
கத்திரிக்காய் வெச்சு ஸ்பெஷலா என்ன பண்ணலாம்னு யோசிக்கும்போது கிடைச்சது தான் இந்த கத்தரிக்காய் மசாலா ஃப்ரை.

தேவையான பொருட்கள்:
வெங்காயம் 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி விழுது 1/2 டீஸ்பூன்
பூண்டு விழுது 1/2 டீஸ்பூன்
பச்ச மிளகாய் 2
கரம் மசாலா 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி சிறிதளவு
வெந்தயம்,பெருஞ்சீரகம் 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்
ரீஃபைன்ட் ஆயில் 1ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை:
கத்திரிக்காயை முழுசா காம்பு நறுக்காம ரெண்டா வெட்டி,தீயில சுட்டு தோல் உரிச்சி ஆற வெக்கனும்,லேசான தீயில வாணலியை வெச்சு எண்ணெயில பெருஞ்சீரகம் + வெந்தயம் தாளிச்சி அதோட பெருங்காயம்,இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கனும்,இப்ப நறுக்கின வெங்காயம்,தக்காளியை ஒண்ணு பின்னால ஒண்ணா போட்டு வதக்கி அதோட 1 ஸ்பூன் கரம் மசாலா,தேவையான அளவு உப்பு,ரெண்டா வெட்டின பச்ச மிளகாயும் சேர்த்து வதக்கனும்,இப்ப தீயில சுட்டு உரிச்சி வெச்சிருக்கற கத்திரிகாயையும்,1ஸ்பூன் லெமொன் சேர்த்து நல்லா பிரட்டி கொஞ்சமா தண்ணீர் சேர்த்து கொதிக்க விடனும்,நல்லா தள,,தளனு கொதிச்சு வரும்போது நறுக்கி வெச்சிருக்கற கொத்தமல்லித் தழையை தூவி இறக்கினா ப்ரிஞ்ஜால் மசாலா ஃப்ரை ரெடி,,அப்பா செம மணம் போங்க..இது ஃப்ரைட் ரைஸ்,ப்ரோட்டா,ரைஸ் ரொட்டிக்கு நல்ல காம்பினேஷன்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக