
இப்ப பசங்களுக்கெல்லாம் லீவ் விட்டாச்சு,,செம ஜோல்லியா இருப்பாங்க..ஆனா அடிக்கடி அம்ம பசிக்குது ஏதாவது புதுசா செஞ்சு கோடேன் அப்படினு தொந்தரவு பண்ணுவாங்க..அதுவும் சாயங்கால வேளையில டீ குடிக்கும்போது ஏதாவது சூடா கொடுக்கலனா அவ்வளாவு தான்..அதுக்ககத்தான் இப்ப நான் உங்க எல்லாருக்கும் ஸ்பெஷலா ஈவினிங் டிஃப்ஃன் செஞ்சித்தரப் போறேன்..
தேவையானவை:
கடலை மாவு - 1கப்
அரிசி மாவு -1/2 கப்
பச்ச மிளகாய் -4
தேங்காய் -1/4 கப்
இஞசி -1 துண்டு
தயிர் -1/4 கப்
உப்பு -தேவையான அளவு
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
எண்ணெய் -பொரிக்க
செய்முறை:
தேங்காயையும்,பச்ச மிளகாயையும் நல்ல நைசா அரைச்சுக்கனும்.தயிருல உப்பு,கரம் மசால,அரைச்ச தேங்காய்,மிளகாய் பேஸ்ட்,சேர்த்து நல்ல கலந்துக்கனும்.
இப்ப கடல மாவு,அரிசிமாவு கலவையை மசாலா கலவையோட சேர்த்துக்கனும்.தண்ணீர் அதிகமா சேர்த்துக்க வேணாம்,
வாணாலியில எண்ணெய் விட்டு நல்லா சூடனதும்,உதிரி உதிரியா மாவை போட்டு பொரிச்செடுக்கனும்,கடைசியா பக்கொடாவில தயிரை ஊற்றி ஊற வெச்சு சாப்பிட்டா சூப்பர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக