
தேவையான பொருட்கள்:
புதுசா பூத்த வேப்பம்பூ- 1 கிலோ
உளுத்தம் பருப்பு -1 கிலோ
காய்ந்த மிளகாய் -25
பெருஞ்சீரகம் -3 ஸ்பூன்
சின்ன வெங்காயம் -1/4 கிலோ
உப்பு -தேவையான அளவு
கருவேப்பிலை -1 கைப்பிடி
இஞ்சி -கொஞ்சம் பெரிய துண்டு
செய்முறை:
உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வெச்சு அதோட வத்தல்,பெருஞ்சீரகம்,உப்பு,இஞ்சி எல்லாம் சேர்த்து கர கரப்பா அரைக்கனும்,சின்ன வெங்காயத்தை பொடியா நறுக்கி அரச்ச மாவோட கலக்கனும்,மாவு வடை மாவு பதத்துல தான் இருக்கனும், தண்ணி அதிகமா இருக்கக் கூடாது, அதோட வேப்பம்பூவையும், கருவேப்பிலையையும் சேர்த்து பிசைஞ்சு பெரிய நெல்லிக்காய் அளவு மாவு எடுத்து,பாலித்தீன் பேப்பருல வடையா தட்டி நல்லா காய வைக்கனும்,நல்லா 4 நாளைக்கு காய வைக்கனும்,கசப்பு அவ்வளவா இருக்காது , டேஸ்ட் நல்ல வித்யாசமா இருக்கும்,சாம்பார்,ரச சாதத்துக்கு தொட்டுக்க நல்லா இருக்கும் இந்த வேப்பம் பூ வடகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக