
1. பிரியாணிக்கான சாதத்தை முதல்ல உதிரா வடிச்ச பிறகு மசாலாவோட கலக்கும்போது,சாதம் கொதிக்க கொதிக்க இருக்கனும்ங்குறது முக்கியம்,அதனால பிரியாணிக்கு மசாலா தயாரிக்குற சமயத்துல இன்னொரு அடுப்பில சாதத்தை வேக விட்டு முக்கால் பதமா வடிக்கலாம்,பாசுமதி அரிசி சீக்கிரமா வெந்துடும்.

2. பிரியாணிக்கு "தம்" போடும்போது பிரியணி கலவை லேசான தண்ணீரோட இருக்கனும்.தண்ணீர் முழுதும் வற்றின பிறகு தம் போட்டா பிரியணி விறைச்சு போயி டேஸ்ட் கெட்டுடும்.

3. வெங்காயத்தை நல்ல பொன்னிறமா வதக்க வதக்க தான் பிரியாணி நிறம் நல்லா இருக்கும்,ஆனா ஃப்ரைட் ரைச்,புலாவு செய்யும்போது வெங்காயத்தை லேசாத்தான் வதக்கனும்,அப்ப தான் வெள்ளையா இருக்கும்.
4.பிரியாணிக்கு காய்கறி,மசால சேர்ந்த பிறகு மசாலா சேர்ந்த தொக்கோட எப்பவுமே கொதிக்குற தண்ணீர் ஊற்றினா தான் டேஸ்டா இருக்கும்,பச்சை தண்ணீர் ஊத்தினா அது நீர் கோர்த்து டேஸ்ட் மாறிப்போகும்.
5. பிரியாணி "தம்" போடுற முறை:
பிரியாணிக்கான மசாலா தொக்கோடு வெந்நீர் சேர்த்து கொதிச்ச பிறகு அரிசி சேர்க்கனும்,அரிசி மேல தண்ணீர் நிற்காம பிரட்டின மாதிரி சேர்ந்து வரும்போது,பாத்திரத்தோட விளிம்புல இடைவெளி இல்லாமல் மூடி போடனும்.அந்த பாத்திரத்துக்கு மேல கொதிக்குற தண்ணீர் இருக்குற கனமான பாத்திரத்தை ஐந்து நிமிஷத்துக்கு வைக்கனும்,அடுப்பும் சிம்'மில இருக்கனும்,இது தான் தம் போடுதல்..எப்புடீடீடீய்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக