
நமக்கு மட்டும் சாப்பாட்டுல சாய்ஸ்'னு இல்லாம கடவுளுக்கும் உன்டு,சிவனுக்கு பிடிச்சது கத்தரிக்காய் கொத்ஸூ,பிள்ளையாருக்கு கொழுக்கட்டை,லட்டு,அம்பாளுக்கு பால் பாயாசம்,முருகனுக்கு தினை மாவு,பஞ்சாமிர்தம்,வெங்கடாசலபதிக்கு புளியோதரை,ததியோன்னம் அப்படின்னு ஸ்ட்ரிக்டா பக்தர்கள்கிட்ட சொல்லிட்டாங்க,மீறமுடியுமா..
நாமெல்லாம் ஒரு பண்டிகை வந்துடுச்சின்னா குளிச்சி,மணிக்கணக்கா கொழுக்கட்டையும், போளியும்,வடையும்,புளியோதரையும் செய்யறோம்.

ஆனா கல்கத்தாவுல எல்லாம் வீடா இருந்தாலும்,கடையா இருந்தாலும் சரி "தூர்பேடா, சந்தேஷ்'னு வாயில நுழையாததை எல்லாம் வாங்கி நைவேத்யம் பண்ணிடுவாங்க . அங்கே அதிகமா காளியும்,துர்க்கையும் பெண் தெய்வங்களாகவே இருக்கறதால பெண்களோட கஷ்டம் புரியுதோ என்னவோ..

கொல்கத்தா ஸ்பெஷல் மட்டுமில்லாம சூப்பரான ஸ்வீட்டுனா அது "லேடி கினி" இந்த பேர் வருகிறதுக்கு கூட ஒரு கதை இருக்கு தெரியுமா.

அதாவது 18ஆவது ந்நூற்றாண்டுல பிரிட்டிஷ் கமிஷனரா இருந்த கானிங் பிரபுவோட மனைவி பெயர் லேடி கானிங்,அது சரி.. ஒரு இந்திய உணவுக்கு எதுக்காக பிரிட்டிஸ் பொன்ணோட பெயர் வெச்சிருக்காங்கனு தோணுதுல்ல..
காரணம் இருக்கு..பிரபுவோட மனைவியை கௌரவிக்குறதுக்காகவே ஒரு ஸ்வீட் அறிமுகமானது,அதனால தான் அவங்க பெயரே ஸ்வீட் பெயர் ஆகிப்போச்சு,ஆக்சுவலி இந்த ஸ்வீட் பெயர் "மால்புவா"..இ ந்த லேடி கானிங் சாப்பிட்டதால தான் 'லேடி கினி'னு மாறிப்போச்சு,, லேடி கானிங் அவங்க ஊருக்கு கிளம்பி போகும்போது பெட்டி பெட்டியா இந்த ஸ்வீட்ட அள்ளிக்கிட்டு போனாங்களாம்,,
"லேடி கினி"எப்படி சமைக்கலாமனு பாக்கலாமா..

தேவையான பொருட்கள்:
மைதா - 2 கப்
நெய் -2 டேபிள் ஸ்பூன்
பெருஞ்சீரகம் -1 டீஸ்பூன்
ரவை -1 ஸ்பூன்
பால் -3/4 கப்
நெய் அல்லது எண்ணெய்- தேவையான அளவு
பாகு தயாரிக்க:
சர்க்கரை -2 கப்
தண்ணீர் -7 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு- 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
தண்ணீரோட சர்க்கரை,எலுமிச்சைச்சாறு எல்லாம் கலந்து அடுப்பில வெச்சு காய்ச்சுக்கனும் ,ஆனா ஒண்ணு கம்பிப்பாகா இருக்கக்கூடாது,முதலிலேயே கவனமா இறக்கிடனும்,
மைதா,நெய்,பால்,பெருஞ்சீரகம் எல்லாத்தையும் நல்லா கலந்துக்கனும்,ஏன் பெருஞ்சீரகம் போடறோம்னா இது தான் மால்புவாவுக்கு தனி மணத்தை கொடுக்கும்,
அடுப்பை பத்த வெச்சிட்டு நெய் அல்லது என்ணெயை வாணலியில சூடாக்குனதுக்கு அப்புறமா ஒரு கரண்டியால மைதா கலவையை சூடான எண்ணெயில வட்ட வட்டமா ஊற்றி பொரிச்செடுக்கனும், கூடுமான வரைக்கும் மெல்லிசா சுட்டெடுத்தா நல்லது, ரெண்டு பக்கமும் நல்லா சிவக்க வெச்சு மொறு மொறு பதத்துல எடுத்து நேரா பாகுல எடுத்து போட்டுடனும்.
நல்லா பாகுல ஊறினதும் "லேடி கினி"யை அப்படியே ருசிச்சி சாப்பிட வேண்டியது தான்..எப்படி இருக்குனு வீட்டுல செஞ்சி பார்த்துட்டு சொல்லுங்கோ காத்திட்டிருக்கேன்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக