
1. நாள் பட்ட அரிசியில வடகம் செஞ்சா பொரிக்கும்போது சிவக்கும்,அதனால புது அரிசியில மட்டுமே வடகம் போட்டா நல்லது.

2. கோடையில நீர்மோர் தயாரிக்கும்போது நீர்மோருல இஞ்சி,பச்சமிளக்கய்க்கு பதிலா கொஞ்சம் மிளகு ரசப்பொடி சேர்த்தா ஜோரா இருக்கும்.

3. கோடையில மாம்பழ மில்க் ஷேக் தயாரிச்சா சூப்பரா இருக்கும்.

4. புளிச்ச மோருல ஒரு ஸ்பூன் கடலை மாவை அரைச்சு விட்டு மிளகாய் ,சீரகம் ரெண்டையும் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கி லேசா மஞ்சள் பொடி சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கினா திடீர் மோர்க்குழம்பு ரெடி.

5. சம அளவுள மில்க்மெய்ட்,பால்,தேங்காபால் மூன்று பொருட்களையும் சேர்த்து அதுல ஏலக்கய்ப்பொடி,திராட்சை,முந்திரி நுங்கு துண்டுகளை போட்டு ஃப்ரிட்ஜில வெச்சா நுங்கு பாயாசம் ரெடி.

6. காய்கறிகளை பைகள்ளா போடு வைக்கும்போது நீர்ச்சத்துள்ள பூசணி,தடியங்காய் மாதிரியான காய்களோட மற்ற காய்களை சேர்த்து வெச்சா எல்லா காய்களும் சேர்ந்து அழுகிப்போயிடும்,அதனால தனித்தனியா போட்டு வெச்சா நல்லது.

7. ஃப்ர்ருட் சாலடுல சுகர் சேர்க்குறதுக்கு பதிலா நாட்டு சர்க்கரை,வெல்லம் சேர்த்தா டேஸ்டும் நல்லா இருக்கும்,இரும்புச்சத்தும் கிடைக்கும்.

8. தினமும் சாதம் வடிக்க அரிசி எடுக்கும்போது கைப்பிடி அரிசியை தனியா எடுத்து ஒரு டப்பவுல போட்டு வெச்சா மாதக்கடைசியில உதவும்.

9. துவரம்பருப்பு வாங்கினதும் கொஞ்சம் தனியா எடுத்து வெச்சிடலாம்.தவிர வாஅரத்துக்கு ஒரு தடவை சாம்பார் வெச்சிட்டு மற்ற நாட்கள்ள கூடு,பொரியல்,பொடி,கலவை சாதம் இப்படி சமைச்சா துவரம்பருப்பு பற்றாக்குரையை சமாளிக்கலாம்,

10. வீட்டுல எப்பவும் கடலை மாவு,மைதா மாவு வாங்கி வெச்சா ரொம்ப நல்லது,ஏன்னா மாசக்கடைசியில வருகிற விருந்தாளிகளை சமாளிக்க இந்த மாவோட வெங்காயம் சேர்த்து பக்கோடா செஞ்சி சமாளிச்சா மாதக்கடைசி ஸ்நாக்ஸ் செலவை குறைச்சுக்கலாம்.

11. தினமும் காஃபிக்கு பதிலா சத்து மாவுக்கஞ்சி,ஓட்ஸ் கஞ்சி சாப்பிட்டா உடம்புக்கும் ஆரோக்கியம்,பர்ஸுக்கும் நல்லது.

12. சீஸன்ல கிடைக்கிற காய்கறிகள்,பழங்களை சாப்பிட குழந்தைகளை பழக்கப்படுத்தினா விலையும் மலிவா இருக்கும்,விலையை கேட்டு நமல்க்கும் மயக்கம் வராது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக