
நகமும்,சதையும் மாதிரி,பூவும் நாரும் மாதிரி,கணவனும் மனைவி மாதிரி தான் இட்லியும் சட்னியும்,சரியான பொருத்தம்.என்னதான் தேங்காய் சட்னி,தேங்காய் பொட்டுக்கடலை சட்னி,தக்காளி சட்னி,புதினா சட்னி,கொத்தமல்லி சட்னி சாப்பிட்டாலும் இன்னும் கொஞ்சம் நாக்குக்கு ருசியான காரசாரமான சட்னியை செஞ்சா யாராவது வேணாம்னு சொல்லுவாங்களா ம்ஹூம்..
இப்ப நான் உங்க எல்லாருக்கும் ஆந்திரா தக்காளி சட்னி செஞ்சி தரட்டுமா..இதை கத்துக்கொடுத்தது என் சின்ன வயசு பெரிய வயசு தோழி சுபாக்கா..இப்ப அவங்க சென்னையில...

தேவையான பொருட்கள்:
தக்காளி - 1/2 கிலோ
புளி - எலுமிச்சை அளவு
பூண்டு - 2 பல்
காய்ந்த மிளகாய் (வத்தல்) - 7 (காரம் வேணும்னா இன்னும் சேர்த்துக்கலாம்)
உப்பு தேவையான அளவு
தாளிக்க:
ரீஃபைண்ட் ஆயில் - 2ஸ்பூன்
கடுகு - 1டீஸ்பூன்
கருவேப்பிலை - சிறிது
செய்முறை:
முதல்ல தக்காளி+புளி ரெண்டையும் கொஞ்சமா தண்ணீர் சேர்த்து நல்லா அவிச்சி எடுத்து ஆற வெச்சுக்கனும்,இப்ப வர மிளகாய்,பூண்டு,ரெண்டையும் லேசான எண்ணெய் விட்டு வறுத்து எடுத்துக்கனும்,இப்ப மிக்ஸியில அவிச்சி எடுத்த தக்காளி,புளி,வறுத்தெடுத்த வத்தல்,பூண்டு,கொஞ்சம் உப்பு சேர்த்து நல்லா அரைச்சுக்கனும்,,
இப்ப வாணாலியில எண்ணெய் விட்டு கடுகு,கருவேப்பிலை தாளிச்சி அதுல அரைச்ச விழுது சேர்த்து லேசா தள தள வந்ததும் சூடா எடுத்தா ஆந்திரா தக்காளி கார சட்னி ரெடி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக