
தேவையான பொருட்கள்:
மீன் -1/2 கிலோ
மிளகாய் தூள் -2 ஸ்பூன்
இஞ்சி+பூண்டு விழுது -1ஸ்பூன்
சின்ன வெங்காயம் -1/4 கிலோ
தக்காளி -2
எலுமிச்சை -1/2 மூடி
தேங்காய் -3 ஸ்பூன்
மஞ்சள் தூள் -2 டீஸ்பூன்
உப்பு -தேவையான அளாவு
எண்ணெய் 3 டீஸ்பூன்
கரம் மசாலா 1 ஸ்பூன்
செய்முறை:
மீனை நல்லா கழுவி,மஞ்சள்,உப்பு சேர்த்து வேக வெச்சு முள்ளெடுத்து உதிர்க்கனும். சின்ன வெங்காயத்த பொடியா நறுக்கிக்கனும்.
வாணலியை அடுப்பில் வெச்சு எண்ணெய் சூடானதும் சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கனும்,வதங்க ஆரம்பிச்சதும்,தக்காளி போட்டு கிளறி விட ஆரம்பிச்சதும் கரம் மசாலா,மிளகாய் தூள் சேர்த்து நல்லா கிளறி விடனும்,இப்ப இஞ்சி பூண்டு விழுது,உப்பு சேர்த்து பச்சை வாசனை போகுற வரை வதக்கனும்,அடுப்பை லேசான தீயில வெச்சுக்கனும்.
கடைசியா உதிர்த்து வெச்சிருக்குற மீன உதிரி,உதிரியா போட்டு கிளறி விடனும்,,என்ன கம கம மணம் வருதா,,ஆனா ஒண்ணு பரிமாரும்போது மறக்காம எலுமிச்சை 2 சொட்டு விட்டு,தேங்காய் துருவலை தூவி விட்டு சாப்பிடனும்,,வேணும்னா நறுக்கின மல்லித்தழையை தூவினா கலர்ஃபுல்லா இருக்கும்.
குறிப்பு:
காரமா வேணும்னா மிளகுத்தூள் சேர்த்துக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக