
காஃபியில சர்க்கரை போடவா,இல்ல போட வேணாமா.என்ன நீங்க சுகர் பேஷன்டா..இந்த கேள்விகள் அதிகமாகவே சமூகத்துல உலா வந்துட்டிருக்கு..பிறக்குற குழந்தையில இருந்து வயதானவங்க வரைக்கும் இப்ப சர்க்கரை நோய் சகஜமாகிப் போச்சு..
இந்த நோய் பரம்பரை நோயா இருந்தாலும்,நாம பாக்குற வேலைகள், உணவுக் கட்டுப்பாடுகளும் ஒரு காரணம் தான்..இதை கட்டுப்படுத்த மாத்திரை மருந்துகள் மட்டும் தீர்வு இல்ல,,வாழ்நாளை சுவாராசியமாக்க உணாவுக்கட்டுப்பாடு ரொம்ப அவசியமானது.
ஏன்ன ரத்தத்துல சர்க்கரை அளாவு எப்பவும் சரியான விகித்ததுல இருக்கனும். ஒண்ணும் சாப்பிடாத நேரத்துல சர்க்கரை அளவு 80'ல இருந்து 110 மில்லிகிராம் இருக்கலாம்.
சாப்பிட்ட பிறகு 2 மணி நேரம் கழிச்சு 82'ல இருந்து 120 மில்லிகிராம் இருக்கலாம்.இதை எல்லாம் தாண்டினாத்தான் சர்க்கரை நோய் வந்துடுச்சினு புரிஞ்சிக்கலாம்,
இது எல்லத்தையும் சரிசெய்ய ஒரு லேசான ரெசிபி இதோ:

வாழைப்பூ கஞ்சி:
தேவையான பொருட்கள்:
வாழப்பூவிலிருந்து எடுக்கப்பட்ட பூக்கள்- 25
சம்பா அரிசி -2 ஸ்பூன்
நெய் -1/4 டீஸ்பூன்
நல்லெண்ணெய் -1 ஸ்பூன்
பிரிஞ்சி இலை- 1
இஞ்சித்துருவல்- 1 டீஸ்பூன்
நறுக்கின மல்லித்தழை,புதினா -2 ச்பூன்
பொடியா நறுக்கின தக்ககாளி -1 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
செய்முறை:
வாணலியில நெய்,நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரிஞ்சி இலை வறுத்து, அதோட தக்காளி,இஞ்சித்துருவல்,நறுக்கின வாழைப்பூ போட்டு வதக்கி அரிசியைப் போட்டு 2 நிமிஷம் கிளரனும் அரிசியில எண்ணெய் கலக்குற வரைக்கும் கிளரி உப்பு போட்டு கூழா வேகத் தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கருல வேக வைக்கனும்,
இறக்கினதும் கொத்தமல்லி,புதினா தூவினா வாழைப்பூ கஞ்சி ரெடி.. இதை சாப்பிட கொஞ்சம் கசப்பாகவும்,துவர்ப்பாகவும் இருக்கும்,ஆனா உடம்போட கொழுப்பை குறைக்கும், வயிற்றுச்சதையை குறைக்கும், அதனால எப்ப வேணா சாப்பிடலாம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக