
பழங்கள்ள மட்டும் தான் எல்லா சத்துக்களும் நிறைஞ்சிருக்கு.அதுலயும் ஆரஞ்ச் பழம் பெஸ்ட்னு சொல்லலாம்.ஒரு ஆரஞ்ச் பழம் மூனு கப் பாலுக்கு சமம்.ஆரஞ்ச் தோலில் இருந்து புற்று நோய்க்கான மருந்துகள் தயாரிக்கப்படுது.இதய நோயாளிகள் ஆரஞ்ச் சாறா குடிக்கலாம்.
ஆரஞ்ச் பழத்துல விட்டமின் சி,சோடியம்,பொட்டாசியம்,மங்கனீசியம்,காப்பர்,சல்ஃபர்,குளோரின் எல்லாம் இருக்கு.ஆரஞ்ச் சாறு குடிச்சா உடனே சக்தி கிடைக்கும்.

ஆரஞ்ச் சூஃப்ளே:
பேர் கேட்டா சீன ரெசிபியோனு நினைக்காதீங்க.நம ஊருல உள்ளது தான்.
தேவையான பொருட்கள்:
ஆரஞ்ச் 6(ஜூஸ் எடுத்து ரெடியா வெச்சுக்கனும்)
முட்டை 2
பொடித்த சீனி 1 கப்
ஃப்ரெஸ் க்ரீம் 2 கப்
ஆரஞ்ச் பழச்சுளை 1 கப்
ஆரஞ்ச் எசென்ஸ் 2 டீஸ்பூன்
ஆரஞ்ச் கலர் 1/2 டீஸ்பூன்
ஆரஞ்ச் ஜெலட்டின் 10 கிராம்
செய்முறை:
முட்டையை மஞ்சள் கரு தனியாகவும்,வெள்ளைக்கருவை தனியாகவும் பிரிச்சுக்கனும்.மஞ்சள் கருவையும்,1 கப் சீனியையும் ஒண்ணா அடிச்சுக்கனும்.
அடுப்பில் ஒரு வாயகன்ற பாத்திரத்துல தண்ணீர் கொதிக்க விடனும்,இப்ப மஞ்சள் கரு+சீனி கலவையோட பாலையும் சேர்த்து அதை ஒரு கிண்னத்துல ஊற்றி கொதிச்சிட்டிருக்கிற தண்ணியுள்ள பாத்திரத்துக்குள்ள வெச்சு கரண்டியால கிளரி விடனும்.
இப்ப அடுப்பில் இருந்து கீழே கலவையை எடுத்து வெச்சிட்டு அதோட க்ரீமை கொட்டி நல்லா அடிச்சுக்கனும்.அதுக்கப்புறமா ஒரு டம்ளருல ஆரஞ்ச் ஜெலட்டினோட கொஞ்சமா வெந்நீர் கலந்து கொதிக்குற தண்ணீர் உள்ள பாத்திரத்துல வெக்கனும்,இப்படி கரைச்ச ஜெலட்டினையும்,முட்டை வெள்ளைக்கருவையும் ரெடியா இருக்கற மஞ்சள் கரு +சீனி+க்ரீம் கலவையோட சேர்த்து நல்லா அடிச்சுக்கனும்
கடைசியா ஆரஞ்ச் கலர்,ஆரஞ்ச் எசென்ஸ்,ஆரஞ்ச் பழத்துண்டுகளையும் கலந்து ஒரு பாத்திரத்துல வெச்சு ஃப்ரிட்ஜ்ஜில் 4 அல்லது 6 மணி நேரம் செட் பண்ணினா ஆரஞ்ச் சூஃபி ரெடி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக