
அறுசுவை விருந்துகள்ளயும் ரசத்துக்கு தனி இடம் உண்டு. சாப்பாட்டை சீக்கிரமா ஜீரணமாக்குற இந்த ரசத்துல பல வகைகள் இல்லையா.. அதுல வாழைத்துண்டு ரசமும் ஒன்ணு.இது ஆரோக்கியத்தை தருகிறதோட சிறுநீரக கல் அடைப்பையும் சரியாக்கும்.
தேவையான பொருட்கள்:
ஒரு அடி நீள வாழைத்தண்டு -1
துவரம் பருப்பு -100 கிராம்
தக்காளி -3
ரசப்பொடி -2 டீஸ்பூன்
எலுமிச்சம் பழம் -1
மஞ்சள் பொடி -1/4 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி -1டீஸ்பூன்
கொத்தமல்லித் தழை -சிறிது
உப்பு -தேவையான அளவு
தாளிக்க:
ரீஃபைன்ட் ஆயில் -2 டீஸ்பூன்
உளுத்தபருப்பு -1 டீஸ்பூன்
கருவேப்பிலை -சிறிது
கடுகு -1 டீஸ்பூன்
செய்முறை:
வாழைத்தண்டை குட்டி குட்டியா நறுக்கி மிக்ஸியில அடிச்சு சாறு எடுத்துக்கனும். துவரம் பருப்பை வேக வெச்சு மசிச்சுக்கனும்.
அடுப்பை மிதமான் தீயில வெச்சிட்டு வாணலியில எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கருவெப்பிலை போட்டு தாளிச்சுக்கனும், இப்ப நறுக்கி வெச்சிருக்குற தக்காளி போட்டு வதக்கிக்கனும்.
இந்த கலவையோட வாழைத்தண்டுச் சாறு, மசிச்ச துவரம் பருப்பு ரெண்டையும் சேர்க்கனும். லேசா கொதிக்க ஆரம்பிச்சதும் பெருங்காயதூள், மஞ்சள் தூள், ரசப்பொடி,உப்பு,எலுமிச்சை சாறு சேர்த்து நல்லா கிண்டி விட்டு கொதிக்க வெச்சு இறக்கனும்.
இப்ப நல்ல வாசனையான வாழைத்தண்டு ரசம் ரெடி. இதோட நறுக்கின மல்லித்தழையை தூவி பரிமாற வேண்டியது தான் பாக்கி.
இந்த ரசம் டேஸ்டானது மட்டுமல்ல! மருத்துவ குணமும் நிறைஞ்சதும் கூட..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக