
சாதாரண கடைகள்ள கிடைக்கிற எலுமிச்சை பழத்துக்கு ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருக்கு தெரியுமா..அவசரத்துக்கு வீட்டுல எலுமிச்சை வைத்தியம் செஞ்சி பாக்கலாம்,டாக்டடை தேடி ஓடாம வீட்டுலேயே மருத்துவம் செஞ்சுக்கலாமா..

*.எலுமிச்சை பழத்தை ரெண்டா வெட்டி நெற்றிப்பொட்டுல வெச்சு லேசா தேய்ச்சா தலைவலி பறந்து போயிடும் ஆனா ஒண்ணு காய்ச்சல் இருக்கும்போது இதை தவிர்த்துடனும்.

*.வயிற்றுப்போக்கு அதிகமானா உடல் சோர்வு,பலஹீனம்,குமட்டல்,தாகம் அதிகமா இருக்கும்.இந்த சமயத்துல எலுமிச்சைச்சாறு குடிச்சா உடனே நிவாரணம் கிடைக்கும்.

*.கோழிமுட்டையில நெல்லிக்காய் அளவு எடுத்து எலுமிச்சை சாற்றுல கலந்து கொஞ்சம் இஞ்சி சேர்த்து காலையிலயும்,சாயங்காலமும் சாப்பிட்டு வந்தா ஈளை இருமல் சரியாகிடும்.

*.எலுமிச்சை இலையை குட்டி குட்டியா வெட்டி நீர்மோருல சேர்த்துசாப்பிடலாம்,ஏன்னா இதுல விடமின் "சி" இருக்கு.

*.தேள் கடிச்ச இடத்துல எலுமிச்சை பழத்தை வெட்டி அந்த சாறை கடிவாயில வெச்சு தேய்க்கனும், எரிச்சல் குறைஞ்ச பிறகு டாக்டர்கிட்ட காண்பிக்கலாம்.

*.வெந்நீருல எலுமிச்சை சாறை கலந்து குடிச்சா மலச்சிக்கல் சரியாகிடும்.

*.கர்ப்பிணி பெண்களுக்கு வாய் மளு,மளு நு இருந்தா எலுமிச்சை பழத்த குட்டி,குட்டி துண்டா வெட்டி கொதிக்குற தண்ணீருல போட்டு ,லேசான சூட்டுல அந்த தண்ணீர குடிச்சா நலா இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக