
பாகற்காய் இந்த வார்த்தையை கேட்டாலே நிறைய பேர் ஓடோடிப் போயிடுவாங்க,, ஏன்னா கசப்பு இல்லையா..ஆனாலும் பாகற்காய் உடம்புக்கு ரொம்ப நல்லது..என்ன தான் சமைச்சாலும் சமயத்துல பாகற்காய் கசந்துடும்,அதனால கசப்பில்லாத பாகற்காய் சிப்ஸ் எப்டி செய்யறது'ன் பாக்கலாம்.

தேவையான பொருட்கள்:
பாகற்காய் -100
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
வத்தல் தூள் - 1ஸ்பூன்
தனியாத்தூள் - 1/2 ஸ்பூன்
இஞ்சி+பூண்டு விழுது - 1 ஸ்பூன்
அரிசிமாவு - 1கைப்பிடி
எண்ணெய் - தேவையான அளவு
புளித்தண்ணீர்- 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பாகற்காய வட்ட வட்டமா மெல்லிசா நறுக்கிட்டு புளித்தண்ணில அலசி தண்ணிய வடிச்சிடனும், இந்த பாகற்கையோட மஞ்சள் தூள்,வத்தல் தூள்,தேவையான அளாவு உப்பு,இஞ்சி பூண்டு விழுது, ஒரு கை அரிசி மாவு எல்லாம் சேர்த்து லேசா தண்ணி தெளிச்சு பிசறி, பத்து நிமிஷம் ஊற வெச்சு எண்ணெயில போட்டு பொரிச்செடுத்தா நல்லா க்ரிஸ்பியான பாகற்காய் சிப்ஸ் ரெடி..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக