புதன், 28 ஏப்ரல், 2010

டிப்ஸ்! டிப்ஸ்!டிப்ஸ்



1. நாள் ப‌ட்ட‌ அரிசியில‌ வ‌ட‌க‌ம் செஞ்சா பொரிக்கும்போது சிவ‌க்கும்,அத‌னால‌ புது அரிசியில‌ ம‌ட்டுமே வ‌ட‌க‌ம் போட்டா ந‌ல்ல‌து.



2. கோடையில‌ நீர்மோர் த‌யாரிக்கும்போது நீர்மோருல‌ இஞ்சி,ப‌ச்ச‌மிள‌க்க‌ய்க்கு ப‌திலா கொஞ்ச‌ம் மிள‌கு ர‌ச‌ப்பொடி சேர்த்தா ஜோரா இருக்கும்.



3. கோடையில‌ மாம்ப‌ழ‌ மில்க் ஷேக் த‌யாரிச்சா சூப்ப‌ரா இருக்கும்.



4. புளிச்ச‌ மோருல‌ ஒரு ஸ்பூன் க‌ட‌லை மாவை அரைச்சு விட்டு மிள‌காய் ,சீர‌க‌ம் ரெண்டையும் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு வ‌த‌க்கி லேசா ம‌ஞ்ச‌ள் பொடி சேர்த்து ஒரு கொதி வ‌ந்த‌தும் இற‌க்கினா திடீர் மோர்க்குழ‌ம்பு ரெடி.



5. ச‌ம‌ அளவுள‌ மில்க்மெய்ட்,பால்,தேங்காபால் மூன்று பொருட்க‌ளையும் சேர்த்து அதுல‌ ஏல‌க்க‌ய்ப்பொடி,திராட்சை,முந்திரி நுங்கு துண்டுக‌ளை போட்டு ஃப்ரிட்ஜில‌ வெச்சா நுங்கு பாயாச‌ம் ரெடி.



6. காய்க‌றிக‌ளை பைக‌ள்ளா போடு வைக்கும்போது நீர்ச்ச‌த்துள்ள‌ பூச‌ணி,தடிய‌ங்காய் மாதிரியான‌ காய்க‌ளோட‌ ம‌ற்ற‌ காய்க‌ளை சேர்த்து வெச்சா எல்லா காய்க‌ளும் சேர்ந்து அழுகிப்போயிடும்,அத‌னால‌ த‌னித்த‌னியா போட்டு வெச்சா ந‌ல்ல‌து.



7. ஃப்ர்ருட் சால‌டுல‌ சுக‌ர் சேர்க்குற‌துக்கு ப‌திலா நாட்டு ச‌ர்க்க‌ரை,வெல்ல‌ம் சேர்த்தா டேஸ்டும் ந‌ல்லா இருக்கும்,இரும்புச்ச‌த்தும் கிடைக்கும்.



8. தின‌மும் சாத‌ம் வ‌டிக்க‌ அரிசி எடுக்கும்போது கைப்பிடி அரிசியை த‌னியா எடுத்து ஒரு ட‌ப்ப‌வுல‌ போட்டு வெச்சா மாத‌க்க‌டைசியில‌ உத‌வும்.



9. துவ‌ர‌ம்ப‌ருப்பு வாங்கின‌தும் கொஞ்ச‌ம் தனியா எடுத்து வெச்சிட‌லாம்.த‌விர‌ வாஅர‌த்துக்கு ஒரு த‌ட‌வை சாம்பார் வெச்சிட்டு ம‌ற்ற‌ நாட்க‌ள்ள‌ கூடு,பொரிய‌ல்,பொடி,க‌ல‌வை சாத‌ம் இப்ப‌டி ச‌மைச்சா துவ‌ர‌ம்ப‌ருப்பு ப‌ற்றாக்குரையை ச‌மாளிக்க‌லாம்,



10. வீட்டுல‌ எப்ப‌வும் க‌ட‌லை மாவு,மைதா மாவு வாங்கி வெச்சா ரொம்ப‌ ந‌ல்ல‌து,ஏன்னா மாச‌க்க‌டைசியில‌ வ‌ருகிற‌ விருந்தாளிக‌ளை ச‌மாளிக்க‌ இந்த‌ மாவோட‌ வெங்காய‌ம் சேர்த்து ப‌க்கோடா செஞ்சி ச‌மாளிச்சா மாத‌க்க‌டைசி ஸ்நாக்ஸ் செல‌வை குறைச்சுக்க‌லாம்.



11. தின‌மும் காஃபிக்கு ப‌திலா ச‌த்து மாவுக்க‌ஞ்சி,ஓட்ஸ் க‌ஞ்சி சாப்பிட்டா உட‌ம்புக்கும் ஆரோக்கிய‌ம்,ப‌ர்ஸுக்கும் ந‌ல்ல‌து.



12. சீஸ‌ன்ல‌ கிடைக்கிற‌ காய்க‌றிக‌ள்,ப‌ழ‌ங்க‌ளை சாப்பிட‌ குழ‌ந்தைக‌ளை ப‌ழ‌க்க‌ப்ப‌டுத்தினா விலையும் ம‌லிவா இருக்கும்,விலையை கேட்டு ந‌ம‌ல்க்கும் ம‌ய‌க்க‌ம் வ‌ராது.

செவ்வாய், 27 ஏப்ரல், 2010

தேங்காய் அப்ப‌ம்




நிறைய‌ கார‌சார‌மான‌ ச‌மைய‌ல் ப‌ண்ணியாச்சு.. நிறைய‌ டிப்ஸ் கொடுத்தாச்சு.. ச‌ரி ஒரு இனிப்பு ப‌ல‌கார‌ம் செஞ்சு கொடுக்க‌லாமுங்குற‌ ஒரு முடிவுக்கு வ‌ந்திருக்கேன்..ச‌ந்தோச‌ம் தானே..தேங்காய் கூட‌ அரிசி,ப‌ருப்பெல்லாம் சேர்த்து ஒரு வித்யாச‌மான‌ இனிப்பு தான்.ச‌ரி இந்த‌ தேங்காய் ப‌ற்றி தெரிஞ்சுக்க‌லாமா..

தேங்காய் :


தென்னைமரத்தோட‌ பழம் . இதை தெங்கம் பழம் இப்ப‌டியும் சொல்லுவாங்க‌. இது கெட்டியா இருப்பதால, பழமாக இருந்தாலும் கூட‌, வழக்கத்தில் காய் என்றே அழைக்கப்படுது. தென்னை மரம் தெற்கில் இருந்து வருவதால், அதன் பழம் ("காய்"), தெங்கம்+ "காய்" = தேங்காய்னு அழைக்கப்படுது. தேங்காயின் புறத்தே பச்சையாக இருந்தாலும், பழுப்பு நிறத்தில் அடர்த்தியாக நார்கள் உள்ளே இருக்கும்



இந்த நார்களை உரிச்சா உள்ளே மண்பழுப்பு நிறத்தில் மிகக்கெட்டியான ஓட்டோட‌, ஒரு பெரிய கொட்டை போல் இருக்க‌ற‌து தான் தேங்காய். அந்த தேங்காய்க்குள் தேங்காய்நீர் இருப்பதை ஆட்டிப் பார்த்தால் உணரலாம். அளவாக முற்றிய தேங்காயை நெற்றுனு சொல்லுவாங்க‌. அந்த கெட்டியான ஓட்டை உடைத்தால் உள்ளே வெள்ளைநிறத்தில் ஏறத்தாழ 1 செ.மீ பருமனுக்கு பருப்பு காணப்படும். இந்தப் பருப்புதான் சமையலுக்குப் பெரிதும் பயன்படுகிறது.



தேங்காய் மிக இளசா இருந்தால் அதனுள் நிறைய தேங்காய்நீர் இருக்கும். இதனை இளநீர்னு சொல்லுவாங்க‌. இது கோடை காலங்களில் வெய்யிலின் வெக்கையைத் தணிக்க குடிப்பாங்க‌.

கொப்பரைத் தேங்காய்:



கொப்பரையாவதற்காக வெயிலில் உலர்த்தப்படும் தேங்காய்அளவுக்கு மீறி முற்றி இருந்தா உள்ளிருக்கும் தேங்காய் நீர் முற்றிலுமாய் வற்றிடும், அப்படி ரொம்ப‌ முற்றிய தேங்காயை கொப்பரைத் தேங்காய் இப்ப‌டி சொல்லுவாங்க‌. கொப்பரை தேங்காய் எண்ணெய் எடுப்பதற்கு பயன்படுது. நீர் முற்றாக வற்றாத தேங்காய்களை வெயிலில் நல்லா உலர்த்தி அதை கொப்பரை ஆக்குவாங்க‌. கொப்பரையிலிருந்து எண்ணெய் எடுத்த பிறகு உள்ள தேங்காய் கழிவு புண்ணாக்கு ஆகும். புண்ணாக்கு கால்நடைகளுக்கு உணவாகப் பயன்படுகிறது.


தேவையான‌ பொருட்க‌ள்

ப‌ச்ச‌ரிசி -1/2 கிலோ
புழுங்க‌ல‌ரிசி -1/2 கிலோ
க‌ட‌லைப்ப‌ருப்பு -200 கிராம்
துவ‌ர‌ம் ப‌ருப்பு -200 கிராம்
பாசிப்ப‌ருப்பு -200 கிராம்
மைதா மாவு -200 கிராம்
தேங்காய் -2
வெல்ல‌ம் -1 கிலோ
ஏல‌ம்மாய் தூள் -1 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான‌ அளாவு

செய்முறை:

அரிசி,ப‌ருப்பு வ‌கைக‌ள் எல்லாத்தையும் ந‌ல்லா ஊற‌வெச்சு ஒண்ணா ந‌ல்லா ஊற‌ வெச்சு அரைச்சு வெச்சுக்க‌னும்.அரைச்ச‌ மாவோட‌ வெல்ல‌ம்,ஏல‌க்க‌ய்த்தூள்,தேங்காய் துருவ‌ல் சேர்த்து அதிக‌ த‌ண்ணீர் விடாம‌ இட்லி ப‌த‌த்துக்கு அரைச்சு எடுத்து பாத்துக்க‌னும்.

இப்ப‌ ச‌லிச்ச‌ மைதா மாவை ரெண்டு ட‌ம்ள‌ர் த‌ண்ணீருல‌ ந‌ல்லா க‌ரைச்சு அரைச்சு வெச்ச‌ மாவோட‌ சேர்த்து க‌ல‌ந்துக்க‌னும்.

வாணலியில‌ எண்ணெய் விட்டு ந‌ல்லா சூடான‌தும்,அடுப்பை லேச‌ எரிய‌ விட்டு வ‌ணாலியில‌ மாவை கொஞ்ச‌ம் கொஞ்ச‌மா க‌ர‌ண்டியால‌ எடுத்து ஊற்ற‌னும்,வெந்த‌தும் லேச‌ திருப்பிப் போட்டு சிவ‌ந்த‌தும் எடுத்தா சூடான‌ தேங்காய் அப்ப‌ம் ரெடி..செஞ்சு பார்த்துட்டு சொல்றீங்க‌ளா....

திங்கள், 26 ஏப்ரல், 2010

பெங்க‌ளூர் ரேடிஷ் ஜூஸ்




பேர‌க் கேட்ட‌தும் காஸ்ட்லியோ_னு ப‌ய‌ந்த்டாதீங்க‌.இது உங்க‌ கிச்சனுல‌ வேணாமுனு ஒதுக்கி மூலையில‌ கிட‌க்குற‌ ரெண்டு காய்க‌ள் தான் ஒரு புத்துணர்ச்சி த‌ர‌க்கூடிய‌ ஜூஸைத் த‌ர‌ப்போகுது.

தேவையான‌வை:


செள செள அதாங்க‌ பெங்க‌ளூர் க‌த்த‌ரிக்காய் - 1
முள்ள‌ங்கி - 1
தேன் - 2 ஸ்பூன்

(நீர‌ழிவு நோய் உள்ள‌வ‌ங்க‌ உப்பு,மிள‌குப்பொடி சேர்த்துக்க‌லாம்)

செய்முறை:




செள செள காயோட‌ தோலை சீவி,ந‌டுப்ப‌குதியில‌ இருக்க‌ற‌ விதையை எடுத்துட்டு சுத்த‌ம் செஞ்சி ந‌றுக்கிக்கனும்.முள்ளாங்கியோட‌ தோலையும் சீவி துண்டு துண்டா ந‌றுக்கிக்க‌னும்.ரெண்டு காய்க‌ளையும் மிக்ஸியில‌ போட்டு கொஞ்ச‌ம் த‌ண்ணீர் சேர்த்து அடிச்சுக்க‌னும்,வ‌டிக‌ட்டி அந்த‌ சூஸோட‌ தேன் சேர்த்து குடிச்சா உட‌ல் சூடெல்லாம் ஓடோடி போயிடும்,ஜில்லுனு இருக்க‌ ஐஸ் க‌ட்டிக‌ள‌ சேர்த்துக்க‌லாம்.



செள செள காயில‌ கால்சிய‌ம் ச‌த்து இருக்கு,மூட்டு வ‌லி, கால்சிய‌ம் குறைபாடால‌ க‌ஷ்ட‌ ப‌டுற‌வ‌ங்க‌ளுக்கு இது ஒரு வ‌ர‌ப்பிர‌சாத‌ம்.



அநாவ‌சிய‌ம்னு நினைக்கிற‌ முள்ள‌ங்கிக்கு நிறைய‌ பெருமைக‌ள் இருக்கு,வ‌யிறு உப்புச‌மாகி ப‌சியில்லாம‌ அல்லாடுற‌வ‌ங்க‌ முள்ளங்கியை சாப்பிட‌லாம்.க‌ல்லீர‌ல்,ம‌ண்ணீர‌லை ந‌ல்லா செய‌ல்ப‌ட‌ வைக்கும்,நீர‌ழிவு நோய் உள்ள‌வ‌ங்க‌ நிச்ச‌ய‌மா சாப்பிட‌ வேண்டிய‌ காய்.உட‌ம்புல‌ அங்க‌ங்கே வீக‌க‌ம் உள்ள‌வ‌ங்க‌ முள்ள‌ங்கியை சாப்பிட்டா ந‌ல்ல‌ ப‌ல‌ன் கிடைக்கும்,



அப்புற‌ம் ஒரு விஷ‌ய‌ம் என்ன‌னா,உட‌ல் இளைக்க‌னும் நினைக்கிற‌ குண்டு உட‌ம்புக்கார‌‌ங்க‌ அடிக்க‌டி முள்ள‌ங்கியை ப‌ய‌ன ப‌டுத்த‌னும்.அதோட‌ சிறுநீர‌க‌த்தை முறையா செய‌ல்ப‌ட‌வைக்கிற‌ அதிச‌ய‌க்காய் ந‌ம்ம‌ முள்ள‌ங்கி தாங்கோ..அத‌னால‌ ப‌ச்சையா சால‌ட் போட்டு சாப்பிட‌லாம்,,எப்பூடீ..

எலுமிச்சையில் வைத்திய‌ம் ஏராள‌ம்



சாதார‌ண‌ க‌டைக‌ள்ள‌ கிடைக்கிற‌ எலுமிச்சை ப‌ழ‌த்துக்கு ஏக‌ப்ப‌ட்ட‌ ம‌ருத்துவ‌ குண‌ங்க‌ள் இருக்கு தெரியுமா..அவ‌ச‌ர‌த்துக்கு வீட்டுல‌ எலுமிச்சை வைத்திய‌ம் செஞ்சி பாக்க‌லாம்,டாக்ட‌டை தேடி ஓடாம‌ வீட்டுலேயே ம‌ருத்துவ‌ம் செஞ்சுக்க‌லாமா..



*.எலுமிச்சை ப‌ழ‌த்தை ரெண்டா வெட்டி நெற்றிப்பொட்டுல‌ வெச்சு லேசா தேய்ச்சா த‌லைவ‌லி ப‌ற‌ந்து போயிடும் ஆனா ஒண்ணு காய்ச்ச‌ல் இருக்கும்போது இதை த‌விர்த்துட‌னும்.



*.வ‌யிற்றுப்போக்கு அதிக‌மானா உட‌ல் சோர்வு,ப‌ல‌ஹீன‌ம்,கும‌ட்ட‌ல்,தாக‌ம் அதிக‌மா இருக்கும்.இந்த‌ ச‌ம‌ய‌த்துல‌ எலுமிச்சைச்சாறு குடிச்சா உட‌னே நிவார‌ண‌ம் கிடைக்கும்.




*.கோழிமுட்டையில‌ நெல்லிக்காய் அள‌வு எடுத்து எலுமிச்சை சாற்றுல‌ க‌ல‌ந்து கொஞ்ச‌ம் இஞ்சி சேர்த்து காலையில‌யும்,சாய‌ங்கால‌மும் சாப்பிட்டு வ‌ந்தா ஈளை இரும‌ல் ச‌ரியாகிடும்.



*.எலுமிச்சை இலையை குட்டி குட்டியா வெட்டி நீர்மோருல‌ சேர்த்துசாப்பிட‌லாம்,ஏன்னா இதுல‌ விட‌மின் "சி" இருக்கு.



*.தேள் க‌டிச்ச‌ இட‌த்துல‌ எலுமிச்சை ப‌ழ‌த்தை வெட்டி அந்த‌ சாறை க‌டிவாயில‌ வெச்சு தேய்க்க‌னும், எரிச்ச‌ல் குறைஞ்ச‌ பிற‌கு டாக்ட‌ர்கிட்ட‌ காண்பிக்க‌லாம்.



*.வெந்நீருல‌ எலுமிச்சை சாறை க‌ல‌ந்து குடிச்சா ம‌ல‌ச்சிக்க‌ல் ச‌ரியாகிடும்.



*.க‌ர்ப்பிணி பெண்க‌ளுக்கு வாய் ம‌ளு,மளு‍ நு இருந்தா எலுமிச்சை ப‌ழ‌த்த‌ குட்டி,குட்டி துண்டா வெட்டி கொதிக்குற‌ த‌ண்ணீருல‌ போட்டு ,லேசான‌ சூட்டுல‌ அந்த‌ த‌ண்ணீர‌ குடிச்சா ந‌லா இருக்கும்.

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

காலிஃப்ள‌வ‌ர் ப‌க்கோடா


காளிஃப்ள‌வ‌ர் பார்க்க‌ எவ்வ‌ள‌வு அழ‌கா இருக்கும் தெரியுமா..அதுவும் அதுலேயே ப‌க்கோடா எப்ப‌டி இருக்கும்,நினைச்சாலே நாக்கில‌ எச்சில் ஊறுதா..

காளிஃப்ள‌வ‌ரோட‌ வ‌ர‌லாறு என்ன‌ன்னு பாக்க‌லாமா:

முதல்ல‌ ஆசியாவில் பயிரிடப்பட்ட காலிஃபிளவர் பிற‌கு இத்தாலியில மட்டுமே
அதிகமாக பயிரிடப்பட்டது. 16-ம் நூற்றாண்டில பிரான்சில் அறிமுகமான‌து. அங்கிருந்து
ஐரோப்பாவுக்கும் வட அமெரிக்காவுக்கும் அறிமுக‌ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து. இது ஒரு குளிர்பிரதேச காய்கறி .வட இந்தியாவிலே குளிர்காலங்கள்ள‌ ஏராளமா கிடைக்கும். ஊட்டி,கொடைக்கான‌ல் ப‌குதியில‌ அதிக‌மா ப‌யிரிட‌ப்ப‌டுது. தென்னிந்தியாவில் அந்தக் காலத்தில் இது பற்றி எதுவுமே தெரியாததால காலிஃப்ள‌வ‌ருக்கு தமிழிலே பெயர் இல்லை.



காலிஃப்ள‌வ‌ர் காய்கறி வகைன்னாலும் சாப்பிடக்கூடிய பூ. மூலிகை இனத்தைச் சேர்ந்தது.
முட்டைக்கோஸும் காலிஃபிளவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவ‌ங்க‌.

எப்ப‌டி இருக்கும் தெரியுமா:

நடுத்தண்டைச் சுற்றி அடர்த்தியா அடுக்கடுக்கா வெள்ளை நிற குட்டி, குட்டி பூக்கள் இருக்க‌ற‌ ஒரு பெரிய பூ.மேலிருந்து பார்த்தா வெள்ளையா இருக்கும். இந்த வெள்ளைப்பகுதியை ஒட்டி
நெருக்கமா பச்சை இலைப்பகுதி படர்ந்து இருக்கும், இதனோட‌ முக்கிய வேலை,
வெள்ளைப்பூவை சூரியனிடமிருந்து காப்பாற்றுகிற‌து தான் .வெயில் பட்டு பூக்கள் குளோரோஃபிலை உற்பத்தி செய்யாமல் தடுக்குது . சிலசமயம் இந்த வெள்ளைப் பூக்கள் இலையை விட்டு வெளியே தலை நீட்ட ஆரம்பிச்சா, விவசாயிகள் இந்த இலையினால பூவோட‌ தலைக்கு மேல சேர்த்துக் கட்டிடுவாங்க‌ . அதிக வெயில் பட்டால் பூவோட‌ வெள்ளை நிறம் மாறி, ஒருவித கெட்ட வாசனையும் வரும்.

வகைகள்:




சாதாரணமா வெள்ளயாவோ, இளம் மஞ்சளாகவோ இருக்கும். ஆனால் வயலட்
கலர் காலிஃபிளவர் பார்த்திருக்கிறீங்களா? 1980கள்ள‌ யதேச்சையா காலிஃபிளவர் பயிர்களுக்கு
நடுவிலே, ஒரு வயலட் பூ முளைக்கவே பரிசோதனைக்கூடத்துக்கு கொண்டு போய் சீராக்கி
நாற்றுகளைத் தயாரிச்சு வெளியிட்டாங்க‌. இதே போல ஊதா கலர் காலிஃபிளவரும்
கண்டுபிடிச்சாங்க‌.

எப்ப‌டி ந‌ல்ல‌ காலிஃப்ள‌வ‌ர் பூவை தேர்ந்தெடுக்க‌ற‌துனு தெரியுமா:

நல்ல வெள்ளை நிறத்தில் அதை ஒட்டியுள்ள இலை பசுமையாக இருக்கனும்.
பூவின் அளவு பெரிதாகவோ சிறியதாகவோ இருக்கலாம் . சில ச‌ம‌ய‌ம் சின்ன‌ பூக்களுக்கு
இடையில இலைகள் வளரும் . இதனால எந்தக் கெடுதலும் இல்லை. இலையை நீக்கிவிட்டு
உபயோகிக்கலாம். தண்டு நடுவிலோ, பூக்களுக்கு இடையிலோ பெரிய பச்சைப் புழு இருக்கும்.
மொட்டிலேயே உள்ளே போய் சத்தை சாப்பிட்டு வளரும். பார்க்க சட்டுன்னு தெரியாது.
கூர்ந்து பார்த்தா புழு இருக்கும் இடத்தைச் சுற்றி கறுப்பு புள்ளிகள் இருக்கும். அப்படியே வாங்கி
வந்துட்ட‌லும் புழு இருக்கும் பகுதியை எடுத்துட்டு உபயோகிக்கலாம். சமைக்க‌ற‌துக்கு முன்னால‌ பூவை நறுக்கி கொதிக்க‌ற‌ த‌ண்ணீருல‌ போட்டு எடுக்கனும். புழுக்கள் இறந்து வெளியே வந்துவிடும். பூக்கள் மஞ்சளா இருந்தா பழசுனு அர்த்த‌ம்.



காலிஃப்ள‌வ‌ர்ல‌ ஒரு வித தாவர அமிலம் இருக்கு. வேகும்போது கந்தகக் கலவையாக மாறிவாசனை வரும். ரொம்ப‌ நேரம் வேக வெச்சா வாசனை அதிகமாகிடும். சத்தும் வீணாகும்.அலுமினியம், இரும்பு பாத்திரத்தில் வேக வைக்கக்கூடாது. இதிலுள்ள கந்தகக் கலவை அலுமினியத்துடன் சேர்ந்தால் பூ மஞ்சளாகிடும். இரும்பு இதை பிரவுன் கலராக்கிடும். தரைக்கு ரொம்ப‌ ப‌க்க‌த்துல‌ விளைய‌ர‌தால‌ பூச்சிகள், கிருமிகள் இருக்கும். நல்லா கழுவி உபயோகிக்கனும்.சமைக்குற‌துக்கு முன்னாடி நல்லாக் கழுவி மேலே இருக்க‌ற‌ இலைகளை நீக்கி, அடித்தண்டை வெட்டி எடுக்கனும். பூ இருக்கும் தண்டை தூக்கி எறியாம‌ அதையும் சேர்த்து சமைக்கலாம். பூக்கள் சேருற‌ நடுத்தண்டை தூக்கி போட்டுடலாம். பூ வேகும்போது வற்ர‌ கந்தக வாசனை சிலருக்குபிடிக்காது.



ஹோட்டல்ல‌ வாசனை தெரியாமல் இருக்க காலிஃப்ள‌வ‌ரை பாலில் வேக வைப்பாங்க‌. வடஇந்தியாவில் காலிஃபிளவர், உருளைக் கிழங்கு, வெங்காயம் சேர்த்து செய்யப்படுற‌ ஆலு கோபி மிகப்பிரபலமான டிஷ். காலிஃபிளவரின் மிக முக்கிய சத்தான ஃபோலாசின் சமைக்கும்போதுவெளியேறிவிடும். அதனால் வேகவைத்த நீரை கீழே கொட்டாமல் சூப், ரசம், குழம்பு எதிலாவது சேர்த்தா சத்து வீணாகாது. மேலை நாடுகளில் காலிஃபிளவரில் சீஸ் அல்லது வெண்ணெய் தடவி சாப்பிடுவாங்க‌.



காலிஃப்ளாவ‌ருல‌ விட்டமின் மிக அதிகம். ஒரு நாளைக்கு தேவைப்படுற‌ அளவைவிட 20%
அதிகமாக இருக்கு. ஒரு கப் நறுக்கிய பூவில் கலோரி 24, புரதம் 2 கிராம், மாவுச்சத்து 5 கிராம்,கொலஸ்டிரால் , விட்டமின் சி 72 மில்லி கிராம் , ஃபோலாசின் 66 மைக்ரோ கிராம்,
பொட்டாசியம் 355 மில்லி கிராம்.

காலிஃப்ள‌வ‌ருக்கு புற்று நோயை தடுக்குற‌ சக்தி இருக்கு . பூ வேகும்போது Isothiocyan ங்குற‌ ரசாயனம் வெளிவரும். இது உட‌லுக்குள்ள‌ போய் உடல் தானாக உற்பத்தி
செய்யும் phas ங்குற‌ புற்றுநோய் தடுக்கும் பொருளை அதிகமாக சுரக்கச் செய்யுது.

காலிஃப்ள‌வ‌ர் ப‌க்கோடா:



தேவையான‌ பொருட்க‌ள்:

காலிஃப்ளவர் - ஒன்று
கடலைமாவு - ஒரு கப்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
இஞ்சி,பூண்டு த‌லா 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை ஸ்பூன்
ம‌ஞ்ச‌ள் தூள் 1 சிட்டிகை
உப்பு - ஒன்றரை டீஸ்பூன்
கேச‌ரிப்பவுட‌ர் 1 ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க


செய்முறை:

காலிஃப்ள‌வ‌ரை பொடியா ந‌றுக்கி அதோட‌ ம‌ஞ்ச‌ள் தூள்,உப்பு சேர்த்து அவிச்சுக்க‌னும்.பிற‌கு க‌ட‌லை மாவு,இங்சி,பூண்டு பேஸ்ட்,க‌றிவேப்பிலை கொஞ்ச‌ம் மிள‌காய் தூள் சேர்த்து லேசா ம‌சிக்க‌னும்,அதோட‌ க‌ல‌ருக்காக‌ கேச‌ரிப்ப‌வுட‌ர் சேர்த்தா பார்க்க‌ ந‌ல்லா இருக்கும்.இப்ப‌ வாணாலியை சூடாக்கி அடுப்பை சிம்மில‌ வெச்சுகாலிஃப்ள‌வ‌ர் க‌ல‌வையை கொஞ்ச‌ம் கொஞ்ச‌மா பொரிச்செடுத்தா காளிஃப்ள‌வ‌ர் ப‌க்கோடா ரெடி..

புதன், 21 ஏப்ரல், 2010

அழ‌கே..அழ‌கே!!



எல்லாருக்குமே த‌ன்கிட்ட‌ இருக்க‌ற‌ அழ‌கை இன்னும் அழ‌குப‌டுத்தி பார்க்க‌னுங்குற‌ ஆசை எல்லாருக்குமே இருக்கும்,அதுவும் முக‌ம்,கூந்த‌ல் ப‌ராம‌ரிப்புனா அப்பா கேக்கவா செய்ய‌னும்,

நாளொண்ணுக்கு வித‌ வித‌மா ஷாம்பூ,க‌ன்டிஷ‌ன‌ர், ஹேர் ஆயில், ஃபேஸ் க்ரீன் இப்ப‌டி புதுசு புதுசா வ‌ந்திட்டிருக்கு .. அத‌னால‌ இதை ப‌ய‌ன் ப‌டுத்தினா ந‌ம்ம‌ முடி உதிர‌ல்,பொடுகு தொல்லை,முடி உதிர்த‌ல்,குறைஞ்சிடுமா, இல்ல‌ நாம‌ எப்ப‌டியாவ‌து க‌லரா மாறிட‌ மாட்டோமாங்குற‌ ஏக்க‌ம் எல்லா பெண்க‌ளோட‌ ம‌ன‌சுல‌யும் இருக்க‌த்தான் செய்யுது,



அதுவும் இந்த‌ கோடை கால‌த்துல‌ கூந்த‌ல்,முக‌ம்,உட‌ம்பை பாதுகாக்குற‌து இருக்கே .. அப்பா.. மூச்சே முட்டிப் போவோம் போங்க‌..அதுக்காக‌த்தான் த‌லை முடியை ந‌ம்ம‌ வீட்டுல‌ கிடைக்கிற‌ பொருட்க‌ள‌ வெச்சு எப்ப‌டி எல்லாம் பாதுகாக்க‌லாம்னு பாக்க‌லாமா..



1.செம்ப‌ருத்திப்பூ,க‌ருவேப்பிலை, ம‌ருதாணி இலை, குருமிள‌கு எல்லாத்தையும் த‌ன்ணீருல‌ ந‌ல்லா நனைய‌ வெச்சு அரைச்சு சாறு எடுத்து, அதை காய‌ வெச்ச தேங்காய் எண்ணெய்யில‌ சேர்த்து வார‌ம் ரெண்டு த‌ட‌வை த‌லைக்கு ம‌சாஜ் செஞ்சிட்டு வ‌ந்தா பொடுகு ,முடி கொட்டுத‌ல் எல்லாம் ச‌ரியாகிடும்.



2.அதை போல‌வே வெளியில‌ போவ‌த‌ற்கு அரை ம‌ணி நேர‌த்துக்கு முன்னாடியே த‌லையில‌ எண்ணெய் லேசா த‌ட‌விக்கிட்டா த‌லை முடி காற்றுல‌ ப‌ற‌க்காம‌ இருக்கும்.




3.அப்ப்ற‌ம் ஒரு விஷ‌ய‌ம் த‌லைக்கு ஷாம்பூ உப‌யோகிக்க‌ற‌துக்கு ஒரு ம‌ணி நேர‌த்துக்கு முன்னாடி த‌லையில‌ எண்ணெய் வெச்சு ம‌சாஜ் செஞ்ச‌ பிற‌கு முடியை அல‌சினால் முடி கொட்டுத‌ல்,பொடுகு இதெல்லாம் காணாம‌ போயிடும்.



த‌லை முடி ப‌ளப‌ள‌ ப‌ள‌ப்பா இருக்க‌ சில‌ வ‌ழிக‌ள்:



1.தேங்காய் எண்ணெய், ந‌ல்லெண்ணெய், விள‌க்கெண்ணேய் எல்லாத்தையும் ஒரு கிண்ண‌த்துல‌ ச‌ம‌ அள‌வு எடுத்து த‌ண்ணீருல‌ வெச்சு சூடு ப‌ண்ணி பிற‌கு ம‌சாஜ் செய்ய‌னும், பிற‌கு அரை ம‌ணி நேர‌ம் க‌ழிச்சு முட்டை வெள்ளைக் க‌ருவை எடுத்து த‌லையில‌ பேக் போட்டு ஒரு ப‌தினைஞ்சு நிமிட‌ம் ஊறின‌ பிற‌கு த‌லையை அல‌சினா த‌லை முடி ப‌ள‌ப‌ள‌ப்பா இருக்கும்.



2.டீ குடிக்குற‌து எல்லாருக்குமே பிடிக்கும் , ஆனா அதே டீ டிகாஷ‌ன்‍ல‌ த‌லை முடியை அல‌சினாலும் முடி ப‌ள‌ப‌ள‌ப்பா இருக்கும்.

த‌லை முடி ப‌ற்றி பார்த்தாச்சு ஆனா முக‌ம் அழ‌காக‌ என்ன‌ செய்ய‌லாம்னு பாப்போமா.




1.லேவ‌ன்ட‌ர் ஆயிலை முக‌த்துக்கு தொட‌ர்ந்து ப‌ய‌ன் ப‌டுத்தி வ‌ந்தா முக‌த்துல‌ இருக்குற‌ க‌ருமையை ம‌றைய‌ வைக்கும்,

த‌லைமுடி ,முக‌த்தை ப‌ராம‌ரிச்சாலும் உட‌ல்ந‌ல‌ம் ரொம்ப‌ முக்கிய‌ம் இல்லையா,,



ஸ்லிம்மாவும்,சுறுசுருப்பா இருக்க‌னும்னு நீங்க‌ நினைச்சீங்க‌ன்னா, சாப்பிட‌ற‌துக்கு அரை ம‌ணி நேர‌த்துக்கு முன்னாடி ந‌ம்மால‌ முடிஞ்ச‌ அள‌வு வ‌ரைக்கும் த‌ண்ணீர் குடிக்க‌னும், ஏனா அப்ப‌டி ஆகும்போது சாப்பாடு அள‌வு குறையும் இல்லையா ,, எப்ப‌டியோ நான் சொல்ற‌ சில‌ விஷ‌ய‌ங்க‌ளையாவ‌து பின்ப‌ற்றினா ச‌ந்தோச‌ம் தான்,,

திங்கள், 19 ஏப்ரல், 2010

த‌யிர் சாத‌ம்



எத்த‌னை வ‌கையான‌ சாப்பாட‌ சாப்பிட்டாலும் த‌யிர் சாத‌த்துக்கு ஈடு இணை கிடைய‌வே கிடையாது,,

அதுவும் கிராம‌த்துல‌ எங‌ வீட்டு ப‌சுவோட‌ பாலுல‌ இருந்து எடுத்த‌ கெட்டியான‌ த‌யிரை கொண்டு அம்மா த‌யிர் சாத‌ம் செய்வாங்க‌ளே பாருங்க‌..அட‌டா..அமிர்த‌ம் .ம்..அதெல்லாம் ஒரு கால‌ம் போங்க‌.

ச‌ரி இப்ப‌ த‌யிர் சாத‌ம் வீட்டுல‌ சும்மா ஜில்லு'னு த‌யிர் சாத‌ம் ப‌ண்ண‌லாம்னு பாக்க‌லாமா..



தேவையான‌ பொருட்க‌ள்:

அரிசி -1க‌ப்
பால்- 1 க‌ப்
த‌யிர் -1/2 க‌ப்
கேர‌ட்,ஆப்பிள்,மாங்காய்,வெள்ள‌ரிக்காய்,திராட்சை,மாதுளை க‌ல‌வை -1/2 க‌ப்
உப்பு -தேவையான‌ அளாவு

தாளிக்க‌:

எண்ணெய் 2 ஸ்பூன்
க‌டுகு,உளுத்த‌ம் ப‌ருப்பு- 1/4 க‌ப்
க‌ட‌லை ப‌ருப்பு -1 ஸ்பூன்
இஞ்சித்துறுவ‌ல் -1 ஸ்பூன்
ப‌ச்ச‌ மிளகாய்- 2

செய்முறை
:

அரிசியை முத‌ல்ல‌ க‌ழைஞ்சு 1 க‌ப் பால்,ஒன்ற‌ரை க‌ப் த‌ண்ணீர் சேர்த்து குழைய‌ வேக‌ வெச்சு அதை இற‌க்கி சாத‌த்தை ம‌சிச்சுக்க‌னும்,ந‌ல்ல‌ சாத‌ம் ஆறின‌துக்க‌ப்புற‌மா உப்பும்,த‌யிரும் சேர்த்து க‌ல‌ந்துக்க‌னும்.


வாணலியை காய‌ வெச்சு எண்ணெய் விட்டு க‌டுகு, உளுத்த‌ம்ப‌ருப்பு, க‌ட‌லைப்ப‌ருப்பு, க‌ருவேப்பிலை சேர்த்து தாளிச்ச‌தும் இஞ்சித்துருவ‌ல்,ந‌ருக்கின‌ப‌ச்ச‌ மிள‌காய் சேர்த்து லேசா வ‌த‌க்கி அதை சாத‌த்துல‌ க‌ல‌ந்துக்க‌னும், இப்ப‌ கேர‌ட்,ஆப்பிள், மாங்காய், வெள்ள‌ரிக்காய்,திராட்சை ,மாதுளை க‌ல‌வையை க‌ல‌ந்தா அழ‌கான‌ டேஸ்டான‌ த‌யிர் சாத‌ம் ரெடி.மேலோட்ட‌மா ம‌ல்லித்த‌ழையை தூவினா இன்னும் அழ‌கு தான்,


சில‌‌ர் குழ‌ந்தைகளு‌க்கு ச‌ளி ‌பிடி‌க்கு‌ங்குற‌துனால‌ த‌யி‌ர் சாத‌ம் கொடு‌க்க மா‌ட்டா‌ங்க‌.
ஆனா‌ இப்ப‌ கோடை கால‌ம் எ‌ன்பதா‌ல குழ‌ந்தைகளு‌க்கு த‌யி‌ர் சாத‌ம் ஊ‌ட்டலா‌ம்.அதுக்கு என்ன‌ செய்ய‌னும்னா,த‌யிரை வாண‌லி‌யி‌ல் ஊ‌ற்‌றி அடு‌ப்‌பி‌ல் வெச்சு ம‌ஞ்ச‌ள் தூ‌ள், உ‌ப்பு சே‌ர்‌த்து லேசாக கொ‌தி‌ச்ச‌தும் அ‌தை சாத‌த்‌துல‌ ‌பிசை‌ஞ்சு ஊ‌ட்டலா‌ம் . சில‌ ச‌ம‌ய‌ங்க‌ள்ள‌
‌வீ‌ட்டி‌லேயே தயா‌ரி‌ச்ச‌ த‌யி‌ரி‌ல் ‌கொஞ்ச‌மா ச‌ர்‌க்கரை‌ப் போ‌ட்டு‌ ஒரு ‌கி‌ண்ண‌த்‌தி‌லே ஊ‌ற்‌றி கொடு‌த்தா‌ கொ‌ஞ்ச‌ம் கொ‌ஞ்சமாக குட்டி பிள்ளைங்க‌ சா‌ப்‌பிடுவா‌ங்க‌.