
சின்னவங்கள்ள இருந்து பெரியவங்க வரைக்கும் முருக்குன்னா ரொம்பவே பிடிக்கும்,அதுவும் தேங்காய் பால் முருக்குன்னா எப்படி இருக்கும்,அடடா,,என்னோட மாமியார் தேங்காய் பால் முருக்கு நல்லாவே செய்வாங்க..அவங்ககிட்ட இருந்து கத்துக்கிட்டு இப்ப உங்க எல்லாருக்கும் முருக்கு எப்படி செய்யலாம்னு சொல்றேன்,,
தேவையானவை
பச்சரிசி 1/2 கிலோ
தேங்காய்பால் தேவையான அளவு
சீரகம் 1/2 ஸ்பூன்
சமையல் எண்ணெய் தேவைக்கு
நெய்,வறுத்தரைத்த உளுந்தமாவு 2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை
ஊற வெச்ச பச்சரிசிய மாவாக்கி வறுத்தெடுக்கனும்,அத்தோட உப்பு,சீரகம்,நெய் சேர்த்து கொதிக்குற தேங்காய்பால் சேர்த்து நல்லா பிசஞ்சி வெச்சுக்கனும்,முருக்கு பிழியற அச்சுல கொஞ்சமா மாவெடுத்து அதை முருக்கா பிழிஞ்சுக்கனும்,
இப்ப கடாயில எண்ணெய் காய வெச்சு அதுல முருக்கை போட்டு எடுத்தா சூப்பரான தேங்காய் பால் முருக்கு ரெடி..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக