
தேவையான பொருட்கள்:
ஆப்பிள் 1/2 கிலோ
கோதுமை மாவு 1/2 கிலோ
சர்க்கரை 1 கிலோ
பால் 1/2 கிலோ
நெய் 1/4 லிட்டர்
ஏலக்காய் தூள் 1 ஸ்பூன்
முந்திரிப்பருப்பு 15
கேசரிப்பவுடர் 2 ஸ்பூன்
செய்முறை:
ஆப்பிளை சின்ன சின்ன துண்டா நறுக்கி லேசா சூடான பால் விட்டு வேக வைக்கனும்,ஆப்பிள் வெந்ததும் அடுப்பை லேசா "சிம்"மில் வெச்சிட்டு நல்லா மசிக்கனும்.மசிச்சதும் சலித்த கோதுமை மாவு,சேர்த்து கிளரி விடனும்,இப்ப சர்க்கரை,கேசரிப்பவுடர் சேர்த்து நல்லா கலவையை கிண்டி விடனும்,,இப்ப நெய்யை கொஞ்சம் கொஞ்சமா ஊற்றி ஊற்றி அல்வாவை கிளரி விட்டுக்கிட்டே இருக்கனும்,அல்வா பதம் வந்ததும் முந்திரிப்பருப்பு,ஏலக்காய் தூளும் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி எடுத்தா ஆப்பிள் அல்வா ரெடி..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக