
உருளைக்கிழங்கு தான் "ஆலு".ஏற்கனவே உருளைக்கிழங்கு தொக்கு பண்ணிருக்குறோமே அப்டினா இது என்னன்னு கேக்கறீங்களா...இதுக்கும் அதுக்கும் சின்ன வித்யாசம் தான்..அது டேஸ்ட். சமைக்க ஆரம்பிக்கலாமா..
தேவையானவை
உருளைக்கிழங்கு -3
தக்காளி -2
பல்லாரி -1
பச்ச மிளகாய்- 3
வத்தல் தூள் -1/2 ஸ்பூன்
மல்லித்தூள் -1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க
கடுகு,உளுத்தம்பருப்பு தலா- 1/4 ஸ்பூன்
கருவேப்பிலை- கொஞ்சம்
செய்முறை
உருளைக்கிழங்கை சதுரமா நறுக்கி கொஞ்சம் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக வெக்கனும்,இப்ப வாணலியில எண்ணெய் காய வெச்சு கடுகு,உளுத்தம்பருப்பு,கருவேப்பிலை தாளிச்சு அதோட ரெண்டா நறுக்கின மிளகாய்,நறுக்கின பல்லாரி,தக்காளி சேர்த்து நல்லா வதக்கனும்.அதோட வத்தல் தூள்,தனியாத்தூள்,உப்பு சேர்த்து நல்லா கிண்டி விடனும்,,கிரேவிக்காக தண்ணீர் சேர்த்துக்கலாம்,,இன்னொரு கடாய காய வெச்சு அதுல அவித்த உருளைக்கிழங்கை பொரிச்சி எடுத்துக்கனும்,,பொரித்த உருளைக்கிழங்கை அடுப்பில் வெந்துட்டிருக்கற கிரேவியோட சேர்த்து கிளரிக்கனும்,,பச்சை வாசனை போனதும் மல்லித் தழையை நறுக்கி லேசா தூவி விட்டு எடுத்தா ஆலு மசாலா ரெடி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக