின தக்காளி - 30 கிராம்
நல்லெண்னெய் - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 2 கிராம்
உப்பு - தேவைக்கு
கொத்தமல்லி தழை - கொஞ்சம்
செய்முறை:
வாணலியில் எண்ணெயை காய வெச்சு சீரகத்தை போட்டு தாளிச்சதுக்கப்புறமா நறுக்கின மிளகாய்,வெங்காயத்தை போட்டு வதங்க வைத்து 2 கப் தண்ணீர் ஊத்தி அதுல கேரட்,பட்டாணி போட்டு கொதிக்க வைக்கனும்.
இப்ப தனியா சலிச்சு லேசா வறுத்த ரவைய கொதிச்சிட்டிருக்கற தன்ணீருரோட கலந்து உப்பை போட்டு கிளரி விடனும். கிச்சடி நல்லா குழைஞ்சி வர்ர பதத்துல தக்காளிய போட்டு அது கூடவே கொத்த மல்லி தழைய போட்டு பிரட்டி இறக்கி பரிமாறனும்..இதுக்கு தொட்டுக்க தனியா எதுவும் சேக்காம இருக்கரது ரொம்ப நல்லது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக