வியாழன், 15 ஏப்ரல், 2010

மாங்காய் சாத‌ம்



மாங்காய்..ஷ்ஷ்ஷ்... ஆஆ... நாக்குல‌ எச்சில் ஊருதும்மா.. அட‌ என்ன‌ டேஸ்ட் ... அட‌டா.. இதை எழுதும்போது கூட‌ என‌க்கு நிஜ‌மாக‌வே எச்சில் வ‌ருது.. மாங்காயிலேயே கிளி மூக்கு மாங்காய்,புளிப்பு மாங்காய்,ப‌ங்க‌ன‌ ப‌ள்ளி,இனிப்பு மாங்காய்,இப்ப‌டி ப‌ல‌ வ‌கைக‌ள்.. இருந்தாலும் மாங்காய‌ஓட‌ வ‌ர‌லாற‌ பாக்க‌ல‌னா எப்ப‌டி..

மாங்காய் வ‌ர‌லாறு:


இந்தியாவோட‌ வேதங்களில் "மா" பற்றிய குறிப்புகள் நிறைய‌ இருக்கு,இதை கடவுள்களோட‌ உணவாகக் குறிக்கிறாங்க‌. மேங்கோ(Mango) இந்த‌ ஆங்கிலப் பெயர் 'மாங்காய்' என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து திரிந்து உருவானது. அதோட‌ மாம்பழம் முக்கனிகள்ள‌ ஒன்று.

இந்தியாவில், மாம்பழங்கள் சுமார் கி.மு 4000 ஆண்டிலேயே பயன்படுத்தப்பட்டிருக்கு. 1800 களில் ஆங்கிலேயர்கள் மாம்பழத்தை ஐரோப்பாவுக்கு அறிமுகம் செய்தாங்க‌.
அதுக்கு முன்னாடி, ஃபிரென்சு , போர்ச்சுகீசிய வியாபாரிகள் மாம்பழத்தை பிலிப்பைன்ஸ், மெக்சிகோ, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் அறிமுகம் செய்தாங்க‌ளாம்.



அது ச‌ரி, கர்ப்பிணிகள் மாங்காய் சாப்பிடுவது ஏன்னு உங்க‌ளுக்கெல்லாம் தெரியுமா..

ஒரு பெண்ணோட‌ வயிற்றில் கரு வளரும் போது முதல்ல‌ இதயம் தான் வளரும். இதயம் வளர்வதற்குத் தேவையான சத்துப் பொருள் மாங்காயில் அதிகம் அடங்கியிருக்கு. இதயம் வளரத் தேவையான சத்துப் பொருள் தேவைப்படும் போது அந்த‌ தேவையை நாக்கோட‌ சுவையரும்புகள் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தெரிவிக்குது. அதனால் உந்தப்பட்டு கர்ப்பிணிப் பெண்கள் மாங்காயை விரும்பிச் சாப்பிடுகின்றாங்க‌..க‌ண்டு பிடிச்சிட்டேனா.

ச‌ரி இந்த‌ மாங்காய்க்கு இவ்வ‌ள‌வு பில்ட் அப் எதுக்கு தெரியுமா..மாங்காய் சாத‌த்துக்கு தான்..என்னெல்லாம் ப‌ண்ண‌ வேண்டியிருக்குப்பா..



தேவையான‌ பொருட்க‌ள்:

சாத‌ம் -1 க‌ப்
மாங்காய் துருவ‌ல் -1/2 க‌ப்
வ‌த்த‌ல் -4
க‌டுகு,உளுத்த‌ம் ப‌ருப்பு த‌லா- 1/4 ஸ்பூன்
வேர் க‌ட‌லை -1 ஸ்பூன்
க‌ட‌லை ப‌ருப்பு -1 ஸ்பூன்
காய‌ப்பொடி -1 சிட்டிகை
இஞ்சித்துருவ‌ல்- 1 ஸ்பூன்
க‌ருவேப்பிலை -10 இலை
உப்பு -தேவையான‌ அள‌வு
எண்ணெய் -2 ஸ்பூன்

செய்முறை:

சாத‌ம் உதிரியா இருக்க‌ குக்க‌ருல‌ இருந்து சாத‌ம் எடுத்த‌தும் ஒரு பாத்திர‌த்துல‌ கொட்டி ந‌ல்லெண்ணெய் 1 ஸ்பூன் சேர்த்து கிள‌ரி ஆற‌ வெச்சிட‌னும்,

அடுப்பை ப‌த்த‌ வெச்சு வாண‌லி சூடான‌தும் எண்ணெய் விட்டு க‌டுகு ,உளுத்த‌ம் ப‌ருப்பு ,க‌ருவேப்பிலை ,கிள்ளின‌ வ‌த்த‌ல் சேர்த்து தாளிச்சிட்டு அதோட‌ க‌ட‌லை ப‌ருப்பு ,வேர்க‌ட‌லை சேர்க்க‌னும் ,லேசான‌ பொன்னிற‌மான‌தும் மாங்காய்
துருவ‌ல் , இஞ்சித்துருவ‌ல் சேர்த்து ந‌ல்ல‌ ப‌ச்ச‌ வாச‌னை போக‌ ந‌ல்லா வ‌த‌க்கி வாணலியை கீழே இற‌க்கி வெச்சுக்க‌னும்,

க‌டைசியா உதிரியான‌ சாத‌ம்,உப்பும் சேர்த்து லேசா கிளரி ம‌ல்லித்த‌ழை தூவினா மாங்காய் சாத‌ம் ரெடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக