
பேரக் கேட்டதும் காஸ்ட்லியோ_னு பயந்த்டாதீங்க.இது உங்க கிச்சனுல வேணாமுனு ஒதுக்கி மூலையில கிடக்குற ரெண்டு காய்கள் தான் ஒரு புத்துணர்ச்சி தரக்கூடிய ஜூஸைத் தரப்போகுது.
தேவையானவை:
செள செள அதாங்க பெங்களூர் கத்தரிக்காய் - 1
முள்ளங்கி - 1
தேன் - 2 ஸ்பூன்
(நீரழிவு நோய் உள்ளவங்க உப்பு,மிளகுப்பொடி சேர்த்துக்கலாம்)
செய்முறை:

செள செள காயோட தோலை சீவி,நடுப்பகுதியில இருக்கற விதையை எடுத்துட்டு சுத்தம் செஞ்சி நறுக்கிக்கனும்.முள்ளாங்கியோட தோலையும் சீவி துண்டு துண்டா நறுக்கிக்கனும்.ரெண்டு காய்களையும் மிக்ஸியில போட்டு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அடிச்சுக்கனும்,வடிகட்டி அந்த சூஸோட தேன் சேர்த்து குடிச்சா உடல் சூடெல்லாம் ஓடோடி போயிடும்,ஜில்லுனு இருக்க ஐஸ் கட்டிகள சேர்த்துக்கலாம்.

செள செள காயில கால்சியம் சத்து இருக்கு,மூட்டு வலி, கால்சியம் குறைபாடால கஷ்ட படுறவங்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

அநாவசியம்னு நினைக்கிற முள்ளங்கிக்கு நிறைய பெருமைகள் இருக்கு,வயிறு உப்புசமாகி பசியில்லாம அல்லாடுறவங்க முள்ளங்கியை சாப்பிடலாம்.கல்லீரல்,மண்ணீரலை நல்லா செயல்பட வைக்கும்,நீரழிவு நோய் உள்ளவங்க நிச்சயமா சாப்பிட வேண்டிய காய்.உடம்புல அங்கங்கே வீககம் உள்ளவங்க முள்ளங்கியை சாப்பிட்டா நல்ல பலன் கிடைக்கும்,

அப்புறம் ஒரு விஷயம் என்னனா,உடல் இளைக்கனும் நினைக்கிற குண்டு உடம்புக்காரங்க அடிக்கடி முள்ளங்கியை பயன படுத்தனும்.அதோட சிறுநீரகத்தை முறையா செயல்படவைக்கிற அதிசயக்காய் நம்ம முள்ளங்கி தாங்கோ..அதனால பச்சையா சாலட் போட்டு சாப்பிடலாம்,,எப்பூடீ..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக