
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் -1/4 கிலோ
புளி - எலுமிச்சை அளவு
மஞ்சள் பொடி -1 டீஸ்பூன்
தனியாத் தூள் -2 டீஸ்பூன்
மிளகாய் தூள் -2 ஸ்பூன்
இஞ்சி+பூண்டு விழுது -2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1/4 கப்
வறுக்க:
கசகசா -1 டேபிள் ஸ்பூன்
பெருஞ்சீரகம் -1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் துருவல் -1 கப்
முழு வத்தல் - 2
செய்முறை:
கசகசா,பெருஞ்சீரகம்,தேங்காய் துருவல்,வத்தல் எல்லாத்தையும் லேசா எண்னெய் விட்டு வறுத்து பொடியாக்கிக்கனும்.
அடுப்பில் வாணலியை வெச்சு லேசான தீயில எண்ணெய் விட்டு, அதுல பொடியா நறுக்கின சின்ன வெங்காயத்தை போட்டு நல்லா வதக்கனும்,அதோட வறுத்து அரைச்ச பொடியை சேர்த்து வதக்கனும், அதோட இஞ்சி,பூண்டு விழுதை சேர்த்து நல்லா வதக்கனும்.
இப்ப கெட்டியா கரைச்சு வெச்சிருக்கற புளி கரைசல், வத்தல் பொடி ,தனியாப்பொடி, மஞ்சள் தூள்,உப்பும் சேர்த்து நல்லா குழம்பை கொதிக்க விடனும்.
நல்லா குழம்பு கெட்டியானதும் இறக்கி வெச்சு கொஞ்சம் எண்ணெய் விட்டு சிவக்க வறுத்த சின்ன வெங்காயத்தை குழம்புல தூவனும். வாசம் ஊரையே தூக்கும் போங்கோ.
2 கருத்துகள்:
akka..vaasam adiku..pasikku akka
அச்சச்சோ பசிக்குதா செல்லம்,வீட்டுல போய் செஞ்சி சாப்பிடும்மா..
கருத்துரையிடுக