
தேவையான பொருட்கள்:
தயிர் -1 கப்
தேங்காய் துருவல் -1/2 கப்
சீரகம் -2 டேஸ்பூன்
பச்ச மிளகாய் -3
உப்பு -தேவையான அளவு
கொத்தமல்லித்தழை (நறுக்கினது)-கொஞ்சம்
தாளிக்க:
எண்ணெய்- 2 ஸ்பூன்
கடுகு -1/2 டீஸ்பூன்
கருவேப்பிலை -கொஞ்சமா
செய்முறை :
தயிரை மிக்ஸியில் போட்டு நல்லா அடிச்சுக்கனும்.இப்ப தேங்காய்,பச்ச மிளகாய், சீரகம்,மஞ்சள் பொடி எல்லாம் சேர்த்து கொஞ்சம் நல்லாவே அரைச்சிக்கனும்.
வாணலியில எண்ணெயை சூடாக்கி கடுகு,சீரகம்,கருவேப்பிலை சேர்த்து தாளிச்சிக்கனும்.
அதோட அரைச்ச விழுதை சேர்த்து நல்லா பச்சை வாசனை போகுற வரை நல்லா கிளரனும்,ஒரு கப் தண்ணீர் சேர்த்துக்கலாம்,இப்ப அரைச்ச விழுதும்,தண்ணீரும் சேர்ந்து கொதிச்சி வரும்போது தயிரை சேர்க்கனும்,தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துக்கனும்.இப்ப தயிர் சேர்க்குற நேரத்துல அடுப்பை சிம்'மில வெச்சுக்கனும், கடைசியா நறுக்கின மல்லித்தழையை சேர்த்தா மோர்க்குழம்பு ரெடி.
மோர் குழம்போட அவிச்சு வெச்ச தடியங்காய்,வதக்கின வெண்டைக்காய் இப்படி எந்த காயை வேணும்னாலும் சேர்த்துக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக