
நம்ம வீட்டுல வழக்கமா அம்மா,ஆச்சி எல்லாரும் வழக்கமா செய்யற அரிசி வடகம் தான் இப்ப நாம செய்ய போகுறது..ஆனா எண்ண மணம் தெரியுமா..
தேவையான பொருட்கள்:
பச்சரிசி -1 கிலோ
பச்ச மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் வத்தல்- 20
உப்பு -தேவையான அளவு
சீரகம் -4 ஸ்பூன்
செய்முறை:
ஒரு கிலோ பச்சரிசியை ஒரு மணி நெரம் ஊற வெச்சு கழுவி அதோட மிளகாய் அல்லது காய்ந்த மிளகாய் வத்தல் சேர்த்து நல்லா அரைக்கனும்,அப்புறமா சீரகம்,உப்பு,ஒரு மூனு லிட்டர் தண்ணீர் சேர்த்து மாவை தோசை மாவு பதத்துக்கு கரைச்சு முறுக்கு அச்சில போட்டு மொட்டை மாடியில காய வெச்சுட வேண்டியது தான்,,மூனு நாளுல காய்ஞ்சிடும்.முக்கியமா இதை லேசான தியில தான் பொரிக்கனும்,கவனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக