வெள்ளி, 2 ஏப்ரல், 2010

ப‌னீர் புலாவ்

ப‌னீர் ம‌சாலா சாப்பிட்டிருப்பீங்க‌..ஆனா அந்த‌ ப‌னீருலேயே புலாவ் ப‌ண்ணினா எப்ப‌டி இருக்கும்,,எச்சில் ஊறுதா,,வாங்க‌ வாங்க‌,நான் ச‌மைச்சித் தாறேன்,



தேவையான‌ பொருட்க‌ள்

பாசும‌தி அரிசி - 2 க‌ப்
ப‌னீர் -200 கிராம்
பெரிய‌ வெங்காய‌ம் -2
த‌க்க‌ளி -2
ப‌ச்ச‌ மிள‌காய் -4
ப‌ட்டை,கிராம்பு,ஏல‌க்காய் த‌லா- 2
எலுமிச்ச‌ம்ப‌ழ‌ம்- 1+1/2 ப‌ழ‌ம்
இஞ்சி+பூண்டு விழுது -1/2 டீஸ்பூன்
நெய் -4 டீஸ்பூன்
எண்ணெய் -5 டீஸ்பூன்
உப்பு -தேவையான‌ அள‌வு
ப‌ச்சை ப‌ட்டாணி -1/4 க‌ப்
புதினா -ஒரு கைப்பிடி

செய்முறை:

ப‌னீரை ச‌துர‌ ச‌துர‌மா ந‌றுக்கிக்க‌னும்,த‌க்காளி,ப‌ல்ல‌ரியை பொடிசா ந‌றுக்கிக்க‌னும்,ப‌ச்ச‌ மிள‌காயை ரெண்டா ந‌றுக்க‌னும்.அரிசியை க‌ழுவி ப‌த்து நிமிஷ‌ம் ஊற‌ வைக்க‌னும்,எண்ணெய் விட்டு ப‌னீரை பொரிச்செடுத்துக்க‌னும்,ஆனா ஒண்ணு மொறு,மொறு'னு பொரிக்க‌க் கூடாது.

அடுப்பை சிம்'மில‌ வெச்சு ஒரு பாத்திர‌த்துல‌ எண்ணெய்,நெய் விட்டு ப‌ட்டை, கிராம்பு, ஏல‌க்காயை போட்டு தாளிக்க‌னும், இப்ப‌ ப‌ச்சை மிள‌காய்,புதினா,ந‌றுக்கின‌,வெங்காய‌ம்,த‌க்காளி போட்டு வ‌த‌க்கி,ப‌ச்ச‌ ப‌ட்டாணியையும் சேர்த்து ந‌ல்லா கிள‌றி விட‌னும்,ந‌ல்லா வ‌த‌ங்க‌ ஆர‌ம்பிச்ச‌தும் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து ப‌ச்ச‌ வாச‌னை போகுற‌ வ‌ரைக்கும் கிண்டி விட‌னும்,
ந‌ல்லா எல்லாம் வ‌த‌ங்க‌ ஆர‌ம்பிச்சதும் மூனு க‌ப் வெந்நீர் ஊற்றி கொதிக்கும்போது உப்பு போட்டு அரிசியை சேர்த்து மூடி வைக்க‌னும்,.

ந‌ல்லா வேக‌ ஆர‌ம்பிச்ச‌தும் அரிசி மேல‌ த‌ண்ணீர் நிற்காம‌ல் சேர்ந்தாபோல‌ வ‌ரும்போது பொரிச்ச‌ ப‌னீர் சேர்த்து எலுமிச்சைசாறையும் ஊற்றி கிள‌றி மூடி வெச்சா ப‌னீர் புலாவ் ரெடி..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக