இப்டி இருந்தாலும் வித்யாசமான அல்வா செய்யலாம்னு தோணிடுச்சி,,செஞ்சும் பார்த்துட்டேன்..அது என்னன்னா நம்ம "பாதாம் அல்வா"தான்..பாதாம் விக்குற விலையில இது தேவையானு நீங்க கேக்குறது எனக்கு கேக்குது..இருந்தும் செஞ்சு குடுத்தா வேணாம்னா சொல்லுவோம்..

தேவையான பொருட்கள்:
பாதாம் பருப்பு 1 கப்
இனிப்பில்லாத கோவா 1 கப்
பொடித்த்ட சர்க்கரை (சுகர்) 1 1/2 கப்
நெய் 1/4 கப்
குங்குமப்பூ 1/4 ஸ்பூன்
பால் 1/2 கப்
ஏலக்காய் தூள் 1/4 ஸ்பூன்
செய்முறை:
முதல்ல பாதாம் பருப்புகளை 15 நிமிஷம் சூடானா வெந்நீருல போட்டு ஊற வெச்சு தோல் உறிச்சு எடுத்து அதோட பால் சேர்த்து அரைச்சு கோவா கூட சேர்த்து கலந்துக்கனும்,இப்ப அடுப்ப பத்த வெச்சு பாதாம்+கோவா கலவையை சேர்த்து நல்லா கிளர ஆரம்பிக்கனும். அதோட மீதமிருக்கற பால் சேர்த்து கிளரி விடனும்.பால் சுண்ட ஆரம்பிச்சதும் 1 1/2 கப் பொடித்த சீனி சேர்க்கனும்,அது நல்லா கரைந்தவுடனே கேசரி பவுடர் சேர்த்து, 1/4 டம்ளர் நெய்யை ஊற்றனும். இப்ப பாலுல கரைச்ச குங்குமப்பூ,ஏலக்காய் பவுடர் கலந்ததும் நல்லா கெட்டியாகி அல்வாப் பதத்தில வரும்போது, இறக்கி வெச்சு மீதி நெய்யை கொஞ்சம் கொஞ்சமா விட்டு நல்லா கிளறி ஆறவிடனும்.இப்ப பாதாம் அல்வா ரெடி..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக